ஆபாசகூத்து.. 'கைதேர்ந்த' கேடி விஜி என்கிற விஜயலட்சுமி! முகநூலில் வெளுத்து வாங்கிய கவிஞர் தாமரை!
சென்னை : கோவையில் திருமணமான 2 மாதத்தில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இளைஞரின் மரணத்திற்கு தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றும் விஜி என்ற விஜி பழனிசாமி தான் காரணம் எனவும், இவர்தான் தனது வாழ்க்கையிலும் விளையாடியவர் என கவிஞர் தாமரை முகநூலில் பதிவிட்டிருப்பது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
கோவை சூலூர் அடுத்த தென்னம்பாளையத்தை சேர்ந்தவர் ரத்னசீலன். தனியார் நிறுவன ஊழியரான இவருக்கு ஏற்கனவே இரண்டு முறை திருமணம் முடிந்த விஜயலட்சுமி என்ற பெண்ணுடன் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது.
இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் அவரது மனைவி கோபித்துக் கொண்டு பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

இளைஞர் தற்கொலை
இதனால் மனமுடைந்த ரத்தினசீலன் விஷம் குடித்துள்ளார். இதனைக் கண்ட அவரது தந்தை முத்துக்குமார் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி பரிதமாக உயிரிழந்தார். இது குறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ரத்தினசீலனின் தற்கொலைக்கு விஜி பழனிச்சாமி தான் காரணம் என ஆதாரங்களுடன் அவரது பெற்றோர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பரபரப்பு புகார் ஒன்றினை அளித்தனர்.

விஜி பழனிச்சாமி
ஏற்கனவே இரண்டு முறை திருமணமான விஜி பழனிச்சாமி விவாகரத்து செய்யாமல் இரண்டாவதாக தனது மகனை திருமணம் செய்து கொண்டதாகவும் தொடர்ந்து அவரை மனரீதியாகவும் பணரீதியாகவும் விஜி துன்புறுத்தியதாகவும் இதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர் புகார் தெரிவித்திருக்கின்றனர். இது தொடர்பாக 40க்கும் மேற்பட்ட ஆடியோ வீடியோ ஆதாரங்களும் கோவை காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. தன்னை யாரும் இல்லா அனாதை என அறிமுகப்படுத்திக் கொண்ட விஜி இன்ஸ்டாகிராம் மூலம் ரத்தின சீலனுடன் பழகி இருக்கிறார்.

கவிஞர் தாமரை
இதை எடுத்து திருமணம் செய்து கொண்டு அவரை பணம் கேட்டு தொந்தரவு செய்ததாகவும் இதன் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தற்போது சிக்கலில் சிக்கி இருக்கும் விஜி என்ற விஜயலட்சுமியால் தானும் பாதிக்கப்பட்டு இருப்பதாக பிரபல கவிஞரான தாமரை தனது பேஸ்புக்கில் பதிவிட்டு இருக்கிறார். பிரபல தமிழ் தேசிய செயல்பாட்டாளரான தியாகுவுக்கும் கவிஞர் தாமரைக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு விரிசல் ஏற்பட்டது. இதற்கு காரணம் விஜயலட்சுமி தான் எனவும் தற்போது தற்கொலை புகாரில் சிக்கி இருப்பதும் அவர்தான் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்தி இருக்கிறார் கவிஞர் தாமரை.

முகநூல் பதிவு
இது தொடர்பாக தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் அவர்," விஜி என்கிற விஜயலட்சுமி என்கிற விஜிஸ் பழனிச்சாமி என்கிற ஒரு 'கைதேர்ந்த' கேடி அம்பலப்படுகிறாள். இதுவரை இந்தப் பெண்ணின் பெயரை நான் பொதுவெளியில் உச்சரித்ததில்லை. வேறு ஒரு விதயத்தில் சிக்கி, தானாக மாட்டியதால் இப்போது வெளியிடுகிறேன். 15 ஆண்டுகளாக இவள் ஆடிய ஆட்டத்தில் சிக்குண்டு வாழ்வை, வாழ்வாதாரத்தை, உடல்நலத்தை, மனநலத்தை இழந்தவர்கள் ஏராளமானோர்.

அப்பாவி இளைஞன்
கடைசியாக, கோவையில் தன்னை விட ஏழு வயது குறைந்த திருணமாகாத ஓர் அப்பாவி இளைஞனை ஏமாற்றித் திருமணம் செய்து, அச்சுறுத்தி, தற்கொலை செய்து கொள்ள வைத்து விட்டாள். அவனது குடும்பம் தத்தளித்துக் கதறுகிறது. இவளுக்கு இன்னும் தன் முதல் கணவன் சண்முகசுந்தரத்தோடு விவாகரத்து ஆகவில்லை. இப்போதும் வெள்ளக்கோவில் போகும்போது அவரோடு குடும்பமாகத்தான் இருக்கிறாள். என்னை யாரும் தொட முடியாது என்று அடிக்கடி மார்தட்டிச் சொல்பவள்.

தியாகு
சரி, எதற்காக நான் இவளைப் பற்றிப் பேச வேண்டும் ?. அது ஒன்றுமில்லை, என்னைவிட யார் இவளைப் பற்றி ஆதாரத்தோடு பேச முடியும் ? ஆம், 2012 இல் தியாகு ஒரு பெண்ணோடு 'ஓடிப் போனார்' என்று அடிக்கடி சொல்வேனே, 'அந்தப் பெண்' சாட்சாத் இந்த விஜயலட்சுமியேதான் ! 2011இல் தொடங்கி 2013 வரை இருவரும் அடித்த ஆபாசக்கூத்து குடும்பம், தாய்த்தமிழ்ப்பள்ளி, இயக்கம், பொதுவாழ்க்கை என அனைத்தையும் குலைத்துப் போட்டது. அன்றைக்கே இருவரையும் அம்பலப்படுத்தி வெளுத்து விட்டிருந்தால், இன்றைக்கு இவ்வளவு தூரம் வந்திருக்காது.

ஆபாச கூத்து
எப்படியோ பலநாள் திருடி இன்று அகப்பட்டாள். பத்தாம் வகுப்பைத் தாண்டாத இவள் பத்தாண்டுகளில் இவ்வளவு உயரத்தைத் தொட்ட கதையைப் பார்க்கலாமா ? எல்லா அயோக்கியத்தனங்களிலும் எச்சரிக்கையாக இருக்கும் தியாகு, இவள் விதயத்தில் மட்டும் காப்புகளை மறந்து மாட்டி வீழ்ந்த கதையையும் சேர்த்துக் கொள்வோமா ? என்னுடைய வேதனை என்னவென்றால், பாடல்களில்கூட அநாகரீகத்தை அனுமதிக்காத நான் இந்த 'ஆபாசக்கூத்தை' என் மைநா (பேனா)வால் எழுத வேண்டி நேர்கிறதே ! இனி எவரும் இதுபோன்ற மோசடிகளில் சிக்கக் கூடாது என்பதற்காக தியாகு, விஜயலட்சுமி விவகாரம் வெளிப்படையாகப் பேசப்பட வேண்டும்' என கூறியிருக்கிறார். இதனால் இந்த விவகாரம் மேலும் சூடுபிடித்திருக்கிறது.
-
சென்னையின் தலையெழுத்தை மாற்றும் ப்ராஜெக்ட்.. ரெடியாகும் 'ரூட் மேப்'... எகிறப்போகும் வேகம்! -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
'மிஷன் இம்பாசிபிள்.. மெரினா டூ மடிப்பாக்கம்... பறக்கும் சென்னை.. தரம் தெரியாமல் மாறப்போகிறது! -
IT JOBS: அனுபவம் வேண்டாம்.. டிகிரி இருந்தாலே போதும்.. Accenture-ல் குவிந்திருக்கும் வேலைவாய்ப்பு -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா!












Click it and Unblock the Notifications