Karur Vijay: தவெக கரூர் கூட்ட நெரிசலில் இறந்த அந்த இருவருக்கு மட்டும் விஜய் நிவாரணம் வழங்காதது ஏன்?
சென்னை: தவெக கூட்ட நெரிசலில் சிக்கி பலியான 41 பேருக்கும் தலா ரூ 20 லட்சம் நிவாரணம் அளிக்கப்படும் என அறிவித்த நிலையில் நேற்றைய தினம் 39 பேருக்கு மட்டும் நிவாரணமானது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. ஆனால் மீதம் உள்ள இருவருக்கு நிவாரணம் வழங்கப்படாதது ஏன் என்ற கேள்வி எழுந்தது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக பிரச்சார பொதுக் கூட்டம் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி நடந்தது. இந்த கூட்டத்திற்கு வந்த விஜய்யின் முகத்தை பார்க்க மக்கள் முண்டியடித்தனர். மேலும் அந்த கூட்டத்திற்கு விஜய்யின் பெரிய சைஸிலான பிரச்சார வாகனம் அந்த கூட்டத்திற்குள் நுழைந்த போது இடம்விடுவதற்காக மக்கள் நெரிசல் ஏற்பட்டது.

அப்போது பலர் மூச்சுத்திணறி, கீழே விழுந்ததில் 41 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
இறந்த 41 பேரின் உடலுக்கும் முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி சீமான் உள்ளிட்டோர் நேரில் போய் அஞ்சலி செலுத்தினர். அது போல் பாமக தலைவர் அன்புமணி, தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா, மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் இறந்தவர்களின் உறவினர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர்.
கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிதியுதவியாக இறந்த 41 பேரின் குடும்பத்தினருக்கும் தலா ரூ 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அது போல் தவெக தலைவர் விஜய்யும் தலா ரூ 20 லட்சம் நிவாரணம் அறிவித்திருந்தார்.
ஆனால் விஜய், கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்றும் பார்க்கவில்லை. அவர்களுக்கு அறிவித்த நிவாரணத்தையும் அவர் வழங்கவில்லை. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் வீடியோ காலில் விஜய் பேசி ஆறுதல் தெரிவித்தார்.
அவர்களிடம் விஜய், "காவல் துறை அனுமதி கிடைத்தவுடன் விரைவில் வந்து உங்களை சந்திப்பேன்" என்றார். இதனால் மக்களை நேரில் சந்திக்கும் போது அவர்களிடம் ரூ 20 லட்சத்திற்கான காசோலையை விஜய் வழங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்றைய தினம் பாதிக்கப்பட்ட 41 பேரின் குடும்பத்தினருக்கும் ஆன்லைன் மூலம் ரூ 20 லட்சம் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது. 41 பேரில் 39 பேருக்கு மட்டும் நிவாரணமானது கிடைத்துவிட்டது.
இந்த நிலையில் மற்ற இருவருக்கு கிடைக்காதது ஏன் என கேட்ட போது, அவர்களின் குடும்பத்தினருக்கு யாருக்கு வழங்குவது என்ற சிக்கல் நீடிப்பதால், அவர்களுக்கு மட்டும் வழங்கப்படவில்லை. அந்த பிரச்சினை தீர்ந்ததும் வழங்குவோம் என தவெக சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் விஜய் இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: "என் நெஞ்சில் குடியிருக்கும் உங்களுக்கு, வணக்கம். கரூரில் ஏற்பட்ட தாங்க முடியாத வேதனையான நிகழ்வில் நம் குடும்ப உறவுகளை இழந்து தவிக்கிறோம். இந்தச் சூழலில் உங்களுக்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் எல்லா வகையிலும் இருப்போம் என்பதை மீண்டும் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம்.
சென்ற வாரம் உங்களுடனான நம் துக்கத்தைப் பகிர்ந்துகொள்ள மேற்கொண்ட காணொளி அழைப்பில் நாம் சொன்னது போலவே, நமது சந்திப்பிற்காக. அதற்கான சட்டரீதியான அனுமதி முன்னெடுப்புகளை எடுத்து வருகிறோம். அனுமதி கிடைத்ததும் நிச்சயமாகச் சந்திப்போம்.
இதனிடையே, நாம் ஏற்கனவே (28.9.2025 அன்று) அறிவித்தபடி குடும்ப நல நிதியாக ரூ.20 லட்சத்தை வங்கியின் RTGS வழியாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக (18.10.2025) அனுப்பி வைத்துள்ளோம். அதை நமது உதவிக் கரமாக ஏற்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இறைவன் அருளுடன் இந்தக் கடினமான தருணத்தைக் கடந்து வருவோம்" என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications