உலகின் No.1 பணக்காரர்.. இந்தியரின் கணக்கில் 10,01,35,6000000000000100,23,5600,00,00,00,299 கிரெடிட்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உத்தரப்பிரதேசம் நொய்டா பகுதியைச் சேர்ந்த தீபக் என்ற இளைஞர், 2 மாதங்களுக்கு முன் காலமான தன் தாயின் வங்கிக் கணக்கை சோதித்த போது அதில் 10,01,35,60,00,00,00,00,00,01,00,23,56,00,00,00,00,299 ரூபாய் கிரெடிட் ஆகியிருந்தது கண்டு ஆடிப்போனார். தகவல் அறிந்த வங்கி, அந்தக் கணக்கை முடக்கியதாக தகவல்கள் பரவி வருகிறது. இதைக் கண்டறியும் வரை இந்தியாவின் நம்பர் ஒன் பணக்காரராக மட்டுமல்ல, உலகின் நம்பர் ஒன் பணக்காரராகவும் அந்த இளைஞர் தான் இருந்துள்ளார்.இதனிடையே கோடாக் வங்கி இந்த விவகாரத்தை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

டெல்லியின் புறநகரும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள நகருமான நொய்டாவில், ஒரு 20 வயது இளைஞர் இரண்டு மாத காலத்திற்கு முன்பு காலமான தாயின் சேமிப்புக் கணக்கில் மிகப்பெரிய தொகையைப் பார்த்ததாக தகவல்கள் பரவி வருகிறது.

Kotak Mahindra Clarifies Viral 100 13 56 00 00 00 00 00 00 01 00 23 56 00 00 00 00 299 Screenshot

பல கோடி பணம்

சமூக வலைதளங்களில் ஒரு ஸ்கிரீன்ஷாட் வைரலாக பரவியது. அதில் ₹100,13,56,00,00,00,00,00,00,01,00,23,56,00,00,00,00,299 என்ற மிகப்பெரிய தொகை இருந்ததாக கூறப்படுகிறது. இது சமூக வலைதளங்களில் பல விவாதங்களையும் யூகங்களையும் உருவாக்கியது. பத்திரிகையாளர் என்று ட்விட்டரில் உள்ள சச்சின் குப்தா என்பவர் தான் இதனை முதலில் பதிவிட்டார். இது ஆங்கில ஊடகங்களில் வேகமாக பரவியது. இந்த கணக்கு கோடக் மஹிந்திரா வங்கிக்குச் சொந்தமானது என்று முதலில் தகவல்கள் பரவின. ஆனால், இந்த சம்பவம் தங்கள் வங்கியில் நடக்கவில்லை என்று கோடக் மஹிந்திரா வங்கி திட்டவட்டமாக மறுத்துள்ளது.

கோடக் மஹிந்திரா வங்கி விளக்கம்

கோடக் மஹிந்திரா வங்கி இது தொடர்பாக ஒரு விளக்கத்தை வெளியிட்டிருக்கிறது. "வாடிக்கையாளர் ஒருவரின் கணக்கில் அசாதாரணமான பெரிய இருப்பு இருப்பதாகக் கூறும் ஊடகச் செய்திகள் தவறானவை. இதுபோன்ற செய்திகள் பரவுவதால், எங்கள் வாடிக்கையாளர்கள் தங்களின் கணக்கு விவரங்களை கோடக் மொபைல் பேங்கிங் ஆப் அல்லது நெட் பேங்கிங் மூலம் சரிபார்க்க நாங்கள் ஊக்குவித்து வருகிறோம். எங்கள் வங்கி அமைப்புகள் அனைத்தும் பாதுகாப்பாகவும், முழுமையாக செயல்பட்டும் வருகின்றன." என்று கூறியது.

ஊடகங்கள் சொல்வது என்ன

ஆங்கில ஊடகமான நியூஸ் 24 வெளியிட்ட செய்திகளின் படி, இந்த கணக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு இறந்த காயத்ரி தேவிக்குச் சொந்தமானது. அவரது மகன் தீபக், ஆகஸ்ட் 3 அன்று இந்த மிகப்பெரிய வரவு குறித்த அறிவிப்பைப் பெற்றதாக கூறியிருந்தது. தி எகனாமிக் டைம்ஸ் வெளியிட்ட செய்திப்படி, தீபக் இந்த திடீர் சர்ப்ரைஸால் அதிர்ச்சி அடைந்தார். நண்பர்கள், உறவினர்கள், அண்டை வீட்டாரிடம் இருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்ததால், அவர் தனது போனை ஸ்விட்ச் ஆப் செய்துவிட்டார் என்று கூறியுள்ளது.

உண்மை இல்லை

இந்த செய்தி உண்மையாக இருக்க வாய்ப்பு இல்லை என்றே தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வளவு பணம் உலகில் இல்லவே இல்லை.. அந்த பணம் ஒருவரின் வங்கி கணக்கில் கிரெடிட் ஆனதாக பரவுவது ஒரு வகையில் தொழில்நுட்ப தவறாக மட்டுமேஇருக்க முடியும் என்று வங்கியாளர்கள் கூறுகிறார்கள். இதேநேரம் ஸ்கிரீன் ஷாட்டை தவறு என்று கோடாக் வங்கி மறுப்பதால் பொய்யாக இருக்கவும் வாய்ப்பு உள்ளது. வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக கூறப்படும் நபர் கூறினால் தான் என்ன நடந்தது என்று வெளிச்சத்திற்கு வரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+