கோவில்பட்டி மாவட்டம் விரைவில் உதயம்! அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். அறிவிப்புக்கு துரை வைகோ வரவேற்பு!
சென்னை: கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைத்திட முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். சட்டப்பேரவையில் அறிவித்திருப்பது வரவேற்புகுரியது என துரை வைகோ தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;

தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை கனிவுடன் பரிசீலனை செய்து விரைந்து நிறைவேற்றி வரும் முதலமைச்சர் ஸ்டாலின், தூத்துக்குடி மாவட்டத்தின் ஓர் அங்கமாக விளங்கும் கோவில்பட்டியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைத்திட நடவடிக்கை எடுப்பார் என வருவாய்துறை அமைச்சர் அண்ணன் கே.கே.எஸ்.ஆர்.ஆர். சட்டப் பேரவையில் அறிவித்துள்ளதை மறுமலர்ச்சி திமுக சார்பில் வரவேற்கின்றேன்.
வளர்ந்து வரும் தொழில் நகரான கோவில்பட்டி, மாவட்ட தலைமையிடத்திற்குத் தேவையான அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் கொண்டுள்ளது.
கோவில்பட்டி மாவட்டம் வேண்டும் என்பது பொதுமக்களும், பல அரசியல் கட்சிகளும், மறுமலர்ச்சி திமுகவும் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையாகும்.
இந்த மாவட்டப் பிரிவினையின் போது, கோவில்பட்டிக்கு மிக அருகாமையில் அமையப் பெற்றுள்ள குருவிகுளம் ஊராட்சி ஒன்றியப் பகுதி முழுவதையும் (இளையர சனேந்தல் குறுவட்டப் பகுதி உட்பட) பொதுமக்கள் விருப்பத்திற்கு இணங்க, புதிதாக உருவாக உள்ள கோவில்பட்டி மாவட்டத்தில் இணைத்திட வேண்டுகிறேன்.
இவை தவிர, கோவில்பட்டி நகரத்துக்கு நேரடித் தொடர்புகளில் உள்ள தென்காசி விருதுநகர், நெல்லை மாவட்டங்களைச் சேர்ந்த சில பகுதி மக்களின் கருத்துகளையும் கேட்டு இணைத்திட முன்வரவேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.
அதே போல், மக்கள் எளிதாக அணுகுவதற்கு வாய்ப்பாக புதிய மாவட்டங்களை உருவாக்கிட முன்வந்துள்ள தமிழ்நாடு அரசுக்கு எனது பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் மறுமலர்ச்சி திமுக சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications