நல்ல சூழ்நிலையில் வளர்ந்தவர்களா?..கொந்தளித்த குஷ்பு.. சாதிக் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் புகார்
சென்னை: பாஜக பெண் நிர்வாகிகளை தரக்குறைவாக பேசியதாக திமுகவின் சைதை சாதிக் மீது டெல்லி தேசிய மகளிர் ஆணையத்தில் பாஜக நிர்வாகி குஷ்பு புகார் அளித்துள்ளார். நல்ல சூழ்நிலையில் வளர்ந்த யாரும் பெண்களைப் பற்றி இப்படி தவறாக பேசமாட்டார்கள் என்றும் அதைக் கேட்டு சிரிக்க மாட்டார்கள் என்றும் குஷ்பு கூறியுள்ளார்.
சென்னை ஆர்.கே.நகர் மேற்கு பகுதியில் திமுக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக பேச்சாளர் சைதை சாதிக் பாஜக பெண் நிர்வாகிகள் பற்றி அவதூறாக பேசினார். இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில் சைதை சாதிக்கை பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்துநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக பாஜக மாநில பொதுச்செயலாளர் நதியா சீனிவாசன், நிர்வாகி கோமதி கணேசன் உள்ளிட்டோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் சில தினங்களுக்கு முன்பு புகார் அளித்தனர்.இவர் மீது தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் அளிக்க இருப்பதாக குஷ்பு கூறினார்.

குஷ்பு புகார்
அதன்படி திமுக நிர்வாகி சைதை சாதிக் அவதூறாக பேசியது பற்றி டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்தில் குஷ்பு புகார் அளித்துள்ளார். சாதிக் மீது தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவி ரேகா சர்மாவை சந்தித்து புகார் அளித்தார்.

நல்ல சூழ்நிலையில் வளர்ந்தவர்கள்
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, நல்ல குடும்பத்தில் பிறந்த ஆண்கள் ஒரு போதும் பொது மேடையில் பெண்களைப் பற்றி அசிங்கமாக பேச மாட்டார்கள். அதே போல அதைக் கேட்டு ரசிக்கவும் மாட்டார்கள். இதுதொடர்பாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணையம் உறுதி அளித்ததாகவும் கூறினார் குஷ்பு.

சாதிக் மீது வழக்குப்பதிவு
இதனிடையே திமுக நிர்வாகி சாதிக் மீது பாஜக மகளிர் அணி சார்பில் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார், கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுதல், ஆபாசமாக பேசுதல், குறிப்பிட்ட சமுதாய மக்கள் குறித்து தரக்குறைவாக பேசுதல், பெண்ணின் மானத்துக்கு பங்கம் விளைவித்தல், பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

பயந்து ஒதுங்க மாட்டேன்
இந்த பிரச்சினையில் நான் பயந்து ஒதுங்கி விடவும் மாட்டேன். விட்டு விடவும் மாட்டேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் காலையில் தூங்கி விழிக்கும்போது பயந்து கொண்டே எழுவதாகவும், தி.மு.க. கட்சி நிர்வாகிகள் யார் என்ன பிரச்சினையை இழுத்து வைத்து உள்ளார்களோ? என்று நினைத்து கொண்டு தூக்கமின்றி தவிப்பதாக கூறியிருந்தார். இப்போது அவர் நினைத்தது போலவே அவரது கட்சிக்காரர் ஒருவர் இவ்வளவு கீழ்த்தரமாக நடந்து இருக்கிறார். நாகரீகமே இல்லாமல் பேசிய அவர் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் என்ன நடவடிக்கை எடுத்தார். இதுவரை ஏன் அவரை கட்சியை விட்டு நீக்கவில்லை? என்றும் குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார். சைதை சாதிக்கின் மன்னிப்பை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்றும் குஷ்பு கூறியுள்ளார்.
-
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications