சென்னை ஹோட்டலில் ரூம் எடுத்து தங்கிய மலையாள நடிகை.. கதவை தட்டிய ரூம் பாய்! பரபரத்த தி.நகர்
சென்னை: சென்னை தி நகரில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த 20 வயது இளம் நடிகையிடம் ஓட்டல் ஊழியரே அத்துமீற முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை தங்கியிருந்த அறையில் இண்டர்காம் வேலை செய்யாததால் அதை சரி செய்வதற்காக வந்த ஓட்டல் ஊழியர் திடீரென நடிகையை நெருங்கி கட்டிப்பிடிக்க முயன்றதால், பயந்து போன நடிகை போலீசிடம் போன் செய்துள்ளார்.
இதன் பேரில் ஹோட்டலுக்கு வந்த போலீசார் நடிகையை கட்டிப்பிடிக்க முயன்ற ஊழியரை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

ரூம் எடுத்து தங்கிய கேரள நடிகை
சென்னை தி நகர் தாமஸ் சாலையில் இருக்கும் தனியார் ஓட்டல் ஒன்றிற்கு கேரளா மாநிலம் எர்ணாகுளத்தை சேர்ந்த 26 வயது இளம் நடிகை ஒருவர் அறை எடுத்து தங்கியுள்ளார். அப்போது அவர் உணவு ஆர்டர் செய்வதற்காக தனது அறையில் இருந்த இண்டர்காம் போன் மூலம் வரவேற்பு அறையை தொடர்பு கொண்டார்.
ஆனால் போன் ஒர்க் ஆகவில்லை. இதனால் கீழே வரவேற்பு அறைக்கு சென்ற அவர் இண்டர்காம் ஒர்க் ஆகாதது குறித்து கூறினார். இதையடுத்து ஓட்டல் நிர்வாகத்தினர் அங்கு ஊழியராக பணிபுரிந்து வந்த கல்லூரி மாணவர் ஒருவரை நடிகையின் ரூமுக்கு அனுப்பியுள்ளனர். சென்னை ஆலந்தூரை சேர்ந்த 20 வயது இளைஞரான ஊழியர் கல்லூரியில் படித்து வருகிறார்.
நெருங்கி வந்து கட்டிப்பிடிக்க முயற்சி
கடந்த 6 மாதங்களாக வேலை செய்து வருகிறாராம். நடிகை தங்கியிருந்த ரூமிற்கு வந்த அவர் இண்டர்காமை சரி செய்துள்ளார். பிறகு அங்கிருந்து செல்லாமல் திடீரென நடிகையை நெருங்கி சென்று கட்டிப்பிடிக்க முயன்றுள்ளார். இதனால் நடிகை அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் கல்லூரி மாணவரை பிடித்து எச்சரித்து இருக்கிறார்.
ஆனாலும் அந்த வாலிபர் நீங்கள் நடிகை தானே? உங்களை ஒரே ஒரு முறை நான் கட்டிப் பிடித்துக் கொள்கிறேன் என்று மாறி மாறி கேட்டு தொல்லை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் பயந்து போன நடிகை உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்.
போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை
இதன்பேரில் அங்கு வந்த பாண்டி பஜார் போலீசார் கல்லூரி மாணவரை பிடித்து விசாரித்தனர். அப்போது நான் அப்படி செய்யவே இல்லை என கல்லூரி மாணவர் மறுத்து இருக்கிறார். இதையடுத்து போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தினர். நடிகையையும் புகார் கொடுப்பதற்காக காவல் நிலையம் சென்றார்.
அப்போது அந்த இளைஞர், "நடிகை தங்கி இருந்த ஓட்டல் அறைக்கு நான் சென்றது உண்மைதான். அறையில் இருந்த இண்டர்காம் போனை சரி செய்தேன். பிறகு உணவு ஆர்டர் எடுத்துக் கொண்டு விட்டு கீழே வந்து விட்டேன்" என கூறியுள்ளார். தொடர்ந்து கேரள நடிகையும் அந்த இளைஞர் மீது எழுத்துப் பூர்வமாக புகார் எதுவும் தெரிவிக்கவில்லை.
இதையடுத்து நாங்கள் அழைக்கும் போது விசாரணைக்கு வர வேண்டும் என கல்லூரி மாணவரிடம் கூறிய போலீசார் அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். ஹோட்டலில் தங்கியிருந்த நடிகையிடம் ஓட்டல் ஊழியரே அத்துமீற முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
பிளஸ் 2 முடிச்சிருக்கீங்களா! Apprentice training -ல் சேருங்க! மாதம் ரூ 18 ஆயிரம் ஊக்கத்தொகை பெறுங்க! -
சென்னையில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை.. பல்லாவரம் டூ ராமாபுரம்.. முழு விவரம் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
பயணிகள் கவனத்திற்கு.. சென்னை கோட்டத்தில் பராமரிப்பு பணி.. இன்றுமுதல் வைகை உள்ளிட்ட 7 ரயில்கள் தாமதம் -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்?












Click it and Unblock the Notifications