"நீ பேனா வெச்சா, நான் உடைப்பேன்".. சீறிய சீமான்.. கருணாநிதிக்கு பேனா நினைவு சின்னம்: ஆணையம் ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த முதல்வர் கருணாநிதி நினைவாக, மெரினாவில் பேனா நினைவு சின்னம் அமைக்கும் திட்ட பணிகள் குறித்து இன்று விசாரணை நடத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக கடலில், 81 கோடி ரூபாயில், 137 அடி உயர பேனா சிலையை நிறுவ முடிவு செய்துள்ளது.. ஆனால், தமிழக அரசு எடுத்த இந்த முடிவை எதிர்த்து சுப்ரீம்பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அதில், மெரினா கடற்கரையின் சுற்றுச்சூழல் மற்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு சேதம் விளைவிக்காத வகையில், தமிழக அரசு மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

 கலைஞர் கருணாநிதி

கலைஞர் கருணாநிதி

கருணாநிதி நினைவிடம் அருகே மெரினா கடற்கரையில் சிலை அமைக்கும் அரசின் முடிவால் தமிழக கடலோரப் பகுதிகளில் உள்ள மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.. கடலோர ஒழுங்குமுறை மண்டலம்-IA மற்றும் கடலோர ஒழுங்குமுறை மண்டலம்-IVA மற்றும் மெரினா கடற்கரையின் கடல்வாழ் உயிரினங்களின் சுற்றுச்சூழல் அமைப்பை சேதப்படுத்தும்.. சென்னையில் இந்த நினைவுச் சின்னத்தை கட்டுவதற்கு போதுமான நிலம் உள்ளது.. ஆனால், கடலுக்குள் ஒரு நினைவுச்சின்னத்தைக் கட்டுகிறார்கள். இது மெரினா சுற்றுச்சூழல் மற்றும் கடல்வாழ் உயிரினங்களை பாதிக்கும்..

 மீனவ கிராமம்

மீனவ கிராமம்

அத்துடன், இந்த திட்டம் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கும் என்றும் இது கட்டப்படும்போது சுமார் 32 மீனவ கிராமங்கள் பாதிக்கப்படும் என்றும் என்றும் அந்த பொதுநல வழக்கில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது... இந்த திட்டத்துக்காக, கடலில், 92 ஆயிரத்து 43 சதுர அடி பரப்பு பயன்படுத்தப்பட உள்ள நிலையில், கடலோர மண்டல மேலாண்மைக்கான தேசிய ஆணைய உத்தரவுப்படி, தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம், ஜனவரி 31ல் பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தியது.

செயல்பாடுகள்

செயல்பாடுகள்


இதன் அடிப்படையில், விரிவான அறிக்கையை பொதுப்பணித்துறை தயாரித்திருக்கிறது.. இந்நிலையில், மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணைய கூட்டம், சென்னையில் இன்று நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. இந்த கூட்டத்தில், பேனா நினைவு சின்னம் குறித்த விஷயங்கள், விவாதிக்க பட்டியலிடப்பட்டிருப்பதாக தெரிகிறது.. இந்த திட்டத்தில் நடக்கும் பணிகள், ஆணைய உத்தரவு எந்த அளவில் செயல்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறித்து விசாரிக்கப்படும்.. ஆணைய முடிவு அடிப்படையில், அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 சீறிய சீமான்

சீறிய சீமான்

முன்னதாக, கடந்த பிப்ரவரி மாதம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் இது தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டத்தை நடத்தியிருந்தது.. அப்போது, இந்த திட்டத்துக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்ட நிலையில் பெரும் மோதலும் சலசலப்பும் ஏற்பட்டது. பேனாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் சீமான் பேசும்போது, கூட்டத்திற்கு வந்திருந்த திமுகவினர் கூச்சலிட்டு, அவரை பேச்சை நிறுத்தும்படி சொன்னார்கள்..

 பேனா வெச்சால் உடைப்பேன்

பேனா வெச்சால் உடைப்பேன்

அப்போது அவர்களிடம் சீமான், "உனக்கு எதைப் பற்றி அக்கறை இருந்திருக்கிறது? கடற்கரையில் புதைக்கவிட்டதே தவறு. இதில் பேனா நினைவுச் சின்னம் வேறு வைக்க வேண்டுமா? வேணும்னா, அறிவாலயத்தில் போய் வையுங்கள்... நினைவிடம் கட்டியிருக்கிறீர்களே, அதில் வையுங்கள், கடலுக்குள்ளதான் வைப்பாங்களாம். சும்மா, மீனவ சங்கம் என்ற பெயரில், அனைத்து மீனவ சங்கம், அகில இந்திய மீனவ சங்கம் என்ற பெயரில் இங்கு வந்துவிட்டு இதனால் ஒன்றும் பாதிப்பில்லை என்று எதையாவது பேசிக்கிட்டு. நீங்கள் பேனா வையுங்கள், ஒருநாள் நான் வந்து உடைக்கிறேன்.

 நீ பேனா வைப்பியா

நீ பேனா வைப்பியா

பள்ளிக்கூடத்தை சீரமைக்க காசு இல்லை, பேனா வைக்க காசு எங்கிருந்து வருகிறது? நீ போகச் சொன்னால் நான் போய்விடுவேனா? நாங்கள் கடலுக்குள் பேனா வைப்பதை எதிர்க்கிறோம், எதிர்க்கிறோம், எதிர்க்கிறோம். எனவே அதைத் தடுத்து நிறுத்தும் வரை கடுமையான போராட்டம் நடத்துவோம். இது உறுதி" என்று திடமாக சொல்லிய சீமான், சிலை வைத்தால், நான் வந்து உடைப்பேன் என்றும் கூறியிருந்தார். இதற்கு பிறகு, இந்த விவகாரம் ஓய்ந்துகிடந்த நிலையில், இன்றைய தினம் மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணைய கூட்டத்தில் இதுகுறித்து விவாதிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது, மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+