இன்னும் 3 மாதம் தான்.. கிளாம்பாக்கம் ரயில் நிலையம் ரெடியாகிடும்.. பயணிகளுக்கு சர்ப்ரைஸ் தந்த ரயில்வே
சென்னை: கிளாம்பாக்கம் ரயில் நிலையம் இன்னும் 2 அல்லது 3 மாதத்தில் திறக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயில் நடைமேடை அமைக்கும் பணி 80 சதவீதம் முடிந்துள்ளது என்றும் மற்ற கட்டுமான பணிகளும் வேகமாக நடந்து வருகிறது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் எப்போது கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறக்கப்படும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
சென்னையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசல் காரணமாக அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது. அதன் ஒரு பகுதியாகத் தான் கோயம்பேடு பேருந்து நிலையத்தால் நகருக்குள் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாக கூறி, சென்னை வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் ரூ.394 கோடியில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திறக்கப்பட்டது.

கிளாம்பாக்கம் ரயில் நிலையம்
சென்னையில் இருந்து சுமார் 26 கிலோ மீட்டர் தொலைவில் இந்த பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு இருந்ததால் பயணிகள் வந்து செல்ல கடும் சிரமத்தை சந்தித்தனர். இதேபோல் இந்த பேருந்து நிலையத்திற்கு செல்ல புறநகர் மின்சார ரயில் வசதி இல்லாததால் பயணிகள் கடும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளதாக ஆதங்கப்பட்டனர். தாம்பரம் டூ செங்கல்பட்டு வழித்தடத்தில் கிளாம்பாக்கம் அருகில் உள்ள வண்டலூர் ரயில் நிலையமும், ஊரப்பாக்கம் ரயில் நிலையம் நடந்து செல்லும் தூரத்தில் இல்லை.
இதனால் கிளாம்பாக்கத்தில் புறநகர் மின்சார ரயில்கள் நின்று செல்ல புதிய ரயில் நிலையம் அமைக்க தமிழக அரசு சார்பில் ரயில்வேக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. பயணிகளுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னை நகருக்குள் வருவதற்கு பஸ்கள் இயக்கப்பட்டாலும், பெரியவர்கள், குழந்தைகள், லக்கேஜ்களுடன் வரும் பயணிகளுக்கு இது சற்று சிரமமாகவே இருந்தது. இதனால் பயணிகள் வசதிகளை கருத்தில் கொண்டு கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க ரயில்வேக்கு தமிழக அரசு பரிந்துரைத்தது.
பணிகள் முடிவடைய தாமதம்
அதன்படி, ஊரப்பாக்கம் மற்றும் வண்டலூருக்கு இடையில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்க ரயில்வே ஒத்துக்கொண்டது. ரூ.20 கோடி மதிப்பீட்டில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் நடந்தன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையத்தினை ஒன்றிணைக்கும் வகையில் நடைமேம்பாலம் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதன்படி நிலம் கையகப்படுத்தப்பட்டு பணிகள் வேகமாக நடந்தன.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்ட நிலையில், வடகிழக்கு பருவமழையால் தாமதமடைந்தது. பின்னர் பணிகள் வேகமெடுத்த நிலையில் மீண்டும் நிலம் கையகப்படுத்துவதனால் தாமதம் ஏற்பட்டது. இதனால் எப்போது தான் பணிகள் முடிந்து கிளாம்பாக்கம் ரயில் நிலையம் திறக்கப்படும் என பயணிகள் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் தான் தற்போது வரும் ஜூலை அல்லது ஆகஸ்டு மாதத்திற்குள் பணிகள் அனைத்தும் முடிந்து கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பயணிகள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜூலை அல்லது ஆகஸ்டுக்குள்
இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது:- ரயில் நடைமேடை அமைக்கும் பணி 80 சதவீதம் முடிந்துள்ளது. ரயில் நிலையத்திற்கான நுழைவு வாயிற்பகுதி அமைக்கும் பணி நடந்து வருகிறது. ரயில் பிளாட்பார்ம் மேற்கூரை அமைக்கும் பணிகளும் வேகமாக நடந்து வருகின்றன. இதேபோன்று ரயில் நிலைய டிக்கெட் அறை, கழிவறை அமைக்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் அதாவது ஜூலை அல்லது ஆகஸ்டு மாதத்திற்குள் பணிகள் முழுவதும் முடிவடைந்து கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பயணிகள் பயன்பாட்டுக்கு திறக்கப்படும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கிளாம்பாக்கம் ரயில் நிலையமானது மூன்று பிளாட்பார்மகள் உள்ளவாறு அமைக்கப்படுகிறது. மேலும் 12 பெட்டிகள் கொண்ட மின்சார ரயில்கள் நிற்கும் தூரத்திற்கு பிளாட்பார்ம்களும், மேற்கூரைகளும் அமைக்கப்படுகிறது. ரயில் நிலைய மேலாளர் அறை, பார்க்கிங் வசதி, டிக்கெட் அலுவலகம், நகரும் படிக்கட்டுகள், கண்காணிப்பு கேமராக்கள், நடைமேம்பாலம் போன்ற அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் 2 மாதத்தில் ரயில் நிலையம் திறக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்து இருப்பது பயணிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications