கங்குலி, தோனியை விட பெஸ்ட்.. பெரும் கனவுகளை நிஜமாக்கிய கோலி.. திடீர் முடிவிற்கு என்னதான் காரணம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனது பெயருக்கு பின் கேப்டன் என்ற அடைமொழியோடு கோலி ஆடிய கடைசி போட்டி தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டிதான்.. ஏற்கனவே டி 20 தொடரில் கேப்டன் பதவியை ராஜினாமா செய்த நிலையில் சமீபத்தில் அவர் ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார். இந்த நிலையில்தான் தற்போது டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் கோலி ராஜினாமா செய்துள்ளார்.

Recommended Video

    திடீரென முடிவை அறிவித்த Virat Kohli.. என்ன நடந்தது?

    கடந்த டெஸ்ட் தொடரில் தென்னாப்பிரிக்காவிடம் தோல்வி அடைந்து இருந்தாலும் ஒரு கேப்டனாக டெஸ்ட் தொடரில் கோலியின் லெகசி என்பது தொட முடியாத ஒன்று. ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் வாக்கிற்கு இணையான புள்ளி விவரங்களை கொண்ட இன்னொரு ஒரே கேப்டன் கோலி மட்டுமே.

    ஆசியாவில் எந்த கேப்டன்களும் செய்யாத மகத்தான சாதனைகளை செய்துவிட்டு..தனது கேப்டன்சியின் பிரைம் டைமில் இந்த அசாத்திய ஷாக்கிங் முடிவை கோலி எடுத்து இருக்கிறார்.

     கேப்டன் கோலி

    கேப்டன் கோலி

    இந்திய அணியின் டெஸ்ட் கேப்டனாக இதுவரை 68 போட்டிகள் ஆடி அதில் 40 போட்டிகளில் கோலி வென்று இருக்கிறார். கடந்த போட்டியையும் சேர்த்து மொத்தம் 17 போட்டிகளில் மட்டுமே கோலி தலைமையிலான இந்திய அணி தோல்வி அடைந்துள்ளது. மீதம் உள்ள 11 போட்டிகள் டிரா ஆனவை ஆகும். கோலி வந்த பின் எந்த ஒரு டெஸ்ட் ஹோம் தொடரிலும் இந்தியா தோல்வி அடையவே இல்லை.

    வெற்றி டெஸ்ட்

    வெற்றி டெஸ்ட்


    இவரின் டெஸ்ட் வெற்றி சதவிகிதம் 2.352. இவரின் கேப்டன்சிக்கு 24 ஹோம் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது. அதேபோல் 16 வெளிநாட்டு ஹோம் டெஸ்ட் போட்டிகளில் இந்தியா வென்றுள்ளது. கங்குலி, டிராவிட், தோனி கேப்டனாக இருந்த சமயத்தில் எல்லாம் சேனா நாடுகளில் சென்று டெஸ்ட் ஆடுவதே பெரிய விஷயம். அங்கு ஒரு போட்டியை டிரா செய்தாலே அது அபூர்வமாக இருக்கும்.

     கங்குலி தோனி

    கங்குலி தோனி

    அதிலும் சச்சின், லட்சுமணன், டிராவிட் போன்ற தரமான பேட்ஸ்மேன்களையும், ஹர்பஜன், கும்ப்ளே, ஜாகீர் போன்ற தரமான பவுலர்களையும் வைத்து இருந்தும் கூட சேனா நாடுகளில் டெஸ்ட் போட்டிகளில் வெல்வது என்பது இந்தியாவிற்கு மிகவும் கடினமான காரியமாகவே இருந்தது. இதெல்லாம் ஒரு காலத்தில் வெறும் கனவாகவே இருந்த நிலையில் சேனா நாடுகளில் வெல்வதை நிஜமாக்கி காட்டியவர்தான் கோலி.

    சேனா கோலி

    சேனா கோலி

    ஆஸ்திரேலிய தொடரில் பாதியில் தோனி வெளியேறிய நிலையில் இக்கட்டான கட்டத்தில்தான் கோலிக்கு டெஸ்ட் கேப்டன்சி கிடைத்தது. முதலில் கொஞ்சம் திணறியவர் அதன்பின் வரிசையாக வெற்றிகளை குவித்தார். ஆஸ்திரேலியாவில் இரண்டு முறை தொடரை வென்றது. இங்கிலாந்தில் தொடரை வென்றது. நியூசிலாந்தில் முதல்முறை தொடரை வென்றது என்று அதற்கு முந்தைய இந்திய கேப்டன்கள் எட்டாத உயரத்தை கோலியின் கேப்டன்சிக்கு கீழ் இந்தியா எட்டியது.

    கேப்டன் கோலி ராஜினாமா

    கேப்டன் கோலி ராஜினாமா

    முக்கியமாக இந்திய அணியின் பவுலிங்கை புதிய உயரத்திற்கு கொண்டு சென்றது கோலிதான். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான பும்ராவை ஜென்சன் 2வது டெஸ்டில் சீண்ட மூன்றாவது டெஸ்டில் ஜென்சன் வந்ததும் பும்ராவிடம் கொடுத்து பவுலிங் போட சொல்லி விக்கெட் எடுத்தது ஆக்ரோஷம்தான் கோலியின் கேப்டன்சி ஸ்டைல். இந்திய அணியில் கோலியின் கேப்டன்சிக்கு கீழ் எல்லா வீரர்களும் கோலிதான் என்று சொல்லும் அளவிற்கு அணியே ஆக்ரோஷமாக இருந்தது

    இந்தியா பவுலிங்

    இந்தியா பவுலிங்

    230 ரன்கள் இருந்தாலே டிபன்ட் செய்வோம், 10 விக்கெட்டை எடுப்போம் என்ற அளவிற்கு இந்திய டெஸ்ட் பாஸ்ட் பவுலிங்கை புதிய உச்சம் கொண்டு சென்றது கோலிதான். பும்ரா, ஷமி, இஷாந்த், சிராஜ் என்று இந்த பாஸ்ட் பவுலிங் படையை பார்த்து சேனா நாடுகள் எல்லாம் நடுங்க கோலிதான் மிக முக்கிய காரணம். புள்ளி விவரங்களும் சரி, இந்திய அணியின் வெற்றி எண்ணிக்கையும் சரி.. கோலிதான் இந்திய அணியின் ஆகப்பெரும் டெஸ்ட் கேப்டன் என்பதை உறுதியாக சொல்கிறது.

    டெஸ்ட் போட்டி கோலி

    டெஸ்ட் போட்டி கோலி

    இந்தியாவில் ஒரு டெஸ்ட் போட்டி தொடரில் கூட கோலியின் கேப்டன்சியில் இந்திய அணி தோற்கவில்லை, டிரா செய்யவில்லை என்றால் அவரின் லெகசி தெரிந்து இருக்கும். இந்தியாவில் ஆடப்பட்ட 11 டெஸ்ட் தொடர்களில் வெறும் 2 போட்டியில் மட்டுமே கோலியின் இந்திய அணி தோல்வி அடைந்து இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். கோலி வெளிநாடுகளில் 16 டெஸ்ட் போட்டிகளில் வென்றுள்ள நிலையில் அவருக்கு அடுத்தபடியாக கங்குலி 11 போட்டிகளில் வென்றுள்ளார்.

    ராஜினாமா செய்தார்?

    ராஜினாமா செய்தார்?

    இந்திய அணியின் டெஸ்ட் கேப்டன் ஆக கோலி ஆன போது நமது டெஸ்ட் அணி 7வது இடத்தில் இருந்தது. இப்போது அதை முதல் இடத்திற்கு கொண்டு சென்றுவிட்டு கோலி ஓய்வு பெற்றுள்ளார். இந்திய அணியின் டி 20 கேப்டன்சியில் இருந்து கோலி ஓய்வு பெற்றார். அதை தொடர்ந்து இரட்டை வைட் பால் கேப்டன்சி வேண்டாம் என்பதால் அவரை ஒருநாள் கேப்டன்சியில் இருந்தும் பிசிசிஐ நீக்கியது.

     மோதல்

    மோதல்

    இதையடுத்து டி 20 கேப்டன் பதவி ராஜினாமா, ஒருநாள் கேப்டன்சி நீக்கம் குறித்து கோலியின் சில போட்டிகள் பிசிசிஐ அமைப்பை சீண்டியது. இதற்கு கங்குலி ஒன்று சொல்ல, கோலி ஒன்று சொல்ல இரண்டு தரப்பிற்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதனால் பிசிசிஐ - கோலி இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது. இப்படிப்பட்ட நிலையில்தான் டெஸ்ட் தொடரிலும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக தோல்வி அடைந்தது கோலிக்கு பின்னடைவை கொடுத்தது.

     பிசிசிஐ முடிவு

    பிசிசிஐ முடிவு

    அதோடு டிஆர்எஸ் விவகாரத்தில் கோலி சர்ச்சையை ஏற்படுத்தியது உள்ளிட்ட வேறு சில காரணங்களும் அவருக்கு எதிராக சென்றது. பிசிசிஐ அமைப்பில் இவருக்கு இப்போது ஆதரவாக பேச யாருமே இல்லை என்று கூறப்படுகிறது. ஒரு பிரச்சனை என்றால் கூட அதை தெரிவிக்க இவருக்கு நெருக்கமான ஆட்கள் இல்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்தே ஒரு கேப்டனாக தன்னால் நீடிக்க முடியாது, சிக்கல்களுக்கு இடையே சரியாக செயல்பட முடியாது என்பதை உணர்ந்து கொண்டு கோலி ராஜினாமா செய்துவிட்டார் என்று கூறப்படுகிறது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+