"ஸ்டார்ட் ஆகிறது ஸ்டாலின் ஆட்டம்".. கோடநாடு கொலை - கொள்ளை கேஸில் எடப்பாடிக்கு புது சிக்கல்? ட்விஸ்ட்
சென்னை: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு வரும் நாட்களில் நெருக்கடி அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டார தகவல் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டு அரசியலை அதிர வைத்து.. இப்படியெல்லாம் கூட கொலைகள் நடக்குமா என்று யோசிக்க வைத்த சம்பவம் என்றால் அது கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம்தான். ஒரு கொள்ளை.. அதை செய்வதற்கு ஒரு கொலை.. அதை செய்தபின் கொள்ளை அடித்தவர்கள் எல்லோரும் வரிசையாக கொலை செய்யப்படுவது என்று அடுத்தடுத்து நடந்த சம்பவங்கள் இந்தியாவையே உலுக்கின.

முக்கியமாக இந்த கொள்ளையை மேற்கொள்ள சொன்னது யார்? யாருக்காக கொலைகள் நடந்தன? கொள்ளையடிக்கப்பட்ட ஆவணங்கள் என்னென்ன என்ற கேள்விகள் மக்களை விழி பிதுங்க வைத்துள்ளன.
என்ன நடந்தது? : ஜெயலலிதா மரணத்திற்கு பின் கடந்த 2017 ஏப்ரல் 24ல் கோடநாட்டில் நடந்த கொள்ளை சம்பவத்தில் பல பொருட்கள், கோப்புகள் கொள்ளை அடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதில் எஸ்டேட் காவலாளி ஓம்பகதூர் என்பவரும் கொள்ளையர்களால் கொல்லப்பட்டார். அதன்பின் கொள்ளையில் குற்றஞ்சாட்டப்பட்ட பலர் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். இந்த கோடநாடு மர்ம மரணங்கள் மற்றும் கொள்ளை பற்றி தமிழ்நாடு போலீஸ் 5 தனிப்படை அமைத்து விசாரித்து வந்தது.
இந்த கொள்ளை மற்றும் கொலை சம்பவத்திற்கு பின் சரியாக 4 நாட்கள் கழித்து கொள்ளையில் ஈடுப்பட்ட கனகராஜ் விபத்து ஒன்றில் மர்மமாக மரணம் அடைந்தார். இவர் ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர். அதேபோல் இன்னொரு முக்கிய குற்றவாளி சயான் குடும்பத்தினர் விபத்தில் கொல்லப்பட்டனர். இதில் சயான் நூலிழையில் உயிர் தப்பினார்.
சயான் குற்றச்சாட்டு: இந்த வழக்கில் சயான் நேரடியாக எடப்பாடி பழனிசாமி மீதே குற்றஞ்சாட்டி இருக்கிறார். எடப்பாடி பழனிசாமியை நோக்கி இவர் தனது கையை திருப்பி உள்ளார். எடப்பாடி பழனிச்சாமி சொல்லித்தான் கனகராஜ் இந்த திட்டங்களை தீட்டியதாக சயான் போலீசில் வாக்குமூலம் அளித்ததாக கூறப்படுகிறது. இப்படி வழக்கில் போகஸ் எடப்பாடி பக்கம் திரும்பி உள்ளது. இந்த நிலையில்தான் வழக்கு தற்போது சிபிசிஐடி வசம் சென்றுள்ளது.
நெருக்கடி தந்த டிடிவி -ஒபிஎஸ்: இந்த நிலையில் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக தேனியில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் ஒன்றாக டிடிவி தினகரனுக்கு எதிராக குற்றச்சாட்டு வைத்தனர். இந்த நிகழ்வில் பேசிய டிடிவி தினகரன் பேசுகையில், கோடநாடு வழக்கு தொடர்பான சாட்சிகள் கடந்த அதிமுக ஆட்சியில் அழிக்கப்பட்டது.
விரைவில் உண்மையான குற்றவாளிகளை மக்கள் முன் நிறுத்த வேண்டும். சட்டம் முன் நிறுத்த வேண்டும். அவர்களை தண்டிக்க வேண்டும். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும், என்று அழுத்தம் கொடுத்தனர். இதனால் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிசாமிக்கு வரும் நாட்களில் நெருக்கடி அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அரசியல் வட்டார தகவல் தெரிவிக்கின்றன.

நெருக்கடி ஏற்படும்: இந்த வழக்கில் ஜெயலலிதா அறையின் உடைக்கப்பட்ட பூட்டு சமீபத்தில் கைப்பற்றப்பட்டது. சிபிசிஐடி செய்த விசாரணையில் இந்த பூட்டு கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல் கொலை, கொள்ளை இடத்தில பல ஆவணங்கள் திருடப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. கண்டுபிடிக்கப்பட்ட இந்த பூட்டு காரணமாக வழக்கில் பல திருப்பங்கள் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் அதன்படி கனகராஜ் கடந்த 2017ல் சேலம் - சென்னை நெடுஞ்சாலையில் சந்தனகிரி பகுதியில் பலியானார். அங்கே ஸ்பீடு பிரேக்கர் ஒன்றின் அருகே பலியானார். அதே சமயம் அருகே ஸ்பீடு பிரேக்கர் ஒன்றில் வேறு ஒரு நபரும் விபத்துக்கு உள்ளதாக கூறப்படுகிறது. இவரை பிடித்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
ஸ்டாலின் பிளான்: இதனால் தேர்தல் நெருங்க நெருங்க ஸ்டாலின் கோடநாடு வழக்கில் எடப்பாடிக்கு பிரஷர் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விசாரணையை துரிதப்படுத்துவார், பல அதிரடி திருப்பங்கள் இதில் ஏற்படும் என்று எதிர்பார்க்கபடுகிறது. முக்கியமாக புதிய ஆதாரங்கள் அடிப்படையில் எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications