கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் ஹேப்பி.. கிளாம்பாக்கத்திலும் பிஸி.. பஸ்ஸில் சீட் இனி ஈஸி.. அரசு குட்நியூஸ்
சென்னை: தொடர் விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு 1,680 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. 9, 11, 12ம் தேதிகளில் கிளாம்பாக்கத்தில் இருந்து 1,095 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. அதேபோல, கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிலிருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. பொதுமக்களின் நன்மைகள், வசதிகளை கருத்தில் கொண்டு, தமிழக அரசு இந்த ஏற்பாட்டினை செய்து தந்துள்ளது.
அரசு விரைவு போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ஏப்ரல் 12, 13, 14-ம் தேதிகளில் சனி, ஞாயிறு, தமிழ்ப் புத்தாண்டு என தொடர் விடுமுறை வருகிறது.

மஹாவீர் ஜெயந்தி, தமிழ்புத்தாண்டு மற்றும் வார இறுதி நாட்கள் என தொடர் விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆர்.மோகன் தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
"10/04/2025 (வியாழக்கிழமை - மஹாவீர் ஜெயந்தி) 11/04/2025 (வெள்ளிக்கிழமை) 12/04/2025 (சனிக்கிழமை), 13/04/2025 (ஞாயிற்றுக் கிழமை) மற்றும் 14/04/2025 அன்று தமிழ் புத்தாண்டு என தொடர் விடுமுறையை முன்னிட்டு 09/04/2025, 11/04/2025 மற்றும் 12/04/2025 ஆகிய நாட்களில் சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிளாம்பாக்கம் - கோயம்பேடு
இதனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு புதன்கிழமை அன்று 190 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இன்று (வெள்ளிக் கிழமை) அன்று 525 பேருந்துகளும், சனிக்கிழமை அன்று 380 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளங்கண்ணி, ஒசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு புதன் கிழமை அன்று 50 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இன்று முதல் சிறப்பு பேருந்துகள்
வெள்ளிக்கிழமை அன்று 100 பேருந்துகளும், சனிக்கிழமை அன்று 95 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 300 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து புதன்கிழமை அன்று 20 சிறப்பு பேருந்துகளும், வெள்ளி மற்றும் சனி ஆகிய நாட்களுக்கு 20 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
மேலும், 14.04.2025 திங்கள் அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.
திரும்பி வருவதற்கும் பஸ் வசதி
எனவே தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் மொபைல் செயலி (Mobile App) மூலம் முன்பதிவு செய்து பயணிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இச்சிறப்பு பேருந்து இயக்கத்தினை கண்காணிக்க அனைத்து பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் இந்த வசதியினை பயன்படுத்தி தங்களது பயணத்தினை மேற்கொள்ள இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications