கிளாம்பாக்கத்தில் பார்த்தீங்களா? அப்படியே "சீன்" தலைகீழா போயிருச்சே.. வெறிச்சோடிய சென்னையின் சாலைகள்
சென்னை: கடந்த 2 நாட்களாகவே படுபிஸியாக காணப்பட்ட கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு இப்போது, கூட்டமேயின்றி காணப்படுகிறது.
சென்னையில் தங்கி பணிபுரியும் அனைவருமே பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவரவர் சொந்த ஊருக்கு சென்றுள்ளதால், மக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது சென்னை..

வசதிகள்: எனினும், இந்த ஸ்டாண்டில் மேலும் சில வசதிகளை செய்துதர வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துவருகிந்றன.. முக்கியமாக எந்த ஒரு இணைப்பு வசதிகளும் இல்லை என்பதால், பஸ்ஸ்டாண்டு அருகே ரயில்வே ஸ்டேஷன் அமைப்பதற்காக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.. ரயில்வே ஸ்டேஷன் அமைப்பதற்கான ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன.
அதேபோல, கிளாம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷன் வரை கிட்டத்தட்ட 450 மீட்டர் தூரத்துக்கு ஸ்கைவாக் அமைக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.. இதற்கான மாதிரி போட்டோக்களும் இணையத்தில் அசரவைத்து வருகிறது.
மெட்ரோ பணிகள்: இதற்கு நடுவில் மெட்ரோ பணிகளும் நடந்து வருகிறது.. ஒருபக்கம் ரயில்வே ஸ்டேஷன், மறுபக்கம் ஸ்கைவாக், இன்னொருபக்கம் மெட்ரோ என ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை கிளாம்பாக்கம் ஏற்படுத்தி வருகிறது.
இதனிடையே, கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு ஒரே நாளில் வெறிச்சோடி காணப்படுகிறது.. பொங்கல் பண்டிகையையொட்டி சொந்த ஊர்களுக்கு படையெடுத்த மக்களால், கடந்த 2 நாட்களாகவே கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு படுபரபரப்பாக காணப்பட்டது.. இதனால் பஸ்கள் அனைத்திலுமே பயணிகளின் கூட்டம் நிரம்பி வழிந்தது..
பயணிகள்: ஸ்பெஷல் பேருந்துகள் இயக்கப்பட்டும்கூட, நள்ளிரவில் போதிய பஸ்கள் கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் கொந்தளித்து போனார்கள்.. ஆனால், இப்போது, அனைவரும் சொந்த ஊர் சென்றுவிட்ட, பயணிகள் கூட்டமின்றி கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு வெறிச்சோடி காணப்படுகிறது. கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு எப்போதுமே பரபரப்பாக இருக்கும் நிலையில், அங்கேயும் இந்த பண்டிகைக்கு கூட்டம் காணப்படவில்லை.












Click it and Unblock the Notifications