கோயம்பேடு காலி.. வந்தது அடுத்த கிலி.. சென்னை டூ சேலம் வரை சர்னு எகிறிய பூண்டு.. 1 கிலோ 500 ரூபாயாமே
சென்னை: நாளுக்கு நாள் பூண்டு விலை உயர்ந்து காணப்படுகிறது.. ஒரு கிலோ பூண்டு விலை 500 ரூபாய் விற்கப்படுவதால், இல்லத்தரசிகள் கவலையிலும், கதிகலங்கியும் போயுள்ளனர்.
தமிழகத்தை பொறுத்தவரை பருவமழை காரணமாக, காய்கறிகளின் விளைச்சலிலும் மாற்றம் தென்பட்டது.. அந்தவகையில், சமீப நாட்களாகவே, சென்னையில் வரலாறு காணாத அளவுக்கு ஒரு கிலோ பூண்டு ரூ.450 வரை விற்பனை செய்யப்பட்டது.

பூண்டு விலை: எப்போதுமே தமிழகத்துக்கு வடமாநிலங்களிலிருந்து பூண்டு இறக்குமதியாகிறது.. ஆனால், வட மாநிலங்களில் கடந்த சில வருடங்களாகவே, பூண்டு பயிரிடப்பட்ட விவசாயிகளுக்கு போதுமான விலை கிடைக்கவில்லை.. எனவே, அவர்கள் அதிக அளவில் நஷ்டத்தை சந்தித்ததால், விளைச்சலையும் குறைத்தே பயிரிட்டனர்.
எனவே, பூண்டு அறுவடைக் காலம் தொடங்கிவிட்ட நிலையிலும்கூட, தமிழக சந்தைகளில் பூண்டு வரத்து குறைவாகவே உள்ளது.. நீலகிரி, கொடைக்கானல், திண்டுக்கல், ஈரோடு போன்ற மாவட்டங்களில்தான் ஒட்டுமொத்த தமிழகத்துக்கும் பூண்டு உற்பத்தி அதிகமாக செய்யப்படுகிறது. இதைதவிர, வெளிமாநிலங்களிலிருந்தும் நமக்கு பூண்டு இறக்குமதியாகிறது.
எப்போதுமே ஜனவரி மாத பிற்பகுதியில் தொடங்கி மார்ச் மாத இறுதி வரை பூண்டு அறுவடை காலமாகும். இதனால் பொங்கல் பண்டிகைக்கு பிறகு வட மாநிலங்களிலிருந்து பூண்டு மூட்டைகள் கொண்டு வரப்படும்... ஜனவரியில் ஆரம்பிக்கும் பூண்டு விலை குறைந்து மார்ச் மாதம் வரை 100 ரூபாய்க்கு மட்டுமே விற்கப்படும்.
கோயம்பேடு: கோயம்பேடுக்கு பூண்டு வரத்து குறைந்துள்ளது.. மார்க்கெட்டுக்கு வழக்கமாக 30 லாரிகளில் கொண்ட வரப்படும் பூண்டு, இப்போது வெறும் 9 லாரிகளில் மட்டுமே கொண்டு வரப்படுகிறதாம். இதனால் பெரும்பாலான இல்லத்தரசிகள் விலையை கேட்டுவிட்டு, இன்றைக்கும் பூண்டு விலை குறையவில்லையா? என்று கேட்டு ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்களாம்.
கோயம்பேடு தவிர, பூண்டு மொத்த விற்பனை சந்தைகளில் சேலம் லீபஜார், பால் மார்க்கெட் உள்பட பல இடங்கள் முக்கிய இடம் வகித்து வருகின்றன.. இதில், சேலம் மொத்த சந்தையில் பூண்டு விலை 350 முதல் 450 ரூபாயாக இருந்த நிலையில் இப்போது 500 ரூபாயாக உயர்ந்துள்ளது... இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள பொது மக்கள் மிக குறைந்த அளவே பூண்டுகளை வாங்கி செல்கிறார்கள். எனவே, 4-ல் ஒரு பங்கு மட்டுமே சேலம் சந்தைக்கு பூண்டு கொண்டு வரப்படுவதால், வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.
நடவடிக்கை: அத்தியாவசியப் பொருட்களான பூண்டு பதுக்கலில் ஈடுபடுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மொத்த வியாபாரிகளும் மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தவாறே உள்ளனர்.












Click it and Unblock the Notifications