ரஜினி குறித்து ரியாஸ் ட்வீட்.. 'என் புரிதல் தவறென்றால் வருந்துகிறேன்'.. கஸ்தூரி விளக்கம்
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் உடல் நிலை குறித்து யாரும் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை என ரஜினியின் பிஆர்ஓ ரியாஸ் கே அகமத் கூறியதற்கு பதில் அளித்துள்ள நடிகை கஸ்தூரி நேற்று அமர் சார் அழைத்து பேசியது அவர் தனிப்பட்ட கருத்தாக எனக்கு தொனிக்கவில்லை. என் புரிதல் தவறென்றால் வருந்துகிறேன் என்று கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த்(வயது 70) சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். ரஜினி அவ்வப்போது அமெரிக்கா சென்று உடல் பரிசோதனை செய்து வந்தார். ஹைதராபத்தில் அண்ணாத்த படப்பிடிப்பில் பங்கேற்று நடிக்க வேண்டிய காட்சிகள் அனைத்தையும் முடித்து கொடுத்து விட்டு சென்னை திரும்பிய அவர் கடந்த 19-ந்தேதி அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

உடல் பரிசோதனை
அமெரிக்காவில் ரஜினிகாந்த் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொண்டார். அவருக்கு பல்வேறு உடல் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன.. மகள் ஐஸ்வர்யாவும் ரஜினிகாந்த் உடன் சென்றுள்ளார். ரஜினி அமெரிக்காவில் 3 வாரங்கள் தங்கி இருப்பார் என்று சொல்லப்பட்டது. ரஜினியும் ஐஸ்வர்யாவும் அமெரிக்காவில் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகின.

எப்படி ரஜினிக்கு மட்டும்
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றது குறித்து நடிகை கஸ்தூரி சில கேள்விகளை தனது ட்விட்டர் பக்கத்தில் எழுப்பி இருந்தார்.. அவர் தனது பதிவில், "மே முதல் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் (கொரோனா காரணமாக) இந்தியாவில் இருந்து நேரடி பயணத்தை அமெரிக்கா தடை செய்துள்ளது. மருத்துவ விதிவிலக்குகள் எதுவும் வழங்கப்படவில்லை. இந்த நேரத்தில் ரஜினிகாந்த் எப்படி, ஏன் பயணம் செய்தார்? அவர் திடீரென அரசியலில் இருந்து பின்வாங்கினார், இப்போது எப்படி இந்த பயணம் சாத்தியமானது ... தெளிவான தகவல்கள் இல்லை. ரஜினி சார் தயவு செய்து தெளிவுபடுத்துங்கள்.

ஏன் தெளிவு வேண்டும்
தெளிவுபடுத்த வேண்டும் என்று கூற காரணம் இருக்கிறது. ஏனெனில் அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் அல்லது படிக்கும் இந்தியர்கள் அமெரிக்காவுக்குத் திரும்ப அனுமதிக்கப்படுகிறது. அதுவும் மற்ற நாடுகளின் வழியாக பயணிக்கும் இந்தியர்கள் பயணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். எனவே ரஜினி பயண பிரச்சினை நிச்சயமாக ஒரு மர்மமாகும் ரஜினி இந்திய அரசிடம் இருந்து மருத்துவ விலக்கு பெற்றிருக்கலாம் என்று பலர் கூறுகிறார்கள்- இது இன்னும் கவலை அளிக்கிறது. இந்தியாவின் சிறந்த மருத்துவமனைகளுக்கு சிகிச்சையளிக்க முடியாத அளவிற்கு அவரது உடல்நிலையில் என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது? என்று பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

நாதர் கலகம்
இதனைத்தொடர்ந்து, நடிகர் ரஜினிக்கு மட்டும் அமெரிக்க செல்ல அனுமதி கிடைத்தது எப்படி? எனக் கேள்வி எழுப்பிய நடிகை கஸ்தூரி, அதற்கு பதில் கிடைத்ததாக தனது ட்விட்டர் பக்கத்தில் கூறினார். அந்த பதிவில் 'அலைபேசியில் அழைத்து விவரத்தை விளக்கினார்கள். ஆச்சரியம் கலந்த நன்றி! நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது. என் உள்மன கலக்கமும் முடிவுக்கு வந்தது. நல்ல செய்தி- நானே முதலில் சொல்கிறேன். பூரண நலமுடன் புது பொலிவுடன் 'தலைவரை' வரவேற்க தயாராகட்டும் தமிழகம்!' என்று கூறினார்.

யாரும் பேசவில்லை
இந்நிலையில் ரஜினி உடல் நலம் தொடர்பாக யாரும் எந்த விளக்கமும் கொடுக்கவில்லை என ரஜினியின் பிஆர்ஓ ரியாஸ் கே அகமத் கூறினார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'தலைவரோ, தலைவர் குடும்பத்திலிருந்தோ யாரும் பேசவில்லை, எந்த விதமான விளக்கமும் கொடுக்க வில்லை என்பது தான் நிஜம்' எனப் பதிவிட்டார்.

கருத்து வாபஸ்
இதன்பின்னர் நடிகை கஸ்தூரி தனது ட்விட்டர் பக்கத்தில், 'நேற்று அமர் சார் அழைத்து பேசியது அவர் தனிப்பட்ட கருத்தாக எனக்கு தொனிக்கவில்லை. என் புரிதல் தவறென்றால் வருந்துகிறேன். இடம் பொருள் கருதி பெயரை சொல்லாமல் பொது பதிவிட்டது பொய் என திரிந்தது மேலதிக வருத்தம். தவறு புரிதலில். கேள்வியில் அல்ல' என்று பதிவிட்டுள்ளார்.
-
உன் நடிப்பு பிடிக்காதுன்னு பாரதிராஜா சொல்லுவாரு.. கடைசிவரை நான் நினைச்சது நடக்கல! ரஜினிகாந்த் உருக்கம் -
கடலோர மக்களுக்கு குடிநீர் இல்லை.. ஏரிகளை தகர்த்தது அமெரிக்கா.. ஈரான் பரபரப்பு குற்றச்சாட்டு -
ஹார்முஸ்-இல் சுட்டு வீழ்த்தப்பட்ட ஹெலிகாப்டர்.. டிரம்ப் கோபம்! ஈரான் மீது அமெரிக்கா பதிலடி தாக்குதல் -
"பதிலடி கொடுப்போம்.." நள்ளிரவில் ஈரானுக்கு டிரம்ப் கொடுத்த எச்சரிக்கை.. மீண்டும் வெடிக்க போகுது போர் -
"இந்தியாவில் இப்படி வாழ முடியுமா? கேள்வி எழுப்பிய பிரபலத்திற்கு இந்தியர்கள் தந்த தரமான பதிலடி -
அவசரமாக தரையிறங்கிய ஜெட் விமானம்.. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த துயரம்! ஷாக் வீடியோ! -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு!












Click it and Unblock the Notifications