Kilambakkam: கிளாம்பாக்கம் பயணிகளுக்கு காத்திருக்கும் ”பொங்கல் கிஃப்ட்..” நீண்ட கால எதிர்பார்ப்பு நிறைவேற போகுது
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரே அமைக்கப்பட்டு வந்த கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலைய கட்டுமான பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. நீண்ட நாட்களாக பயணிகள் எப்போது திறக்கப்படும் என்று எதிர்பார்த்து உள்ள நிலையில் தற்போது மீண்டும் தள்ளி போயுள்ளது. எனினும் எப்போது திறக்கப்படும் என்ற அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது 83 சதவீத பணிகள் முடிந்துவிட்டதாகவும், வரும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி மாதத்தில் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னை புறநகர் பேருந்து நிலையமாக 20 ஆண்டுகளுக்கு மேலாக கோயம்பேடு பேருந்து நிலையம் செயல்பட்டு வந்தது. இங்கிருந்தே தமிழகத்தின் பிற மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு கிளாம்பாக்கத்தில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
வண்டலூர் - ஊரப்பாக்கம் அருகே ஜிஎஸ்டி சாலையில் ரூ.400 கோடி மதிப்பீட்டில் இந்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டது. கடந்த 2023 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட இந்த பேருந்து நிலையத்தில் ஆரம்பத்தில் அடிப்படை வசதிகள் இல்லை என தொடர்ந்து பயணிகள் குற்றச்சாட்டு வைத்தனர். இதன்பிறகு பயணிகளின் குறைபாடுகள் ஒவ்வொன்றாக சரி செய்யப்பட்டது.
தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தினை 1.3 லட்சம் பயணிகள் பயன்படுத்தி வருகிறார்கள். வார இறுதி நாட்களில் 1.5 லட்சம் பயணிகள் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், தற்போதும் இந்த பேருந்து நிலையத்திற்கு சென்னையின் பிற பகுதிகளில் இருந்து வந்து செல்ல மாநகர பஸ்கள் மட்டுமே இயக்கப்படுவதால், ரயில் நிலையம் அமைக்க கோரி கோரிக்கை வைத்தனர். அதன்படி கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு எதிரே புது ரயில் நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
எப்போது பயன்பாட்டுக்கு திறக்கப்படும்?
இதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த 2024 ஆம் ஆண்டு இதற்கான கட்டுமான பணிகள் தொடங்கி நடந்து வந்தன. வண்டலூர் அல்லது ஊரப்பாக்கம் ரயில் நிலையம் சென்று தான் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்ல முடியும். இதனால் தான் பயணிகளின் வசதிகளுக்கு ஏற்ப வண்டலூர் மற்றும் ஊரப்பாக்கம் இடையே கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது.
நடப்பு ஆண்டில் பயன்பாட்டுக்கு வந்துவிடும் என உறுதி அளிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது புதிய ரயில் நிலையம் திறப்பு என்பது தள்ளிப் போய் உள்ளது. மூன்று நடைமேடைகளில், ஒன்று மட்டுமே முழுமையாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது நடைமேடை கட்டுமான பணி நிறைவடையும் தருவாயில் உள்ளது. மூன்றாவது நடைமேடை ஆரம்பக் கட்டத்தில் உள்ளது.
பொங்கல் கிஃப்டாக கிளாம்பாக்கம் ரயில் நிலையம்
பருவமழை தொடங்க இருப்பதால் அதற்குள் பணிகளை விரைந்து முடிக்கும் வகையில் பணியானது வேகமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் தான் கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையம் எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். அடுத்த ஆண்டு, அதாவது வரும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி மாதத்தில் கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையம் திறக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 83 சதவீத பணிகள் முடிந்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மார்ச் மாதம் ஆகிவிடும்
டிசம்பர் மாதத்தில் திறக்கப்படும் என்ற எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தையும், ரயில் நிலையத்தையும் இணைக்கும் ஸ்கைவாக் திட்ட பணியானது இன்னும் நடந்து வருவதாலும் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்பது மீண்டும் தள்ளிப் போய் உள்ளது. தசரா, தீபாவளி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகை என அடுத்தடுத்து பண்டிகை காலங்கள் வருவதால், கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அதற்குள் திறக்கப்படும் என நினைத்த பயணிகளுக்கு சற்று ஏமாற்றம் அளித்துள்ளது இந்த அறிவிப்பு.
எனினும் நிச்சயமாக பொங்கல் பண்டிகையையொட்டி கிளாம்பாக்கம் ரயில் நிலையம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததால், நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பயணிகளின் கனவு நிறைவேறப் போகிறது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications