முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை டிஸ்சார்ஜ்.. ஆனாலும் ஓய்வு தேவை.. காவேரி மருத்துவமனை அறிக்கை!
சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குணமடைந்துள்ளதாகவும், நாளை அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 12ம் தேதி கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் பக்கத்தில், இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம் என பதிவிட்டிருந்தார்.
இதனைத்தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் காவேரி மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே உடற்சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்ததால் வைரஸ் உறுதி செய்யப்பட்டு தனிமைப்படுத்திக் கொண்டதாக அவர் தெரிவித்திருந்தார். இதனால் சிடி ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனைகளுக்காக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை மருத்துவர்கள் தினமும் காலை, மாலை இருவேளையும் அவரது உடல்நிலையை கண்காணித்து தேவையான மாத்திரைகளை வழங்கி வந்தனர். அதே முதலமைச்சரின் உடல்நிலை குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் அறிக்கைகளும் வெளியிடப்பட்டு வந்தன.
இந்தநிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முழுமையாக குணமடைந்தார். இதனால் அவர் நாளை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என காவேரி மருத்துவமனை அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அதேபோல் இன்னும் ஒரு வாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications