கிளாம்பாக்கம் டூ கோயம்பேடு.. அரசு பஸ்ஸில் ஏறப்போனால்?.. கிளாம்பாக்கத்தில் திருதிருன்னு விழித்த ஜனம்
சென்னை: பொங்கல் பண்டிகைக்கு பயணிகள் ஊருக்கு செல்ல துவங்கிவிட்ட நிலையில், சென்னையில் புது குழப்பம் ஒன்று பயணிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
பொங்கல் பண்டிகையை கொண்டாட பொதுமக்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு பயணமாகி வருகிறார்கள்.. பொதுமக்களின் வசதிக்காகவே, தமிழக போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை ஏற்பாடு செய்திருக்கிறது.

பொங்கல் பண்டிகை: பொங்கல் பண்டிகையையொட்டி, 3 நாட்களுக்கு சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து மொத்தம் 19,484 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.. இதில் சென்னையை பொறுத்தவரை, கோயம்பேடு, கிளாம்பாக்கம், பூந்தமல்லி, மாதவரம், தாம்பரம் சானடோரியம், கே.கே.நகர் ஆகிய 6 இடங்களில், சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
முக்கியமாக, கிழக்கு கடற்கரை சாலை வழியாக கும்பகோணம், வேளாங்கண்ணி, நாகப்பட்டினம், திருநள்ளாறு, புதுச்சேரி, திருத்துறைப்பூண்டி வேதாரண்யம், தூத்துக்குடி போன்ற பகுதிகளுக்கு செல்லும் அரசு விரைவு பஸ்கள் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிலிருந்தே இயக்கப்பட்டு வருகிறது.
பஸ் ஸ்டாண்டு: அதேபோல, திருச்சி, சேலம், ஈரோடு, தர்மபுரி, கோவை, திருப்பூர், வேலூர், திருவண்ணாமலை, ஓசூர், கடலூர், செஞ்சி, வந்தவாசி, சிதம்பரம் உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் அரசு போக்குவரத்துக் கழக பஸ்களும் வழக்கம்போல கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிலிருந்தே இயக்கப்பட்டு வருகிறது.
இதன்காரணமாக, கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில், எந்தெந்த இடங்களிலிருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது என்கிற விவரங்கள் அடங்கிய நோட்டீஸ் போர்டுகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன..
இந்நிலையில், அரசு போக்குவரத்து கழகம் நேற்று திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில், அரசு விரைவு பஸ்களில் ரிசர்வ் செய்த பயணிகள் கிளாம்பாக்கம் பஸ்நிலையத்துக்கு வந்து பஸ் ஏற வேண்டும் என்றும், ரிசர்வேஷன் செய்யாத பயணிகள் கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்கு சென்று பஸ் ஏற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
பயணிகள்: ஆனால், கடைசி நேரத்தில் வெளியானதால், இந்த அறிவிப்பை பலரும் கவனிக்கவில்லை.. அதனால், ரிசர்வ் செய்த பயணிகளும், ரிசர்வ் செய்யாத பயணிகளும் குழப்பமாகிவிட்டனர். எங்கே போய் பஸ் ஏறுவது என்று தெரியாமல் திணறினார்கள்.
ரிசர்வ் செய்யப்பட்டவர்களில் பலபேர் கிளாம்பாக்கத்துக்கு போகாமல், கோயம்பேட்டிற்கே பஸ் ஏற வந்துவிட்டனர். ஆனால், தாங்கள் செல்ல வேண்டிய பஸ்கள் அங்கே இல்லை என்றதும் அதிர்ச்சியாகினார்கள்..
இது தொடர்பாக விசாரிப்பதற்காக, உதவி மையங்களுக்கு சென்றால், அங்கேயும் ஊழியர்கள் இல்லையாம்.. அதனால், கலக்கமடைந்த பயணிகள், மற்ற பஸ் டிரைவர்கள், கண்டக்டர்களிடம் விசாரித்தபோதுதான், ரிசர்வ் செய்தவர்கள் கிளாம்பாக்கத்துக்கு சென்று ஏற வேண்டும் என்ற விவரமே தெரியவந்தது.
ஆனால், இதெல்லாமே கடைசி நேரத்தில் தெரியவந்ததால், கிளாம்பாக்கத்துக்கும் செல்ல முடியாமல் பஸ்களை தவறவிட்டனர். சிலருக்கு கிளாம்பாக்கத்துக்கு உரிய நேரத்தில் செல்ல முடியாமல் போய்விட்டது. இதனிடையே, ரிசர்வ் செய்யட்டவர்கள் வந்து சேராமல், கிளாம்பாக்கத்தில் பஸ்களை எடுக்காமல் டிரைவர்கள் காத்திருந்தனர்.
திணறிய பயணிகள்: அரை மணி நேரத்துக்கு மேல், ரிசர்வ் செய்யப்பட்டவர்கள் பலரும் கிளாம்பாக்கத்துக்கு வந்து சேராததால், டிரைவர்கள் பஸ்ஸை கிளப்பிக் கொண்டு சென்றுவிட்டனர்.. இறுதியில் ரிசர்வ் செய்யப்பட்டவர்களுக்கு உரிய பணம் திரும்ப வழங்கப்பட்டுவிட்டாலும், மறுபடியும் அவர்கள் சொந்த ஊர் திரும்பி செல்வதில் சிரமம் ஏற்பட்டுவிட்டதாம்.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மெகா ஆஃபர்: ஒரே மாதத்தில் 3 மாத ரேஷன்! மத்திய அரசின் சர்ப்ரைஸ் பின்னணி என்ன -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
மத்தி மீனின் "கோடி" ரூபாய் ரகசியம்.. விலை மலிவான இந்த மீனுக்குள் ஒளிந்திருக்கும் நன்மை! வரப்பிரசாதம்












Click it and Unblock the Notifications