முட்டிக்கு மேல் தண்ணீர்.. மேடு பள்ளம் தெரியாத அளவுக்கு ஈக்காட்டுத்தாங்கலில் வெள்ளம்!
சென்னை: சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் அதிக அளவு தண்ணீர் தேங்கியுள்ளதால் முழங்காலுக்கு மேல் தண்ணீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வளி மண்டல மேலடுக்கு சுழற்சியால் சென்னை உள்பட தமிழகத்தில் பரவலாக மழை பெய்தது. இதனால் முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. குறிப்பாக வடசென்னையில் அதிக அளவு மழை நீர் தேங்கியுள்ளது.
வடசென்னை மற்றும் மத்திய சென்னையில் 2015 க்கு பிறகு காணாத மழை வெள்ளம் தற்போது ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால் சென்னையில் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

வெள்ளக்காடாக காட்சியளிக்கும் பகுதிகள்
வீடுகளுக்குள் புகுந்த நீரை அப்புறப்படுத்தும் பணிகளில் வீட்டில் வசிப்போர் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் ஈக்காட்டுத்தாங்கல், வேளச்சேரி, திநகர், அசோக் நகர், மடிப்பாக்கம், மயிலாப்பூர், முடிச்சூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் வெள்ளம்போல் தேங்கியுள்ளது.

பேருந்து நிலையம்
ஈக்காட்டுத்தாங்கலில் பேருந்து நிலையம் அருகே முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியுள்ளது. அம்பாள் நகர் அருகே நிறைய மேன்ஷன்கள் இருப்பதால் அந்த தெருக்களில் போக போக தண்ணீரின் அளவு அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த மழைக்கே இப்படி என்றால் இன்று மதியம் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டால் தண்ணீரின் அளவு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

ஹோட்டல்கள்
மேன்ஷன்களில் இருப்போர் உணவுக்காக வெளியே உள்ள ஹோட்டல்களை நாடும் நிலை உள்ளது. டீ, காபி குடிக்க வேண்டுமென்றாலும் வெளியே வர வேண்டிய நிலை உள்ளதால் அவர்கள் அந்த மழை நீரில் நீந்தி வர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. நிற்கக் கூட இடமில்லாத அளவுக்கு மழை நீர் தேங்கியுள்ளது.

மழைநீர்
ஈக்காட்டுத்தாங்கல் பேருந்து நிலையம் அருகே மழை நீர் தேங்கியுள்ளதால் மக்கள் பேருந்துகளில் ஏறுவதற்கு சிரமமான நிலை உள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சாலைகளில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இல்லை. ஆனால் நாளை திங்கள்கிழமைக்குள் மழை நீரை அகற்றாவிட்டால் மக்கள் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும்.
-
எழும்பூர் டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் தரும் இயந்திரம்.. எப்படி வேலை செய்கிறது? -
சென்னையில் ரூ.7000-லிருந்து ரூ.0 ஆக மாறிய புதிய மெத்தை.. குப்பைக்கு வந்த ரியல் கதை -
ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தவெக எம்எல்ஏ வென்ற விவகாரம்: சென்னை ஐகோர்ட்டில் பெரியகருப்பன் புதிய வழக்கு -
காசிமேட்டில் நள்ளிரவு 12 மணிக்கு ஒலித்த சைரன்.. சென்னையில் வஞ்சிரம் மீன் பிரியர்களுக்கு பேரதிர்ச்சி? -
கோட்டைக்கு வரும் புது மாப்பிள்ளை.. மணமகன் தேடும் இளம் பெண் அமைச்சர்.. ஜோதிடர்களுடன் தீவிர ஆலோசனை! -
தமிழ்நாடு சைடில் நிலம் கிடைப்பதில் சிக்கல்.. பெங்களூர்-சென்னை எக்ஸ்பிரஸ்வே திட்டம் தாமதம்.. போச்சு -
“தற்போதைய மின் தடைக்கு கடந்த ஆட்சியே காரணம்”.. அமைச்சர் நிர்மல் குமார் கொடுத்த விளக்கம்! -
'அமரன்' மேஜர் முகுந்த் வரதராஜனுக்கு பெருமை சேர்த்த சென்னை! பிரதான சாலைக்கு பெயர் சூட்டி அதிரடி! -
3 லட்சம் சதுரடி! வருது 13 மினி மால்.. சென்னை மெட்ரோ 2ம் கட்ட ஸ்டேஷன்களில் சுவாரசியம்! தரமான பிளானிங் -
இந்தியாவை சூழும் புதிய பிரச்சனை! 64% நிலைமை மோசம்! சாட்டிலைட் படங்களில் தெரிய வந்த அதிர்ச்சி -
அடுத்த 3 மணி நேரம்.. விடாமல் கொட்டப் போகுது மழை.. செங்கல்பட்டு உள்பட 16 மாவட்டங்களுக்கு அலர்ட்! -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே!












Click it and Unblock the Notifications