மீன்களின் ராஜா புலசா ரூ.26000-க்கு ஏலம் சாதனை.. 1.3 கிலோ மீனில் அடுத்த சில நிமிடங்களில் ஆச்சரியம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மீன்களின் ராஜா என்று அழைக்கப்படும் புலசா மீனுக்கு எப்போதுமே கிராக்கி இருக்கத்தான் செய்கிறது.. கோதாவரி ஆற்றில் பரவலாக இத்தகைய மீன்களுக்கு, ஆந்திரா, தெலங்கானா பகுதிகளில் கூடுதல் மவுசு உண்டு. இப்போது புதுச்சேரியில் ஒரு ஆச்சரிய சம்பவம் நடந்து அனைவருக்கும் வியப்பை கூட்டி உள்ளது.. இது தொடர்பான போட்டோவும் இணையவாசிகளை கவர்ந்து வருகிறது.

புலசா மீன் (Hilsa / Pulasa) பார்ப்பதற்கு வெள்ளி போல பளபளக்கும் உடலமைப்புடனும், கூர்மையான தலையுடனும், தட்டையான உடலுடனும் காணப்படும்.. சமைத்து சாப்பிட்டால் இதன் ருசி சூப்பராக இருக்கும்.. ஏராளமான மருத்துவ குணம் கொண்ட மீன்களில் இதுவும் ஒன்றாகும்.

Pulasa Fish Fish Auction Pulasa Fish Price

மீன்களின் ராஜா - புலசா மீன்

புலசா மீனில் புரோட்டீன், வைட்டமின் A, வைட்டமின் D மற்றும் தாது உப்புகள் எலும்புகளின் பலத்திற்கும், கண் பார்வைக்கும், உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிப்பதற்கும் உதவுகின்றன..

முக்கியமாக, இதய ஆரோக்கியத்திற்கேற்ற ஓமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இந்த மீனில் அபரிமிதமாக உள்ளன. அத்துடன் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தவும், கெட்ட கொழுப்பைக் குறைக்கவும், மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும் இந்த புலசா மீன்கள் உதவுகின்றன.

புலசா மீன்கள் சத்துக்கள்

இந்த மீன் முக்கியமாக ஆந்திரப் பிரதேசத்தின் கோதாவரி நதி மற்றும் அது வங்காள விரிகுடாக் கடலில் சங்கமிக்கும் முகத்துவாரப் பகுதிகளில் மட்டுமே புலசா மீன்கள் காணப்படும்.. குறிப்பாக பருவகாலத்தில் அதாவது ஆடி-ஆவணி மாத மழைக்காலத்தில் கிடைக்கிறது. கடலில் இருந்து நதியை நோக்கி இனப்பெருக்கத்திற்காக எதிர்நீச்சலடித்து வரும்.. அந்த நேரத்தில் மீனவர்கள் இந்த மீனை பிடித்து விடுகிறார்கள்.

இதன் அரிதான தன்மையினாலும், அரிய சுவையினாலும், இது அதிக விலைக்கு விற்கப்படும் ஒரு உயர்தர மீன் வகையாகும். அதிக சுவை மற்றும் புரதசத்து மிக்க இந்த மீனை ஏலம் எடுப்பதில் அடிக்கடி போட்டி ஏற்பட்டது. இந்த மீன் பிடிபடும் போதெல்லாம், அதன் எடையைப் பொறுத்து போட்டுக்கொண்டு மீன் பிரியவர்கள் வாங்கி செல்வார்கள்..

ஆரம்ப விலையே ரூ.26 ஆயிரம்

அப்படித்தான் இப்போதும், புதுச்சேரியில் இந்த புலசா மீன் கிடைத்துள்ளது.. ஏனாம் பிராந்தியத்தில் உள்ள கவுதமி கோதாவரி ஆற்றில் மீனவர்களின் வலையில் 1,300 கிராம் எடையுள்ள புலசா மீன் ஒன்று சிக்கியது. இந்த மீன் ஏனாம் மீன் அங்காடியில் உள்ள ஏல மையத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு நடந்த ஏலத்தில் மீனின் ஆரம்ப விலையே ரூ.26 ஆயிரமாக இருந்தது.

காக்கிநாடா கோட்டிபள்ளியைச் சேர்ந்த மீனவர் மல்லாடி சத்யநாராயணா அந்த மீனை ரூ.26 ஆயிரத்துக்கு ஏலத்தில் எடுத்தார். அதன் பிறகு அதிக நேரம் வைத்திருக்காமல், ரூ.1000 லாபம் வைத்து அடுத்த சில நிமிடங்களிலேயே ரூ.27 ஆயிரத்துக்கு இன்னொருவருக்கு விற்பனை செய்தார்.

இதில் இன்னொரு முக்கியமான விஷயமும் இருக்கிறது. கடந்த 10 நாட்களில் கவுதமி கோதாவரி ஆற்றில் சுமார் 7 புலசா மீன்கள் மட்டுமே கிடைத்துள்ளன. அவற்றில் கிடைத்த மீன்கள் ரூ.14 ஆயிரம் முதல் ரூ.22 ஆயிரம் வரை விற்பனையாகியுள்ளன. ஆனால், தற்போது கிடைத்துள்ள இந்த 1.3 கிலோ எடையுள்ள புலசா மீன் ரூ.27 ஆயிரத்துக்கு விலை போயுள்ளது.

10 நாட்களில் 7 மீன்கள்

அதாவது, கடந்த சில நாட்களில் கிடைத்த புலசா மீன்களின் விலையை ஒப்பிடும்போது, இந்த மீனின் விலை மேலும் உயர்ந்துள்ளது. இந்த ஆண்டில் ஏனாம் பகுதியில் ஒரு புலசா மீனுக்கு கிடைத்த அதிகபட்ச விலை ரூ.27 ஆயிரம்தான் என்று விற்பனையாளர்கள் சொல்கிறார்கள்.

மழைக்காலத்தில் புலசா மீன்களின் வரத்து மிகவும் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. கடந்த 10 நாட்களில் வெறும் 7 மீன்கள் மட்டுமே கிடைத்திருப்பதும் இதற்கு ஒரு உதாரணமாக பார்க்கப்படுகிறது.

வரத்து குறைவாக இருப்பதால் இந்த மீனுக்கான தேவையும், அதற்கேற்ப விலையும் அதிகமாக இருப்பதாக விற்பனையாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது. புலசா மீனுக்கு தனிச்சுவை இருப்பதுடன், மருத்துவ குணங்களும் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த மீன் பிடிபடும் போதெல்லாம், அதன் எடையைப் பொறுத்து போட்டுக்கொண்டு மீன் பிரியவர்கள் வாங்கி செல்வார்கள்..

புதுச்சேரி ஏலத்தில் சாதனை

குறிப்பாக மூளை வளர்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு இது சிறந்தது என்ற நம்பிக்கையும் மக்களிடம் உள்ளது. இதனால்தான் புலசா மீன் கிடைத்தாலே அதன் விலை சாதாரண மீன்களைப் போல இல்லாமல் பல ஆயிரம் ரூபாயைத் தாண்டுகிறது.

இந்த ஆண்டும் இதுவரை இல்லாத வகையில் ஒரு புலசா மீன் ரூ.27 ஆயிரத்துக்கு விற்பனையாகியுள்ளது. வெறும் 1,300 கிராம் எடையுள்ள ஒரு மீன், ஏலத்தில் ரூ.26 ஆயிரத்துக்கு எடுக்கப்பட்டு, சில நிமிடங்களில் ரூ.27 ஆயிரத்துக்கு மறுவிற்பனை செய்யப்பட்டிருப்பது புலசா மீனுக்குள்ள மவுசை காட்டுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+