கோயம்பேடு குளோஸ்.. கிளாம்பாக்கத்திலிருந்து மொத்தமா கிளம்ப போகுது.. தமிழகத்தில் 4,200 பஸ்? மகிழ்ச்சி
சென்னை: பயணிகள் சிரமமின்றி பயணிக்க தேவையான நடவடிக்கைகளை தமிழக போக்குவரத்துத் துறை தொடர்ந்து எடுத்து வரும்நிலையில், தற்போது மீண்டும் ஒரு குட்நியூஸ் வெளியாகி உள்ளது.
தென் மாவட்ட பகுதிகளுக்கு செல்லும் ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டும் என்று அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.. ஆனால், கிளாம்பாக்கத்தில் ஆம்னி பஸ்களை நிறுத்த போதிய இடம் இல்லை என ஆம்னி பஸ் சங்கம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது.

ஆம்னி பஸ்: அரசு எச்சரித்தும்கூட, ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கம் செல்ல மறுத்ததால், ஆம்னி பஸ்கள் கோயம்பேட்டிலிருந்து இயக்குவதற்கு முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.
இதன்பிறகு, 2 நாட்களுக்கு முன்பு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களிடம் பேசும்போது, "கோயம்பேடு பஸ் ஸ்டாண்டு, இனி ஆம்னி பஸ்களின் பயன்பாட்டுக்கு கிடையாது..
கூடுதல் பஸ்கள்: பயணிகளுக்கும் கோயம்பேட்டை விட, கிளாம்பாக்கத்தில் கூடுதல் வசதிகள் இருக்கின்றன.. கிளாம்பாக்கத்திலிருந்து கோயம்பேட்டுக்கு 5 நிமிடத்துக்கு ஒரு பஸ், தாம்பரத்துக்கு 10 நிமிடத்துக்கு ஒரு பஸ், சிறுசேரியில் இருந்து கூடுதல் பஸ் சேவைகள் துவங்கப்பட்டுள்ளன. விழுப்புரம், கும்பகோணம் உள்ளிட்ட இதர போக்குவரத்துக் கழக பஸ்களும் வரும் 30ம் தேதி, கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்படும்.
சில பஸ்கள் மட்டும், மாதவரம் பஸ் நிலையத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரம், வேலுார், பெங்களூரு, உத்திரமேரூர், திண்டிவனம் செல்லும் பஸ்கள் இயக்கப்படுகின்றன. பூந்தமல்லி வழியாக பெங்களூரு, வேலூர் செல்லும் பஸ்களும், கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் பஸ்களும், கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும்" என்று கூறியிருந்தார்.
பேட்டி: இந்நிலையில், தமிழ்நாட்டில் மேலும் 4,200 பஸ்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்... இதுகுறித்து திருவாரூரில் பேசிய அமைச்சர், "தமிழ்நாட்டில் மேலும் 4,200 பஸ்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளன.. கிளாம்பாக்கத்தில் இருந்து தாம்பரம், கிண்டி, கோயம்பேட்டிற்கு தொடர்ச்சியாக மாநகர பேருந்துகள் இயக்கப்படும். கிளாம்பாக்கத்தில் ஆட்டோக்களை முன்பதிவு செய்வதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன" என்றார் அமைச்சர்.
இந்த மார்ச் மாத இறுதிக்குள் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு முழுமையாக தயராகிவிடும் என்றும், கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு கூடுதலாக 200 நடை பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்திருந்த நிலையில், 4200 பஸ்கள் தமிழகத்துக்கு பயன்பாட்டிற்கு வர உள்ளதாக கூறியிருப்பது, பயணிகளிடம் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications