சுதந்திர தின விழா உரையில் முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக முதல்வர் விஜய் சென்னை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் இன்று முதல் முறையாக தேசியக்கொடி ஏற்றினார். காலை 8.45 மணிக்கு முதல்வர் விஜய் மூவர்ணக்கொடி ஏற்றி வைத்து உரை நிகழ்த்தினார். முதல் விஜய் நிகழ்த்தும் முதல் சுதந்திர தின உரை என்பதால் முக்கியமான அறிவிப்புகள் இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அதன்படி சில அறிவிப்புகளை விஜய் வெளியிட்டார்.

தமிழக முதல்வர் விஜய் இன்று முதல் முறையாக சென்னை கோட்டை கொத்தளத்தில் தேசியக்கொடி ஏற்றினார். தேசியக்கொடியை ஏற்றி வைத்துவிட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

Key announcements TN CM Vijay is set to make in his Independence Day speech

50 ஆயிரமாக அதிகரிப்பு

முதல்வர் விஜய்யின் முதல் சுதந்திர தின உரை என்பதால், அவரது உரையில் முக்கிய அறிவிப்புகள் எதுவும் இடம் பெறுமா? என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே ஏற்பட்டு இருந்தது. விஜய் பதவியேற்று நாளையுடன் 100 நாட்கள் நிறைவு பெறுகிறது. தனது ஆட்சியின் சாதனைகள், செயல்படும் விதம் குறித்தும் விஜய் பேசினார். விஜய் வெளியிட்ட அறிவிப்புகள்:-

தாய் நாட்டிற்காக தன்னலமற்ற தியாகம் செய்து நமது நாட்டின் பாதுகாப்பிற்காக அரும்பாடுபட்ட முன்னாள் படைவீரர்களின் நலன் கருதி அவர்களது இரண்டு மகள்களுக்கும் வழங்கப்படும் திருமண நிதி உதவி ரூ.25,000 இருந்தில் ரூ.50 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

மாற்றுத்திறன் கொண்ட முன்னாள் படை வீரர் மற்றும் அவர்கள் சார்ந்தோருக்கு வழங்கப்பட்டு வந்த மாதாந்திர நிதி உதவி ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

ஓய்வூதியம் அதிகரிப்பு

மாநில அரசால் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர ஓய்வூதியம் ரூ.23 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.

மாநில அரசால் விடுதலைப் போராட்ட தியாகிகளின் குடும்பத்திற்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர குடும்ப ஓய்வு நிதி ரூ.12,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.

வீரபாண்டிய கட்டபொம்மன், முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதி, மருது சகோதரர்கள், வ உ சிதரம்பரனார் ஆகியோரின் வழித்தோன்றல்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ரூ.11,500 ஆக உயர்த்தி வழங்கப்படும். இவ்வற்றுக்கான அரசாணை அரசால் வெளியிடப்பட்டுள்ளது. என்று தெரிவித்தார்.

கடந்த ஆண்டு ஸ்டாலின் வெளியிட்டது

முதல்வரான பிறகு முதல் முறையாக அவர் நிகழ்த்தும் சுதந்திர தின உரை என்பதால் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டு இருந்தது. கடந்த காலங்களில் முதல்வராக இருந்த தலவர்களின் உரையையும் விஜய் பார்த்து அதில் இருந்து குறிப்பு எடுத்து தனது சுதந்திர தின உரையை விஜய் மெருகேற்றி கூறியிருப்பதாக கோட்டை வட்டாரங்கள் கூறுகின்றன.

கடந்த ஆண்டு அப்போதைய முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின விழாவில் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். மலைப்பகுதிகளில் செயல்படுத்தப்படும் விடியல் பயண திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கு விரிவு படுத்தப்படும் என்ற அறிவிப்பை சுதந்திர தின உரையில்தான் ஸ்டாலின் வெளியிட்டு இருந்தார்.

அதேபோல, தியாகிகளின் ஓய்வூதியம் 22 ஆயிரமாகவும் மற்றும் குடும்ப ஒய்வூதியம் மாதம் ரூ.12,000 என உயர்த்தப்படும் என்ற அறிவிப்பும் வெளியானது. எனவே, தியாகிகளின் ஓய்வூதியம் உயர்வு போன்ற அறிவிப்புகள் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. 8.45 மணிக்கு செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் கொடியேற்றிவிட்டு, தனது சுதந்திர தின உரையை விஜய் நிகழ்த்த இருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+