சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"பாசமும் வெள்ளந்தி நேசமும்".. எம்பி தமிழச்சிக்கு மீனவ பெண்கள் அளித்த விருந்து.. நெகிழ்ச்சி பின்னணி!

Google Oneindia Tamil News

சென்னை: காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டதிற்கு அனுமதி அளிக்க மாட்டோம் என்று தமிழ்நாடு அரசு அளித்த வாக்குறுதிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மீனவ கிராம மக்கள் திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோருக்கு மீன் உணவு விருந்து அளித்தனர்.

எண்ணூரை அடுத்த காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்க திட்டதிற்கு அப்பகுதி மீனவ மக்கள் எதிர்ப்பு தெரிவித்து 2019ல் இருந்து போராடி வருகிறார்கள். இந்த துறைமுகத்தை 2018ல் அதானி துறைமுக சிறப்புப் பொருளாதார மண்டலம் வாங்கிய பின்புதான் சர்ச்சையானது.

ரேஸில் 6 பேர்.. அவரையும் விட்டு வைக்காத சிஎஸ்கே மேலிடம்.. தோனிக்கு பின் கேப்டனாக போவது யார்? ரேஸில் 6 பேர்.. அவரையும் விட்டு வைக்காத சிஎஸ்கே மேலிடம்.. தோனிக்கு பின் கேப்டனாக போவது யார்?

இந்த துறைமுகத்தை 3 ஆயிரம் ஹெக்டேர் கொண்ட துறைமுகமாக விரிவாக்கம் செய்ய அதானி துறைமுக சிறப்புப் பொருளாதார மண்டலம் அனுமதி கோரியது. அதாவது தற்போது இருப்பதை விட 10 மடங்கு அதிகமாக சரக்குகளை கையாளும் வகையில் இந்த பழவேற்காடு காட்டுப்பள்ளி துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய அதானி துறைமுக சிறப்புப் பொருளாதார மண்டலம் முடிவு செய்தது.

சிக்கல்

சிக்கல்

இதை அங்கு இருக்கும் மீனவ மக்கள் எதிர்த்து வருகிறார்கள். மிக முக்கியமாக பழவேற்காடு பகுதியில் இருக்கும் மீனவ கிராம பெண்கள் குழுவாக இணைந்து இதற்கு எதிராக போராடி வருகிறார்கள். மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, பழவேற்காடு, பொன்னேரி பகுதிகளில் இவர் மீன் விற்பனை தொழிலில் ஈடுப்பட்டு வருகிறார்கள். இவர்கள் 'இறால் கருக்கல்' என்ற பெயரில் உணவு சமைத்து போராடும் போராட்ட முறையை கையில் எடுத்துள்ளனர்.

மக்கள்

மக்கள்

இதை அங்கு இருக்கும் மீனவ மக்கள் எதிர்த்து வருகிறார்கள். மிக முக்கியமாக பழவேற்காடு பகுதியில் இருக்கும் மீனவ கிராம பெண்கள் குழுவாக இணைந்து இதற்கு எதிராக போராடி வருகிறார்கள். மீஞ்சூர், கும்மிடிப்பூண்டி, பழவேற்காடு, பொன்னேரி பகுதிகளில் இவர் மீன் விற்பனை தொழிலில் ஈடுப்பட்டு வருகிறார்கள். இவர்கள் 'இறால் கருக்கல்' என்ற பெயரில் உணவு சமைத்து போராடும் போராட்ட முறையை கையில் எடுத்துள்ளனர்.

பாராட்டு

பாராட்டு

மீன், இறால் உள்ளிட்ட கடல் உணவுகளை சமைத்து வித்தியாசமான போராட்ட முறையை கையாண்டு வருகிறார்கள். மீனவர்கள் அங்கு அதானி துறைமுக திட்டத்திற்கு எதிராக முன்னெடுக்கும் போராட்டங்களில் இது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான் தமிழ்நாட்டில் திமுக கட்சி தனது தேர்தல் அறிக்கையில் காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்கு அனுமதி தர மாட்டோம் என்று வாக்குறுதி அளித்தது.

வாக்குறுதி

வாக்குறுதி

இந்த வாக்குறுதியை தொடர்ந்து தற்போது தேர்தலில் வென்று ஆளும் கட்சியாக பொருட்பேற்றுள்ள திமுக அரசுக்கு அப்பகுதி மீனவ பெண்கள் நன்றி தெரிவித்தனர். திமுகவின் வாக்குறுதிக்கு நன்றி தெரிவித்து 'இறால் கருக்கல்' போராட்டத்தின் ஒரு பகுதியாக திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன், காங்கிரஸ் எம்பி கே ஜெயக்குமார் ஆகியோருக்கு விருந்து கொடுத்தனர். தமிழ்நாடு அரசின் வாக்குறுதிக்கு நன்றி தெரிவித்தது இவர்களுக்கு மீன் விருந்து கொடுத்தனர்.

தமிழச்சி

தமிழச்சி

இது தொடர்பாக திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் செய்துள்ள ட்வீட்டில், பழவேற்காடு - அதானி துறைமுக விரிவாக்கத் திட்டத்தை ரத்து செய்வதாக உறுதியளித்த, தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், இன்று (16.10.2021), பழவேற்காடு மீனவ கிராமப் பெண்கள் அளித்த பாரம்பரிய மீன் உணவு விருந்தில், திருவள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் எம்பி, , பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் திரு. துறை சந்திரசேகர் ஆகியோருடன் கலந்துகொண்டேன்.

கடல் உணவு

கடல் உணவு

அருமையான கடல் உணவு வகைகளைத் தாமே தயாரித்து அறுசுவை விருந்தளித்ததோடு ஓர் அழகான புடவையையும் எனக்குப் பரிசளித்தனர் (அங்கேயே அதனை அணிந்து மகிழ்ந்தேன்). அதானி துறைமுக விரிவாக்க முன்மொழிவு எங்கள் தலைமேல் ஒரு வாள் போல் தொங்கிக் கொண்டிருந்தது; அதனை ரத்துசெய்து, எங்கள் வாழ்வாதாரத்தையும் வாழ்விடங்களையும் தமிழ்நாடு அரசு பாதுகாக்கும் என்று நாங்கள் இப்போது நிம்மதியாக இருக்கிறோம்.

நிம்மதி

நிம்மதி

இந்த விருந்து மூலம் தமிழ்நாடு அரசுக்கு எங்களது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்" என அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். மறக்கமுடியாத இவ்விருந்தின் அசைபோடும் சுவையில் அம் மக்களின் பாசமும் வெள்ளந்தி நேசமும் அடி நாவில் இன்னமும் ருசிக்கின்றது.

English summary
Kattupalli Port Expansion: Fishing village women thanked DMK and party MP Thamizhachi Thangapandiyan for not allowing the project.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X