காசி தமிழ்ச் சங்கமம்- 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் 'அகத்திய முனிவர்' உடையில் நடைபயணம்!
சென்னை: காசி தமிழ்ச் சங்கமத்தை முன்னிட்டு அகத்திய முனிவர் நடைப்பயணம் சென்னையில் நடைபெற்றது. காசி தமிழ்ச் சங்கமத்தின் (KTS 3.0) 3-வது ஆண்டை முன்னிட்டு, அகத்திய முனிவர் போல உடை அணிந்து நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் சென்னையில் நடைபெற்ற நடை பயணத்தில் (வாக்கத்தான்) பங்கேற்றனர்.
இது தொடர்பாக மத்திய அரசு தெரிவித்துள்ளதாவது: காசி தமிழ்ச் சங்கமத்தை முன்னிட்டு அகத்திய முனிவர் நடைப்பயணம் சென்னையில் நடைபெற்றது. காசி தமிழ்ச் சங்கமத்தின் (KTS 3.0) 3-வது ஆண்டை முன்னிட்டு, அகத்திய முனிவர் போல உடை அணிந்து நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் சென்னையில் நடைபெற்ற நடைப்பயணத்தில் (வாக்கத்தான்) பங்கேற்றனர்.

மத்திய செம்மொழி தமிழாராய்ச்சி நிறுவனமும், சாஸ்திர நிகர்நிலைப் பல்கலைக்கழகமும் இணைந்து இந்த நடைப்பயணத்தை ஏற்பாடு செய்திருந்தன. சாந்திபனி வித்யாலயா, பிஎஸ் சீனியர், பிஎஸ்பிபி, பவன்ஸ் ராஜாஜி வித்யாஸ்ரம் ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த 4 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் இதில் பங்கேற்றனர்.
இந்திப் பிரச்சார சபாவில் தொடங்கி தி. நகரில் உள்ள அகத்திய முனிவர் ஆசிரம கோவிலில் முடிவடைந்த இந்த நடைப்பயணத்தில் அவர்கள் பங்கேற்றனர். பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் அகத்தியர் குறித்த அமர் சித்ரா கதா வெளியீட்டு நூல் பிரதி வழங்கப்பட்டது. மேலும் தரிசனத்திற்குப் பிறகு பிரசாதங்களும் வழங்கப்பட்டன.
காசி தமிழ்ச் சங்கமத்தின் 3-ம் ஆண்டின் (கேடிஎஸ் 3.0) கருப்பொருள் அகத்திய முனிவர் தொடர்பானதாகும். அகத்தியர் ஒரு தேசிய ஒருங்கிணைப்பாளர் என்ற பொருளில் இந்த மாணவர்கள், ஆசிரியர்கள், அமைப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
சாஸ்திரா பல்கலைக்கழக துணைவேந்தர் டாக்டர் எஸ் வைத்ய சுப்ரமணியன், சாஸ்திராவின் சென்னை இயக்குநர் டாக்டர் சுதா சேஷையன், சம்பந்தப்பட்ட பள்ளிகளின் ஆசிரியர்கள், பெற்றோர் உள்ளிட்டோரும் இந்த நடைப்பயணத்தில் பங்கேற்றனர். இவ்வாறு மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications