சந்திரனுக்கு 27 மனைவி, நிலவை பாம்பு விழுங்கும் மூடநம்பிக்கை ஒழியட்டும் - டைமிங்கில் அடித்த கி வீரமணி
சென்னை: சந்திரயான் 3 திட்டம் வெற்றிபெற்றதை பாராட்டி உள்ள திராவிடர் கழக தலைவர் கி வீரமணி, சந்திரனுக்கு 27 மனைவிகள் என்ற கட்டுக்கதையும், சந்திரனைப் பாம்பு விழுங்குகிறது என்பன போன்ற மூடநம்பிக்கைகளும் ஒழியட்டும் என்று ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு இருக்கும் அவர், "சந்திராயனின் வெற்றி மனித அறிவுக்கும் ஆற்றலுக்கும், அறிவியலுக்கும் ஒரு சான்று. இனியாவது சந்திரனுக்கு 27 மனைவிகள் என்ற கட்டுக்கதையும், சந்திரனைப் பாம்பு விழுங்குகிறது என்பன போன்ற மூடநம்பிக்கைகளும் ஒழியட்டும்.

நிலவில் கால் வைத்த நாம், நிலவைத் தாண்டியும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும். செவ்வாய்க் கோளுக்குச் செல்லும் விண்கலன்கள் இனி செவ்வாய் தோஷ மூடநம்பிக்கையையும் முறியடிக்கட்டும். சந்திராயன் வெற்றிக்கு உழைத்த அறிவியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் அனைவருக்கும், குறிப்பாக திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் அவர்களுக்கும் நம் வாழ்த்துகள், பாராட்டுகள்!" என்று குறிப்பிட்டு உள்ளார்.
சந்திரயா 3 திட்டத்தின் வெற்றியின் மூலமாக நிலவிற்கு விண்கலம் அனுப்பிய ரஷியா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் வரிசையில் புதிதாக 4 வது நாடாக இந்தியா இணைந்துள்ளது. சந்திரயான் 1 விண்கலத்தை கடந்த 2008 ஆம் ஆண்டு இஸ்ரோ விஞ்ஞானிகள் நிலவிற்கு அனுப்பினார்கள்.
அது வெற்றிபெறாத நிலையில் 2 வது முறையாக 2019 ஆம் ஆண்டு சந்திரயான் 2 விண்கலத்தை நிலவுக்கு இஸ்ரோ அனுப்பியது. ஆனால், ரோவர் கருவி நிலவின் மேற்பரப்பில் வேகமாக மோதி வெடித்து சிதறியது. அதை தொடர்ந்து கடந்த ஜூலை மாதம் 14 ஆம் தேதி சந்திரயான் 3 விண்கலத்தை இஸ்ரோ விண்ணில் ஏவியது.
நிலவின் இருண்ட பகுதியை ஆய்வு செய்வதற்காக ஆந்திரவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து சந்திராயன் 3 விண்கலம் செலுத்தப்பட்டது. நிலவின் தெற்கு பகுதியில் விண்கலத்தை நிலை நிறுத்தும் வகையில் சந்திரயான் 3 இஸ்ரோ அனுப்பியது.
சந்திராயனின் வெற்றி மனித அறிவுக்கும் ஆற்றலுக்கும், அறிவியலுக்கும் ஒரு சான்று!
— Asiriyar K.Veeramani (@AsiriyarKV) August 23, 2023
இனியாவது சந்திரனுக்கு 27 மனைவிகள் என்ற கட்டுக்கதையும், சந்திரனைப் பாம்பு விழுங்குகிறது என்பன போன்ற மூடநம்பிக்கைகளும் ஒழியட்டும்.
நிலவில் கால் வைத்த நாம்,
நிலவைத் தாண்டியும் நெடுந்தூரம் பயணிக்க…
வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட விண்கலம் பூமியின் நீள் வட்டப் பாதையில் 5 முறை சுற்றி வந்தது. பின்னர் நிலவின் ஆர்ப்பிட்டுக்குள் நுழைந்த சந்திரயான் 3, நீள் வட்டப்பாதையில் பல நாட்கள் சுற்றியது. இந்த நிலையில் இன்று மாலை சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கி இருக்கிறது. நிலாவை தொட்டவுடன் விக்ரம் லேண்டர், "இந்தியா.. நான் எனது இலக்கை எட்டிவிட்டேன். நீங்களும்தான்." என இஸ்ரோவுக்கு மெசேஜ் அனுப்பியது
இஸ்ரோவுக்கு விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பகுதியில் இருந்து எடுத்த புகைப்படங்களை அனுப்பியது. "விக்ரம் லேண்டர் - பெங்களூரு இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்தின் இணைப்பு வெற்றிகரமாக நடந்துள்ளது." என்று ட்விட்டரில் இஸ்ரோ பதிவிட்டு உள்ளது. விக்ரம் லேண்டர் மீது படிந்து இருந்த நிலவின் மணல் தூசு விலகியதை அடுத்து பிரக்யான் ரோவரில் இருந்து வெளி வந்தது லேண்டரின் படத்தையும் அனுப்பியது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications