கிளாம்பாக்கம் "இழுழுக்குதா".. அடியோடு மாறுதே.. மாஸ் வேகத்தில் தமிழ்நாடு அரசு.. விரைவில் ஸ்வீட் நியூஸ்
சென்னை: கிளாம்பாக்கம் பஸ் முனையத்தில் வடிகால் அமைக்கும் பணிகள் துரிதமாகி உள்ள நிலையில், விரைவில் பஸ் ஸ்டாண்டு திறக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
கிளாம்பாக்கத்தில் சுமார் 59.86 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து முனையத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து முடிந்துள்ளன. இதையடுத்து, கடந்த ஜுன் மாதமே, "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்" என்ற பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படவிருந்தது.

மழைநீர் வடிகால்: ஆனால், நடைமுறை சிக்கல்கள் இங்கு கிளம்பியதால், இதை திறந்து வைப்பது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்த பஸ் ஸ்டாண்டு பகுதியில், மழைநீர் தேங்குவது, மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.. கட்டுமான பணிகளின்போது, இந்த சிக்கல் தெரியாமல் இருந்த நிலையில், சென்னையில் பெய்த கோடை மழையால், பஸ் ஸ்டாண்டு பகுதி முழுவதுமே நீரில் மிதந்தது..
எனவே, தேங்கி நிற்கும் நீரை மறுபுறம் கொண்டு செல்ல ஜிஎஸ்டி சாலையின் குறுக்கே குழாய் அமைக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2 நாட்களுக்கு முன்பு பெய்த மழைநீரும், பஸ் ஸ்டாண்டை சுற்றி தேங்கியிருந்த வீடியோக்களும் போட்டோக்களும் இணையத்தில் வெளியாகியிருந்த நிலையில், இங்கு வடிகால் கட்டும் பணிகள் கையில் எடுக்கப்பட்டு அது தற்போது துரிதமாக நடந்து வருகிறது.
பஸ்கள், எளிதாக சென்று வரும் வகையில் கிளாம்பாக்கத்தை சுற்றி சாலை அமைக்கவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.. அதேபோல, பஸ்நிலைய மேற்கூரை பணிகள், பயணிகள் வந்து தங்குவதற்கான தங்குமிடம், உணவகம், கடைகள் பணிகளும் நிறைவடையாமல் இருக்கிறது.
பஸ் நிறுத்தம்: இந்த பணிகள் அநேகமாக இந்த மாதத்திற்குள் முடித்துவிட முடியாது என்பதால்தான், கிளாம்பாக்கம் பஸ்நிலைய திறப்பு தள்ளிப்போகும் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.. அதேசமயம் ஆம்னி பஸ் நிறுத்தம் விவகாரம் மிகப்பெரிய விஸ்வரூபமெடுத்துவிட்டது..
ஏற்கனவே, அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் 51 டிராவல்ஸ் அலுவலகங்கள், 80 பஸ் பே, 151 நிறுத்தங்கள், 14 பயணிகள் காத்திருப்பு கூடம், 22 கடைகள் உள்ளன.
இங்கு தென்தமிழகத்துக்கு பேருந்துகளை இயக்கும் 240 நிறுவனங்கள் உள்ளிட்ட 270 நிறுவனங்கள் செயல்படுகின்றன. இவற்றின் மூலம் வார நாட்களில் 850 பேருந்துகளும், வார இறுதி, விழாக் காலங்களில் 1,450 பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி இன்று (10.7.2023) @CMDA_Official அலுவலக கூட்டரங்கில் எனது தலைமையில் கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தில் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவது குறித்து தனியார் ஆம்னி பேருந்து சங்க உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டமும்(1/2) pic.twitter.com/x9bdiFp0Qp
— P.K. Sekar Babu (@PKSekarbabu) July 10, 2023
கிளாம்பாக்கம்: ஆனால் கிளாம்பாக்கத்திலோ 62 பஸ் பே, 130 நிறுத்தங்கள் மட்டுமே வழங்கப்படவுள்ளன. எனவே, திறக்கப்படவுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலோ, அதன் அருகிலோ ஆம்னி பேருந்துகளுக்கு குறைந்தளவு 500 நிறுத்தங்கள் போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து தர வேண்டும். அதன்பிறகு, கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தை முற்றிலும் காலி செய்து கிளாம்பாக்கத்துக்கு மாற்றலாம்" என்று கேட்டுக் கொண்டிருந்தனர்.
இவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்த்து, ஆம்னி பஸ் நிறுத்தத்திற்கான இடத்தை படப்பை அருகில் தேர்வு செய்து இருந்தனர். ஆனால், அந்த இடத்தை ஆய்வு செய்தபோது ஆம்னி பஸ்கள் கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்டு வரும்போதும், பயணிகளை ஏற்றி செல்லும்போதும், 2 முறை டோல்கேட்டுக்கான கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கிறது.. அதனால், ஆம்னி பஸ் நிலைய இடத்திற்காக, வேறு இடத்தையும் ஆய்வு செய்து கொண்டு இருப்பதாக தெரிகிறது.
சேகர்பாபு: இதற்கான ஆலோசனை கூட்டம்தான் தற்போது, அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடந்து முடிந்துள்ளது.. சென்னை பெருநகர் வளர்ச்சி குழு அலுவலக கூட்டரங்களில் அமைச்சர் சேகர்பாபு தலைமையில் இந்த கூட்டம் நடந்துள்ளது. . அப்போது கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்தில் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவது குறித்தும், அந்த பணிகளுடன் சேர்ந்து நடைபெற்று வரும் இதர பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இந்த கூட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்த்துறை முதன்மை செயர் செல்வி அபூர்வா, சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழு உறுப்பினர் செயலார் அன்சூர் மிஸ்ரா, மாநகர பேருந்து கழக மேலாண்மை இயக்குனர் அன்பு ஆபிரகாம், சிஎம்டிஏ தலைமை திட்ட அமைப்பாளர்கள், அரசு விரைவு பேருந்து போக்குவரத்து கழக பொதுமேலாளர்கள், நெடுஞ்சாலைத்துறை, காவல்தறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
நம்பிக்கை: ஆக மொத்தம், ஆய்வுப்பணிகள் வேகம் எடுத்து வருவதால், விரைவில் பஸ் முனையம் திறக்கப்பட்டுவிடும் என்று தெரிகிறது... இந்த கிளாம்பாக்கம் பஸ் முனையம் மட்டும் வந்துவிட்டால், ஒட்டுமொத்த சென்னைக்கே ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்றும் நம்பப்படுகிறது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி!












Click it and Unblock the Notifications