பெண்கள் என்ன பலாத்காரம் செய்யும் பொருளா? என்ன பேச்சு இது? மன்சூர் அலிகானுக்கு குஷ்பு கண்டனம்
சென்னை: பெண்கள் என்ன பலாத்காரம் செய்யும் பொருளா என மன்சூர் அலிகான் விவகாரத்தில் குஷ்பு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் ஒரு தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மன்சூர் அலிகானை போல் பல பேர் கீழ்த்தரமான வேலைகளை செய்துக் கொண்டிருக்கிறார்கள். பெண்களை பற்றி எப்படி வேண்டுமானாலும் விமர்சனம் செய்யலாம், எப்படி வேண்டுமானாலும் பேசலாம் என நினைக்கிறார்கள்.

பெண்களை அவதூறாக பேசினால் கேட்க யாரும் இல்லை. அப்படியே கேட்டாலும் 2 நாளில் மறந்துவிடுவார்கள் என நினைத்து வார்த்தைகளை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். மன்சூர் அலிகான் சொல்றாரு, "நான் த்ரிஷாவை பேசுவதற்கு முன்பும் பின்பும் என்ன பேசியிருக்கிறேன் என பாருங்கள்" என கூறியுள்ளார்.
ஆனால் அவர் முன்னேயும் பின்னேயும் என்ன பேசியிருக்கிறார் என்பது குறித்தெல்லாம் எங்களுக்கு கவலை இல்லை. சொன்ன வார்த்தைகள் மிகவும் தவறான வார்த்தைகள். பெண்ணை மதிக்கும் மனிதர்கள் நிச்சயமாக இது மாதிரியான வார்த்தைகளை பயன்படுத்த மாட்டார்கள். பெண்களை பார்த்தால் உங்களுக்கு என்ன ரேப் செய்யும் பொருளா தெரியுதா?
அவருடைய பேச்சு அப்படித்தான் இருக்கிறது. எனவே தேசிய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராக இருக்கும் நான் இந்த விஷயத்தை எடுத்துக் கொண்டு போகாவிட்டால் எனக்குத்தான் கேவலமாக இருக்கும். பெண்களையும் அவர்களுடைய சுயமரியாதையையும் பாதுகாக்கவே நான் மகளிர் ஆணையத்தில் பதவியில் இருக்கிறேன். த்ரிஷா என்றில்லை, யாரை பற்றி பேசினாலும் நான் நடவடிக்கை எடுப்பேன்.
அவர் மீது 509 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். போலீஸார் அவரை விசாரணைக்கு அழைப்பார்கள். அதன் பிறகுதான் என்ன நடக்கும், இந்த வழக்கு எந்த திசையில் செல்லும் என்பதை எல்லாம் சொல்ல முடியும். பெண்களின் பாதுகாப்புக்காகவே தேசிய மகளிர் ஆணையம் பணியாற்றி வருகிறது என குஷ்பு தெரிவித்தார்.
நடிகர் மன்சூர் அலிகான் அண்மையில் நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.
லியோ படத்தில் த்ரிஷா நடித்திருந்தார். கிளைமாக்ஸ் காட்சியில் மன்சூர் அலிகான் நடித்தார். அதில் விஜய் குறித்து பிளாஷ்பேக் சொல்லும் காட்சி அவருக்கு கொடுக்கப்பட்டது. சில நிமிடங்கள் மட்டுமே அவர் நடித்திருந்தார்.
ஆனால் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் த்ரிஷா குறித்து மிகவும் மோசமான வகையில் பேசியிருந்தார் மன்சூர் அலிகான். இது குறித்து நடிகை த்ரிஷா தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: மன்சூர் அலிகான் என்னைப்பற்றி மிகவும் மோசமான மற்றும் அருவருப்பான முறையில் பேசும் வீடியோ குறித்து நான் கேள்விப்பட்டேன். அவரை போன்றவருடன் இனிமேல் ஒருபோதும் திரைப்படங்களில் நடிக்கமாட்டேன்.
மன்சூர் அலிகானை போன்றவர்கள் மனித குலத்திற்கே கெட்டப்பெயரை கொண்டு வருகின்றனர் என்று தெரிவித்திருந்தார். நடிகை திரிஷாவுக்கு ஆதரவாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகை மாளவிகா மோகனன், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உள்ளிட்டோர் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்திருந்தனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications