கேரளாவை அசத்திய மொய் விருந்து.. சட்டையில் அதென்ன QR கோடு? இணையம் முழுக்க கலக்கும் ஹைடெக் கல்யாணம்
சென்னை: சமீப காலமாகவே அனைத்திலும் புதுமை புகுந்துவிட்டது.. உணவு, உடை, இருப்பிடம், தொழில், பொருட்கள் என அத்தனையிலும் புதுமையின் வருகை அதிகரித்தபடியே உள்ளது.. அந்தவகையில், திருமண நிகழ்வுகளிலும் புதுமைக்கு பஞ்சம் இருப்பதில்லை.. திருமண அழைப்பிதழ் அச்சடிப்பதிலும், ஆடைகளை வடிவமைப்பதிலும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் புதுமைகளை புகுத்தி வருகின்றனர். அதில் கேரளாவில் நடந்துள்ள புதுமை பலரையும் அசரடித்து வருகிறது.
நம்முடைய இந்திய கலாச்சாரத்தில் சுபகாரியங்களில் மொய் எழுதுவது என்பது காலம் காலமாகவே பின்பற்றப்பட்டு வருகிறது.

இதற்கு காரணம், சுபநிகழ்ச்சியை நடத்துபவரின் நிதித் தேவைக்கு உதவும் ஈகை மட்டுமே கிடையாது.. வட்டியில்லா முதலீடு மட்டுமே கிடையாது.. அனைத்தையும் தாண்டி, அன்பளிப்புடன் உறவுகளுக்குள் பகிரும் அன்பின் அடையாளமாகும்.
சுப நிகழ்ச்சிகளில் மொய்ப்பணம்
அந்தவகையில் திருமண வீடுகளில் வைக்கப்படும் மொய் விருந்தானது, ஒருவரின் வாழ்க்கையின் துவக்கத்துக்கு அடித்தளமாகிறது..
அந்தவகையில் ஆரம்பத்தில் நூறு, ஆயிரம் என துவங்கி லட்சங்களில் மொய் விருந்துகள் வசூலாகும் நிலைமை இன்று வந்துவிட்டது. முன்பெல்லாம் மொய் எழுதுவதற்கென்றே நெருங்கிய உறவுகளை திருமண வீடுகளில் உட்கார வைத்துவிடுவார்கள். வசூலான மொய் பணத்தை எண்ணி அவரே திருமண வீட்டாரிடம் ஒப்படைத்துவிடுவார்.
ஆனால், இப்போது லட்சக்கணக்கில் மொய் கொட்ட துவங்கிவிட்டது.. விருந்துக்கு வரும் பெரும்பாலானோர் 5 ஆயிரத்திற்கும் அதிகமாக மொய் எழுதுவதால் பணத்தை எண்ணுவது சிரமமாக இருந்து வந்தது. எனவே, மொய் எழுதுவதற்கு உறவினர்கள் தவிர்த்து 50க்கும் மேற்பட்ட ஆட்களை சம்பளத்திற்கு பிடிக்க வேண்டிய நிலைமை ஏற்பட துவங்கிவிட்டது.. இது மொய் விருந்தை வைப்பவர்களுக்கு பெரிய தலைவலியாக உள்ளது..
மொய் விருந்து மிஷின்
எனவே, வங்கிகள் பயன்படுத்தும் பணம் எண்ணும் மெஷினை, மொய் எழுதுவதற்கும் பயன்படுத்த துவங்கிவிட்டார்கள்.. இந்த கணினி முறையில் மொய் எழுதும்போது மொய் எழுதியவருக்கு ரசீதும், செல்போனில் மெசேஜூம் வந்துவிடுகிறது..
மொய் விருந்துக்காக சிறப்பாக தயாரிக்கப்பட்டதுதான், "மொய் டெக்" செயலி. சுபநிகழ்வுக்கு செல்ல முடியாதவர்கள், இந்த ஆப் மூலம் மொய் விபரங்களை ஆண்ட்ராய்டு செல்போனில் பார்த்துக்கொள்ளும் வசதியும் உள்ளது. மொய் யாருக்கெல்லாம் செய்துள்ளோம் என்பதையும் இந்த செயலி மூலம் சுலபமாக தெரிந்து கொள்ளலாம்.
மொய் வசூலிப்பில் புதுமை
மொய் பணத்தை செலுத்துவதிலும், மொய் பணத்தை எண்ணுவதற்காகவும் புது புது வசதிகள் தற்போது வந்துள்ளது, பொதுமக்களுக்கும் எளிதாகவும், வசதியாகவும் இருந்து வருகிறது.
இந்நிலையில், கேரளாவில் ஒரு விசேஷமான சம்பவம் நடந்துள்ளது.. அங்கு நடந்துள்ள ஒரு திருமண விழாவில், வழக்கம்போல் மொய் விருந்து நடந்துள்ளது.. விழாவில் மொய் செய்வதற்காக பலரும் வரிசையில் காத்து கொண்டிருந்திருக்கிறார்கள்..
விருந்தில் கியூ ஆர் கோடு
அப்போது, விருந்தில் கியூ ஆர் கோடு மூலம் பணம் வசூலிக்கப்பட்டதை ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர்.. மணமக்களின் உறவினர் ஒருவர் ஆன்லைன் பணபரிவர்த்தனைக்கான கியூ ஆர் கோடு பொறித்த அட்டையை தன்னுடைய சட்டை பையில் ஒட்டியிருந்தாராம்..
திருமணத்திற்கு வந்த உறவினர்கள், அந்த கியூஆர் கோடை ஸ்கேன் செய்து தங்களது மொய்ப்பணத்தை செலுத்தியிருக்கிறார்கள்.. இதை திருமணத்தில் பங்கேற்றவர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாவில் பதிவிட்டுவிட்டார்கள்.. கல்யாண வீட்டிலும் கியூ ஆர் கோடு? இன்னும் என்னவெல்லாம் புதுமை வரப்போகிறதோ? என்று இணையவாசிகள் கமெண்ட்களை பதிவிட்டு வருகிறார்கள்.
-
"அந்த 5%.." கேரளாவில் அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத மிக முக்கிய மாற்றம்! காரணம் பாஜக தான்! -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம் -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் வெற்றி பெறும் துலாம் ராசி.. வேலை விஷயத்தில் கவனம் -
ஸ்டாலின் காதுக்கு போன 1 பெயர்.. அதிமுகவிலும் தெரிஞ்சுடுச்சு! உளவுத்துறை ரிப்போர்ட் என்ன சொல்லுச்சு -
"முதல்ல பணத்தை எடுத்து வை.." ஹார்முஸை கடக்க சுங்க கட்டணம்.. மாஸ்டர் பிளான் போட்டு தூக்கிய ஈரான் -
"ஜெயலலிதாவால் ஜெயிலில் அடைக்கப்பட்டவரிடம் கட்சியை விற்றுவிட்டார் எடப்பாடி”.. கு.ப.கிருஷ்ணன் தாக்கு!












Click it and Unblock the Notifications