எம்எல்ஏ ஆகியிருக்கணும்.. எல்லாம் நேரம்தான் - செல்பி போட்டு ஆறுதல் படும் குஷ்பு

ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிட்ட குஷ்பு தோல்வியை தழுவியதால் லாக்டவுன் காலத்தில் தனது தினசரி நடவடிக்கைகளை முகநூலில் பதிவிட்டு வருகிறார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகையும் அரசியல்வாதியுமான குஷ்பு தன்னுடைய இயற்கையான மேக் அப் போடாத அழகு முகத்தை புகைப்படம் எடுத்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவருடைய படத்திற்கு கலவையான கமெண்ட்கள் கிடைத்து வருகின்றன.

நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் நடிகை குஷ்பு ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். வாக்களித்தவர்களுக்கு நன்றி கூறி ட்விட்டரில் பதிவிட்டார். மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்ற உடன் வாழ்த்து கூறினார்.

சீரியல் தயாரிப்பில் பிசியாகி விட்ட குஷ்பு, தற்போது தனது ட்விட்டர் பதிவிலும் ஆக்டிவ் ஆக இருக்கிறார். அவரது கடந்த ஒரு மாத பதிவில் நண்பர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறுவது மட்டுமல்லாமல் சில அரசியல் சார்பு பதிவும் இடம் பெற்றுள்ளன.

நாய் போட்டோ பதிவிட்ட குஷ்பு

நாய் போட்டோ பதிவிட்ட குஷ்பு


கொரோனா காலமாக இருப்பதால் பாதுகாப்பாக விழிப்புணர்வுடன் இருங்கள் என்று கூறியிருந்த குஷ்பு, அடிபட்ட நாய் ஒன்றினை போட்டோ எடுத்து பதிவிட்டிருந்தார்.

கருத்து கூறாத குஷ்பு

கருத்து கூறாத குஷ்பு

மத்திய அரசுக்கு எதிராக ராகுல்காந்தி, ப. சிதம்பரம் கூறி வரும் கருத்துக்களுக்கும் அவ்வப்போது பதில் அளித்துள்ள குஷ்பு மாணவிகள் பாலியல் துன்புறுத்தல் குறித்து பெரிதாக எந்த கருத்தும் கூறாமல் ஒதுங்கி விட்டார்.

ட்விட்டர் அரசியல்

ட்விட்டர் அரசியல்

கொரோனா தொற்று காலத்தில் மக்களுக்கு சேவை செய்யாமல் வீட்டிற்குள் அடங்கியிருக்கிறாரே என்று பலரும் விமர்சித்தாலும் இப்படி அமைதியாக வீட்டிற்குள் அமைதியாக இருந்து ட்விட்டரில் பதிவிடுவதும் அரசியல்தான் என்று விமர்சனங்களுக்கு பதில் கொடுத்து வருகிறார்.

மேக் அப் இல்லாத முகம்

மேக் அப் இல்லாத முகம்

அரசியல்வாதியாக இருந்தாலும் அவ்வப்போது தனது அழகை பராமரிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வரும் குஷ்பு தனது இயற்கையான மேக் அப் போடாத முகத்தை செல்பி எடுத்து பதிவிட்டுள்ளார். நண்பர்களே பத்திரமாக இருங்கள் என்றும் பதிவிட்டுள்ளார் குஷ்பு. இந்த பதிவுக்கு, எம்எல்ஏவாகி எப்படி இருக்க வேண்டிய குஷ்பு இப்படி செல்பி போடும் நிலைக்கு வந்து விட்டாரே என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். எம்எல்ஏ ஆகி சட்டசபைக்கு போகவும் நேரம் கை கூடி வரவேண்டுமே.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+