சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி.. கொலீஜியம் பரிந்துரை!
சென்னை: சென்னை உயர்நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக, கேரள உயர்நீதிமன்ற நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரியை நியமிக்க உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது. சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி எம் எம் ஸ்ரீவஸ்தவா வரும் மார்ச் 5 ஆம் தேதி பணி ஓய்வு பெறுவதை அடுத்து உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.
நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி, கடந்த 2016 ஆம் ஆண்டு மத்திய பிரதேச உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதியாகவும், 2018 ஆம் ஆண்டு நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கேரள உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்ட அவரை தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.

சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி 1966 ஆம் ஆண்டு ராய்பூரில் பிறந்தவர். சிவில், கிரிமினல் மற்றும் அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகளில் பயிற்சி பெற்றவர். 1992 ஆம் ஆண்டு ஜபல்பூரில் உள்ள மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் ஒய்.எஸ். தர்மாதிகாரிக்கு ஜூனியராக பணியாற்றினார். 2000 முதல் 2015 வரை அரசின் நிலை ஆலோசகராக, வருமான வரித் துறை, இந்திய ரிசர்வ் வங்கி, மத்திய கலால் வரி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, பல்வேறு பொதுத்துறை நிறுவனங்கள், பிஎஸ்என்எல், போபால் எரிவாயு உள்ளிட்ட வழக்குகளில் பணியாற்றினார்.
ஜபல்பூரில் உள்ள மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் 24 ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர் தர்மாதிகாரி. 2016ல் மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதியாகவும், மார்ச் 17, 2018 அன்று நிரந்தர நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கேரள உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், அவரை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
அதேபோல பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்ற நீதிபதியான நீதிபதி லிசா கில்லை ஆந்திர பிரதேச உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கவும் உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications