கட்டுவிரியன் பாம்பு முதல்வரின் சீட் கிட்ட.. டக்னு வெடித்த டயர்: காப்பாற்றியது முருகன்: இந்து முன்னணி
சென்னை: திருப்பரங்குன்றம் கோயில் விவகாரத்தில் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அப்பீல் பதிவு செய்யப்பட்டுள்ளது... ஆனால் விசாரணை தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. தேதி அறிவிக்கும் வரை உயர்நீதிமன்ற தீர்ப்பே நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் இந்து மக்கள் கட்சி தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தி உள்ளது.
முதல்வர் ஸ்டாலின் கடந்த 7ம் தேதி திண்டுக்கல் வேலுநாச்சியார் வளாகத்தில் நடைபெற்ற அரசு விழாவை முடித்துகொண்டு, தனது காரில் மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தார்.

கார் டயர் வெடித்து
முதல்வர் காரின் முன்புறமும், பின்பிறமும் பாதுகாப்பு படை வீரர்கள் காரில் சென்று கொண்டிருந்தனர். ஆஸ்டின்பட்டி அருகே சுமார் 100 கி.மீ வேகத்தில் கார் சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென அதன் டயர் பயங்கர சத்தத்துடன் வெடித்தது. இதனால் டிரைவர் உடனடியாக காரை நிறுத்தினார். மற்ற வாகனங்களில் வந்த பாதுகாவலர்களும் உடனே ஓடி வந்தனர்.
ஓட்டுநர் உடனடியாக காரை நிறுத்தியதால் நல்ல வேளையாக முதல்வர் ஸ்டாலினுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் வேறு ஒரு காரில் ஏறி மதுரைக்கு புறப்பட்டு சென்றார். முதல்வர் சென்ற காரின் டயரின் வெடித்து நடுரோட்டில் நின்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கட்டுவிரியன் பாம்பு
அதேபோல 10 நாட்களுக்கு முன்பு திருநெல்வேலியில் முதலமைச்சர் பங்கேற்ற விழா மேடையில் கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது..
முதல்வர் ஸ்டாலின் வருவதற்கு முன்பாக, விழா மேடையில் ஏராளமான தூய்மைப் பணியாளர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அலங்காரத்துக்காக வைக்கப்பட்டிருந்த ஒரு பூவுக்குள் மறைந்திருந்த கொடிய விஷம் கொண்ட கட்டுவிரியன் பாம்பு, தூய்மை பணியாளர் கண்ணன் என்பவரை கண்ணிமைக்கும் நேரத்தில் கையில் கடித்தது. உடனடியாக அவர் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் முதல்வர் நாற்காலி அருகிலேயே மேடையில் பாம்பு கிடந்ததுபெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது..
ஸ்டாலின் மனைவி
மேற்கூறிய 2 சம்பவங்களையும் இப்போது இந்து முன்னணியின் காடேஸ்வரா சுப்பிரமணியம் நினைவூட்டி நிகழ்வு ஒன்றில் பேசியிருக்கிறார்... திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இந்து முன்னணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் பேசியதாவது:
தமிழகத்தில் இன்று இருக்கும் அரசாங்கம் இந்துக்களுக்கு எதிராக உள்ளது. இந்து கோவில் என்றாலே அதிகாரிகளும் மற்றும் அரசாங்கம் வெறுப்பை காட்டுகின்றார்கள்..,
திருப்பரங்குன்றம் தீர்ப்பு
திருப்பூர் பெருமாநல்லூர் அருகே குமரன் குன்றில் பழமையான முருகன் விக்கிரம் இருந்தது. இருப்பினும் அராஜகமான முறையில் அதனை எடுத்துள்ளனர். இந்த செயலை கண்டித்து போராட்டம் நடத்தவுள்ளோம்.
திருப்பரங்குன்றத்தில் இந்த அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. முருகன் அதற்கு தக்க பாடம் கொடுப்பார். முதலமைச்சர் பயணம் செய்த காரின் டயர் வெடித்தது முருகன் அவருக்கு எச்சரிக்கை கொடுத்துள்ளார்.
அதேபோல் அவரது சேரில் பாம்பு ஒன்று இருந்துள்ளது. அவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். அவரது துணைவியார் சாமி கும்பிடுவதால் அவர் தப்பித்து வருகிறார்... திருப்பறங்குன்ற தீர்ப்பு நல்ல தீர்ப்பு முருக பக்தர்களுக்கு நல்ல தீர்ப்பாக இருக்கும்" என்றார்,












Click it and Unblock the Notifications