"அறிந்தே செய்யும் அநீதி.. மத்திய அரசு மாண்பு தவறிவிட்டது!" பட்ஜெட் பற்றி கவிஞர் வைரமுத்து விமர்சனம்
சென்னை: கடந்த வாரம் மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாகப் பலரும் சாடி வரும் நிலையில், இது தொடர்பாகக் கவிஞர் வைரமுத்து விமர்சித்துள்ளார். மத்திய அரசு மாண்பு தவறிவிட்டதாக விமர்சித்துள்ள அவர், திருக்குறளைக் குறிப்பிட்டு விமர்சித்துள்ளார்.
மத்திய பட்ஜெட் கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இருப்பினும், இந்தப் பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கு எந்தவொரு திட்டமும் இல்லை என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.

அதேபோல வழக்கமாக மத்திய பட்ஜெட்டில் எப்போதும் ஒரு திருக்குறள் இடம்பெற்று இருக்கும். ஆனால், இந்த முறை திருக்குறள் எதுவும் இல்லை. இதையும் பலரும் குறிப்பிட்டு விமர்சித்து வருகிறார்கள். இதற்கிடையே இப்போது இதைக் கவிஞர் வைரமுத்து விமர்சித்துள்ளார்.
ஸ்விட்சர்லாந்தில் துப்பாக்கியுடன் வைரமுத்து! கவிதை போர் வெடிக்கட்டும்! நெட்டிசன்கள் கருத்து
விமர்சனம்: இது தொடர்பாகக் கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் பக்கத்தில், "ஒன்றிய அரசின்
நிதிநிலை அறிக்கையில்
உரிமையும் நியாயமும்
தேவையும் உள்ள தமிழ்நாடு
போகிற போக்கில்
புறக்கணிக்கப்பட்டிருக்கிறது
இது
அறிந்தே செய்யும் அநீதி
தனக்கு எதிராகக்
குடைபிடித்தவனுக்கும்
சேர்த்தே பொழிவதுதான்
மழையின் மாண்பு
மழை
மாண்பு தவறிவிட்டது
நிதிநிலை அறிக்கையில்
குறள் ஒன்று கூறுவது
எழுதாத மரபு.
இவ்வாண்டு விடுபட்டுள்ளது
எழுத வேண்டிய குறள்
என்ன தெரியுமா?
“பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல்
நூலோர்
தொகுத்தவற்றுள் எல்லாம் தலை”
என்று அவர் பதிவிட்டுள்ளார்.
அர்த்தம் என்ன: அதாவது இருப்போர் இல்லாதோர் என்றில்லாமல், கிடைத்ததைப் பகிர்ந்துகொண்டு, எல்லா உயிர்களும் வாழ வேண்டும் என்ற சமநிலைக் கொள்கைக்கு ஈடானது வேறு எதுவுமே இல்லை என்பதே இந்த குறளின் பொருளாகும். அவரது ட்வீட் இப்போது பலரும் பகிர்ந்து வருகின்றனர்.
-
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
ஆக்ஷனில் இறங்கிய தமிழ்நாடு அரசு.. மதுரையில் 11 கல் குவாரிகள் மூடல்! வெளிச்சத்திற்கு வந்த விதி மீறல்! -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications