Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கிளாம்பாக்கம் கியர் மாறுது.. ஸ்பீடு எடுத்த ரயில்வே ஸ்டேஷன் பணிகள்.. சென்னைக்கு வந்த ஹேப்பி நியூஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிளாம்பாக்கம் ரயில் நிலைய கட்டுமானப் பணிகளை வரும் ஏப்ரல் மாதத்துக்குள் முடிக்க ரயில்வே நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்ட அதிகாரிகள் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டிருப்பது, பொதுமக்களுக்கு மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி வருகிறது.

சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் ஸ்டாண்டு கட்டப்பட்டு, கடந்த ஜனவரி மாத இறுதியில் அது பயன்பாட்டிற்கும் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் ஒரு லட்சம் பயணிகள் வந்து செல்லும் விதமாக வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

kilambakkam bus stand kilambakkam railway station

எனினும், இந்த பஸ் ஸ்டாண்டிலிருந்து நகரின் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல பல கிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டியிருப்பதாகவும், இதற்காக டாக்ஸி ஆட்டோ புக் செய்தால் பல நூறு ரூபாய் செலவாவதாகவும், பயணிகள் வேதனை தெரிவித்தனர். இதையடுத்து, பஸ் ஸ்டாண்டிலிருந்து மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டன.

ரயில் நிலையம்: எனினும், புறநகர் மின்சார ரயில் சேவையை இணைக்கும் வகையில், தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ரயில் நிலையம் அமைக்க பயணிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதன்படியே, ரூ.20 கோடிமதிப்பீட்டில் வண்டலூர் - ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ஒப்பந்தம் வழங்கப்பட்டு, ரயில் நிலையம் அமைக்க, பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்த ரயில் நிலையம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டு வரும்நிலையில், இப்பணிகளை இந்த வருட இறுதிக்குள் முடித்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சென்னை ரயில்வே கோட்டம் திட்டமிட்டிருந்ததாக தெரிகிறது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு, ரயில் நிலைய பணிகள் துரிதமாக நடக்கவில்லை என்றும், பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் பயணிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

ஜரூர் பணிகள்:
இப்படிப்பட்ட சூழலில், கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகள் குறித்து முக்கிய அப்டேட் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதன்படி, பணிகள் அனைத்தையும் வரும் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளதாம்.

இது குறித்து சென்னை ரயில்வே கோர்ட் அதிகாரிகள் சொல்லியிருப்பதாவது: "வண்டலூர் கூடுவாஞ்சேரி இடையே ரூபாய் 20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் புதிய ரயில் நிலையப் பணிகள் மூன்று நடைமேடைகள் டிக்கெட் அலுவலகம் வாகன நிறுத்தம் ரயில் நிலைய மேலாளர் அறை நடை மேம்பாலம் நகரும் படிக்கட்டுகள் சிசிடிவி கேமராக்கள் உள்ள அனைத்து அடிப்படை வசதிகளுடன் நடைபெற்று வருகிறது.. இதற்கான அனைத்து பணிகளும் தற்போது நடந்து வருகிறது.

மின்சார வசதி: இதில் ஒரு நடைமேடை அமைக்க மண் நிரப்பப்பட்டுள்ளது. தொடர்ந்து கட்டுமான பணிகள் வேகமெடுக்க உள்ளது. இப்பணிகள் நடைபெறும் போது மேற்கூரை வசதி மற்றும் மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டுவிடும். தொடர்ந்து அனைத்து பணிகளும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+