'கிங் மேக்கர்’.. மோடியை வீழ்த்த ஸ்டாலின் போடும் படு சீக்ரெட் பிளான்! உண்மை உடைக்கும் பத்திரிகையாளர்!
ஒரு பவர்ஃபுல் அரசியல் வாய்ப்பு ஸ்டாலின் கையில் வரப்போகிறது, அடுத்து வரக்கூடிய 14 மாதங்கள் மிக முக்கியமானவை என பத்திரிகையாளர் மணி கூறியுள்ளார்.
சென்னை : 2024 தேர்தலில் 'கிங் மேக்கர்' ஆகும் வாய்ப்பு ஸ்டாலின் கையில் இருக்கிறது, குறிப்பாக 3 பிரதான கட்சிகளை காங்கிரஸோடு கொண்டு வந்து சேர்த்து மாற்று அரசை அமைப்பதற்கான செயல்திறனும், அரசியல் வல்லமையும் ஸ்டாலினுக்கு இருக்கிறது என மூத்த பத்திரிகையாளர் மணி, நமது ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ளர் பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெறும் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்தில் தேசிய அரசியலில் முக்கியமான தலைவர்களான காங்கிரஸின் மல்லிகார்ஜூன கார்க்கே, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் பங்கேற்றுப் பேசுகின்றனர்.
இந்த ஒருங்கிணைப்பு, பாஜகவுக்கு எதிரான கூட்டணியை வலுப்படுத்துமா? 2024 தேர்தலில் மு.க.ஸ்டாலினின் பங்கு என்ன? காங்கிரஸோடு அந்த 3 கட்சிகள் இணைய வாய்ப்புள்ளதா என்பது பற்றி விரிவாகப் பேசியுள்ளார் மூத்த பத்திரிகையாளர் மணி.

பாசிட்டிவ் நிகழ்வு
கேள்வி : முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் தேசிய அளவிலான அரசியல் தலைவர்கள் பங்கேற்கிறார்கள். இன்னும் ஓராண்டில் நாடாளுமன்றத் தேர்தல் வரவிருக்கும் சூழலில் இந்த மாநாடு எந்தளவுக்கு தேசிய முக்கியத்துவம் பெறுகிறது?
பத்திரிகையாளர் மணி : கருணாநிதி இருந்தபோது இதுபோல பல தலைவர்கள் வந்திருக்கிறார்கள். இந்த முறை ஃபரூக் அப்துல்லா, தேஜஸ்வி யாதவ், அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோர் வருகிறார்கள். தேசிய அளவில் ஸ்டாலினின் அரசியல் ஆளுமை விஸ்தரிப்பு அடைவதற்கான முக்கிய நிகழ்வாக நாம் இதனை பார்க்க வேண்டும். ஏற்கனவே ஸ்டாலினின் ‘உங்களில் ஒருவன்' புத்தக வெளியீட்டு விழாவில் ராகுல் காந்தி, பினராயி விஜயன், உமர் அப்துல்லா உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர். அதன் தொடர்ச்சியாகவே நாம் இதனை பார்க்க வேண்டும். 2024 தேர்தலுக்கு முன்னதான அரசியல் அணிச்சேர்க்கையின் தொடக்கமாகவும் இதை நாம் பார்க்கலாம். இது பாசிட்டிவ்வான அரசியல் நிகழ்வு.

பொறுப்பு ஸ்டாலின் கையில்
கேள்வி : தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு ஸ்டாலினின் கைக்கு வந்திருப்பதாக நாம் இதனை எடுத்துக்கொள்ளலாமா?
மணி : பொறுப்பு முழுமையாக ஸ்டாலினிடம் வந்துவிட்டது என்று சொல்ல முடியாது. ஆனால், அவருக்கு ‘மேஜர் ரோல்' இருக்கிறது என்பது உண்மை. இடதுசாரிகள் காங்கிரஸோடு இணக்கமாக இருக்கிறார்கள். பிராந்திய கட்சிகள் அனைத்தும் காங்கிரஸோடு இணக்கமாக இருக்கிறது என்று சொல்ல முடியாது. டிஎம்சி மம்தா பானர்ஜி ஒருபக்கம் நிற்கிறார். பிஆர்எஸ் சந்திரசேகர் ராவ் ஒருபக்கம் நிற்கிறார். ஆம் ஆத்மி கட்சி ஒருபக்கம் திரும்பி நிற்கிறது. இவர்கள் எல்லாம் காங்கிரஸ் கட்சியோடு அவ்வளவு எளிதில் உறவு வைத்துக்கொள்ள மாட்டார்கள். அதேநேரம், சிவசேனா உத்தவ் தாக்கரே, ஜனதாதளம், தேசிய மாநாட்டுக் கட்சி ஃபரூக் அப்துல்லா, மெகபூமா முப்தி உள்ளிட்டோர் காங்கிரஸோடு இணக்கமாக இருக்கிறார்கள். ஆகவே இந்த சூழலில் முக்கியமான பிராந்திய கட்சிகளாக இருக்கும் திரிணாமுல், பிஆர்எஸ், ஆம் ஆத்மி ஆகியவற்றை காங்கிரஸ் கூட்டணியில் இணைப்பதற்கான வேலையில் முக்கியமான ரோல் செய்யும் இடத்தில் ஸ்டாலின் இருக்கிறார். இந்த மூன்று கட்சிகளுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையேயான இணைப்புப் பாலமாக ஸ்டாலின் உருவெடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகவே இருக்கின்றன.

தேர்தலுக்கு பிந்தைய கூட்டணி
அந்தவகையில் ஸ்டாலினுக்கு ஒரு வரலாற்றுக் கடமை காத்திருக்கிறது. அதை எப்படி அவர் நிறைவேற்றப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். பிரதமர் மோடி ‘கேக் வாக்' போல எளிதாகவெல்லாம் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க முடியாது. அதேசமயம், பாஜக ஆட்சியை இழந்துவிடும் என்று சொல்ல முடியாது. பெரும்பான்மையை விட குறைவான சீட்களை பெற்றாலும், 240+ சீட்களோடு தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளும் வாய்ப்புகள் அதிகம். ஓர் அதிசயம் நிகழ்ந்தால், பாஜக ஆட்சியை விட்டு அகற்றப்பட்டு காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமையலாம். ஆனால், இன்றைய சூழலில் அதற்கு வாய்ப்புகள் குறைவுதான். ஏனெனில் காங்கிரஸ் இன்றைக்கு பலவீனமான நிலையிலேயே இருக்கிறது. எதிர்க்கட்சிகள் மிகப்பெரிய அளவில் மேலோங்கி வந்தால் மட்டுமே மோடியை வீழ்த்த முடியும். அந்த இடத்தில் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியை வலிமைப்படுத்தும் இடத்தில் ஸ்டாலின் இருக்கிறார்.

அந்த 3 கட்சிகள்
தேர்தலுக்கு முந்தைய கூட்டணி சாத்தியமற்றது. பிஆர்எஸ் கட்சிக்கும் காங்கிரஸுக்கும் தான் தெலுங்கானாவில் பெரிய போட்டி. அதனால், அங்கு சீட் பங்கீடுக்கு வாய்ப்பே இல்லை. ஆம் ஆத்மியுடன் டெல்லி, பஞ்சாப்பில் காங்கிரஸ் நேரடியாக மோதுவதால், அக்கட்சியுடனும் கூட்டணிக்கு வாய்ப்ப்பில்லை. திரிணாமுல் கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் மேற்கு வங்கம், கோவா, மேகாலயாவில் பவர் மோதல் நடப்பதால், அந்த அணிக்கும் வாய்ப்பு இல்லை. இந்த கட்சிகள் தங்கள் அரசியல் போட்டியை காங்கிரஸூக்கு ஒரு இன்ச் கூட விட்டுத்தர மாட்டார்கள். ஒரே வாய்ப்பு, தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி தான். 100 சீட்களை காங்கிரஸ் தாண்டினால் கண்டிப்பாக காங்கிரஸ் தலைமையில் தான் ஆட்சி. அப்படி ஒரு சூழல் அமைந்தால், இந்த 3 கட்சிகளையும் கொண்டு வந்து 2004 போல பெரிய கூட்டணியை கட்டமைப்பதற்கு மிகப்பெரிய பங்கை ஆற்றக்கூடிய இடத்தில் ஸ்டாலின் இருக்கிறார்.

கூட்டத்தில் மிஸ்ஸிங்
எனவே, இந்த பொதுக்கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் என்ன ஒரு சோகமான உண்மை என்றால், இந்த கூட்டத்தில் ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், பிஆர்எஸ் ஆகிய 3 கட்சிகளுமே பங்குபெறவில்லை. அந்த கட்சிகளின் சார்பில் யாருமே கலந்துகொள்ளவில்லை. இது ஒரு மைனஸ் தான். அடுத்து வரவுள்ள மக்களவைத் தேர்தலில் ஸ்டாலின் முன் உள்ள மிகப்பெரிய சவால் என்பது, இந்த 3 கட்சிகளின் தலைவர்கள் இந்த விழா மேடையில் இல்லாமல் இருப்பதுதான். கொஞ்சமாவது தேர்தலுக்கு முந்தைய கூட்டணி வலுவாக இருந்தால் தான், தேர்தலில் சீட்களே கிடைக்கும். மொத்தமாக தேர்தலுக்குப் பிறகு பார்த்துகொள்ளலாம் என்று நினைத்தால் பாஜகவை வீழ்த்துவதே மிகக் கடினம். மோடியை தோற்கடிப்பது என்ற ஒரு நோக்கத்தில் கூட்டணியை ஏற்படுத்தினால் தோல்வி தான். கொள்கை சார்ந்ததாக, தத்துவ ரீதியிலான, செயல் திட்டத்தின் அடிப்படையிலான கூட்டணியாக அமைந்தால் எளிதாக இருக்கும். அதற்கு மதமாச்சர்யங்களை கோபதாபங்களை கைவிட்டு தலைவர்கள் ஒன்று சேர வேண்டும். பல்வேறு ஈகோ கொண்ட தலைவர்களை ஒன்றிணைப்பதற்கு ஆளுமை மிக்க தலைவர்கள் இன்று இல்லை.

இந்திரா காந்தி போல
1971ல் இந்திரா காந்தியை எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து எதிர்த்தபோது, அது எப்படி அத்தனை பேரும் சேர்ந்து ஒருவரை எதிர்க்கின்றனர் ‘பேக் ஃபயர்' ஆகி இந்திரா காந்தி பெரிய வெற்றி பெற்றாரோ, அதேபோல, மோடியை எதிர்க்க இத்தனை பேரா என பின்விளைவை ஏற்படுத்தக்கூடும். பிரதமர் மோடி நேருவை திட்டுகிறார், ஆனால் அவர் ரோல் மாடலாக எடுத்திருப்பது இந்திரா காந்தியைத்தான். ஆனால், இந்திரா மதச்சார்பற்ற சர்வாதிகாரியாக இருந்தார். மோடி பெரும்பான்மை மதவெறியை தூக்கிப் பிடிக்கும் சர்வாதிகாரியாக இருக்கிறார். எதிர்க்கட்சி ஒற்றுமையின்மை எப்படி இந்திரா காந்தி மீண்டும் மீண்டும் வெற்றி பெற உறுதுணையாக இருந்ததோ அதேபோல மோடிக்கும் எதிர்க்கட்சியினரின் ஒற்றுமையின்மை உறுதுணையாக இருக்கிறது.

கிங் மேக்கர்
நவ கிரகங்களாக திரும்பி நிற்கும் கட்சிகளை ஒன்றிணைத்தால் மட்டும்தான் மோடியை வீழ்த்த முடியும். காங்கிரஸ் மற்றும் மாநிலக் கட்சிகள் சேர்ந்து பாஜகவை விட அதிக சீட்களைப் பெற்றால், மாநிலக் கட்சிகள், தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவாவது காங்கிரஸ் ஆட்சியை அமைக்க ஒத்துழைப்பார்கள். இதில் ஒரு ‘கிங் மேக்கர்' ரோலை செய்யும் இடத்தில், குறிப்பாக 3 கட்சிகளை காங்கிரஸோடு கொண்டு வந்து சேர்த்து மாற்று அரசை அமைப்பதற்கான செயல்திறனும், அரசியல் வல்லமையும் ஸ்டாலினுக்கு இருக்கிறது. பாஜகவுக்கு எதிரான அலை வீசும் மாநிலங்களில் முக்கியமானது தமிழ்நாடு. எனவே, 2024லும், 2019 தேர்தலின் டிட்டோவாகவே இருக்கும். அப்படி ஒரு சூழல் வரும்போது, ஒரு பவர்ஃபுல் அரசியல் வாய்ப்பு ஸ்டாலினிடம் இருக்கும். எனவே அடுத்து வரக்கூடிய 14 மாதங்கள் மிக முக்கியமானவை. இவ்வாறு மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார்.
-
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
பாமக வரலாற்றிலேயே முதல் முறையாக.. 35 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகக் குறைவான தொகுதிகளில் போட்டி! -
விடிய விடிய நடந்த பேச்சுவார்த்தை.. புதுவையில் திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிப்பு -
கமல்ஹாசன் செய்தது தியாகம்.. எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. முதல்வர் ஸ்டாலின் நெகிழ்ச்சி -
மதுரை வடக்கில் சரவணனுக்கு சீட் இல்லையா? தாமரை சின்னத்தில் களமிறங்கும் திருமாறன்.. பின்னணியில் மூவர்! -
சிங்காநல்லூர் அல்லது கவுண்டம்பாளையம்.. ஒரு தொகுதியை கொடுங்க.. பியூஷ் கோயலிடம் கேட்ட அண்ணாமலை? -
அதிமுக கூட்டணியில் தமாகவுக்கு 5 இடங்கள் ஒதுக்கீடு.. தாமரை சின்னத்தில் போட்டி.. தொகுதிகள் லிஸ்ட் -
அவிநாசி அல்லது மேட்டுப்பாளையம்.. 2ல் ஒரு தொகுதியில் போட்டியிடும் மத்திய இணையமைச்சர் எல்.முருகன்? -
Annamalai: அதிமுக அலுவலகத்தில் அண்ணாமலையை காணோமே! ஆதரவாளர்கள் அப்செட்! எடப்பாடி கண்டிஷனா? -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு












Click it and Unblock the Notifications