தண்டவாளத்தில் கழற்றப்பட்ட "9 நட்டுகள்.." கவரப்பேட்டை ரயில் விபத்தில் திடுக்கிடும் தகவல்!
சென்னை: கவரப்பேட்டை ரயில் விபத்து பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தண்டவாளத்தில் நட்டுகள் கழற்றப்பட்டதே விபத்துக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. பொன்னேரியில் 6 நட்டுகளும், கவரப்பேட்டையில் 3 நட்டுகளும் தண்டவாளத்தில் கழற்றப்பட்டு இருந்தது தற்போது தெரியவந்துள்ளது. இது தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் மைசூரில் இருந்து பீகார் மாநிலம் தர்பங்காவுக்கு பாகுமதி எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் மைசூரில் இருந்து புறப்பட்டு பெங்களூர் வழியாக ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், சென்னை சென்டிரல் வழியாக தர்பங்கா நோக்கி செல்லும். கடந்த 11 ஆம் தேதி வழக்கம் போல பாகுமதி எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்ற போது, சரக்கு ரயில் மோதி விபத்து ஏற்பட்டது.

மெயின் வழியில் செல்ல வேண்டிய பாகுமதி எக்ஸ்பிரஸ் லூப் லைனில் சென்றதே இந்த விபத்துக்கு காரணமாக இருந்தது. இந்த விபத்தில், 19 பயணிகள் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக யாரும் உயிரிழக்கவில்லை. அண்மைக் காலமாகவே ரயில் விபத்து சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், பாகுமதி எக்ஸ்பிரஸ் ரயில் சரக்கு ரயில் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பயணிகள் மத்தியில் அதிரச்சியை ஏற்படுத்தியது.
ரயில் விபத்துக்கு நாச வேலை காரணமாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்ததால், தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்தி வருகிறது. அதில், விபத்து நடந்த இடத்தில் இருந்த 'சுவிட்ச் பாயிண்ட்' போல்டு மற்றும் நட்டுகள் மாயமாகி இருந்தது தெரியவந்தது. ரயில்வே போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில், நட்டு போல்ட்டுகள் கழற்றப்பட்டதே விபத்திற்கு காரணம் என்ற திடுக்கிடும் தகவல் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
ரயில் நிலைய மேலாளர், சிக்னல் ஊழியர்கள், தொழில் நுட்ப பணியாளர்கள் உள்ளிட்ட 15 பேரிடம் விசாரணை நடத்தியுள்ளனர். இதில் தண்டவாளத்தில் நட்டு, போல்ட்டுகள் கழற்றப்பட்டதும், குறிப்பாக கவரப்பேட்டையில் 3 நட்டுகளும், பொன்னேரியில் 6 நட்டுகளும் கழற்றப்பட்டது தெரியவந்துள்ளது.
நட்டுகள் கழற்றப்பட்டதால் இரண்டு தண்டவாளங்களை மாற்றுவதில் சிக்கல் இருந்ததாகவும், இதனால் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாகவும் கூறப்படுகிறது. விபத்தின் தீவிரத்தை குறைக்கும் வகையில் பாகுமதி எக்ஸ்பிரஸ் ரயில் வடிவமைக்கப்பட்டு இருந்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
அமைச்சர் ராஜ்மோகன் கையால் பட்டம் வாங்க மறுத்து மாணவர் செய்த செயல்! சென்னை கல்லூரியில் நடந்த பரபரப்பு -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மெரினா கடற்கரைக்கு அடியில் அதிசயம்! சென்னை மெட்ரோ 2ம் கட்டத்தில் மாஸ்: லைட்ஹவுஸ் நிலையம் உருவாகிறது -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
நிலத்தை உடனே கைப்பற்ற வேண்டும்.. விஜய் வெளியிட்ட புது உத்தரவு.. 15 திட்டங்கள் 'Waiting'! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications