கூவத்தூர்.. நடிகைகள்.. உல்லாசம்.. எவ்ளோ அசிங்கப்படுத்திட்டாரு இந்த ராஜு.. போலீசில் கருணாஸ் புகார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கூவத்தூர் விவகாரம் குறித்து பேசி அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி ராஜு பரபரப்பை கிளப்பி உள்ளார். இந்நிலையில் தான் நடிகரும், முன்னாள் எம்எல்ஏவுமான கருணாஸ் சார்பில் ஏவி ராஜு சார்பில் சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுச்செயலாளராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளார். இவரது சொந்த மாவடத்தை சேர்ந்தவர் ஏவி ராஜு. இவர் சேலம் ஒன்றிய அதிமுக செயலாளராக பொறுப்பில் இருந்து வந்தார்.

Koovathur Row: Actor turned politician karunas filles compalaint against Av Raju in Chennai Commissioner office

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ஏவி ராஜு கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறி அவரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக நீக்கினார்.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டாதல் ஏவி ராஜு கடும் கோபமடைந்தார். மேலும் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுகவை அவர் விமர்சனம் செய்ய தொடங்கினார். இந்நிலையில் தான் சமீபத்தில் அவர் அளித்த பேட்டி சர்ச்சையை கிளப்பியது. அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்த பிறகு அடுத்த முதல்வர் யார்? என்பதில் குழப்பம் ஏற்பட்டது. இந்த வேளையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூவத்தூர் தங்கும் விடுதியில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.

இப்படி அதிமுக எம்எல்ஏக்கள் கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டபோது அங்கு என்ன நடந்தது? என்பது பற்றி ஏவி ராஜு கூறியது தான் சர்ச்சையை கிளப்பியது. அதாவது எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக எம்எல்ஏ வெங்கடாசலம் கூவத்தூரில் என்ன கூத்து அடித்தனர் என்பது தெரியும். ஒரு பிரபல நடிகையின் பெயரை கூறி அவரை வெங்கடாசலம் கேட்டார். ரூ.25 லட்சம் கொடுத்து நடிகை வரவழைக்கப்பட்டார். எங்களுடன் நடிகர் கருணாஸ் இருந்தார். அவர் தான் நடிகையை ஏற்பாடு செய்து கொடுத்தார் என்றார்.

இதில் ஒரு நடிகையின் பெயரை ஏவி ராஜு கூறிய நிலையில் பெயரை குறிப்பிடாமல் நடிகைகள் சொகுசு விடுதிக்கு வந்து சென்றதாகவும், அதற்கான செலவை எடப்பாடி பழனிச்சாமி ஏற்றுக்கொண்டதாகவும் தெரிவித்து பரபரப்பை கிளப்பினார். இதுதொடர்பான வீடியோ இணையதளங்களில் வேகமாக பரவியது. இதையடுத்து திரையுலகினர் உள்பட பல்வேறு தரப்பை சேர்ந்தவர்கள் ஏவி ராஜுவின் பேச்சை கண்டித்தனர்.

இந்நிலையில் தான் முன்னாள் எம்எல்ஏவும், முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் நிறுவன தலைவருமான கருணாஸ் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் தெரிவித்துள்ளார். அந்த புகாரில் அவர் கூறியிருப்பதாவது: கூவத்தூரில் அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியிருந்தது தொடர்பாக அதிமுக முன்னாள் நிர்வாகி ஏவி ராஜு அவதூறு பரப்புகிறார். எனது பெயரை கெடுக்கும் நோக்கத்தில் ஆதாரமற்ற புகார்களை ஏவி ராஜு கூறியுள்ளார். குறிப்பிட்ட நடிகை பற்றியும், தன்னை பற்றியும் அவதூறான கருத்துகளை அவர் கூறியிருக்கிறார்.

இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். ஆதாமற்ற வகையில் அவதூறான குற்றச்சாட்டுகளை கூறிய ஏவி ராஜு மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த பேட்டியை வெளியிட்ட யூடியூப் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார். இந்த புகாரை தொடர்ந்து ஏவி ராஜு பேசிய வீடியோவை பார்வையிட்டு சைபர் க்ரைம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். இதனால் விரைவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஏவி ராஜு கைது செய்யப்பட உள்ளாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+