கோயம்பேடு-பட்டாபிராம் மெட்ரோ ரயிலுக்கு விடியல் வரப்போகுது.. மத்திய அரசுக்கு பறந்த திட்ட அறிக்கை
சென்னை: கோயம்பேடு-பட்டாபிராம் வெளிவட்ட சாலை வரையிலான மெட்ரோ ரயில் விரிவாக்க திட்ட அறிக்கையை, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் தயாரித்தது. ரூ.9 ஆயிரத்து 928.33 கோடியில் இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் வழங்கியது. இந்த திட்ட அறிக்கை மத்திய அரசு அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் நிதி பங்களிப்புக்கும், பன்னாட்டு நிதி உதவி கோரவும் தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
சென்னையில் முதற்கட்ட மெட்ரோ ரயில்கள் விம்கோ நகர் முதல் விமான நிலையம் வரை ஒரு வழித்தடமும், சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரை (கோயம்பேடு, வடபழனி வழி) ஒரு வழித்தடமும் அமைந்துள்ளது. சென்னை மெட்ராவிற்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. ஒரு மாதத்திற்கு 80 முதல் 90 லட்சம் பயணிகள் பயணிக்கிறார்கள். தற்போது சென்னையில் 118.9 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பீட்டில் 2-ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

3வது பாதை மாதவரம் பால் பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் இடையே 45.8 கிலோ மீட்டர் தொலைவுக்கும், நான்காவது பாதையாக கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி பணிமனை வரையில் 26.1 கிலோ மீட்டர் தொலைவிற்கும், ஐந்தாவது பாதை மாதவரத்தில் இருந்து சோழிங்கநல்லூர் வரையிலும் 47 கிலோ மீட்டர் தொலைவிற்கும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணிகள் முடிந்தால் சென்னையின் பெரும்பாலான பகுதிகளுக்கு மெட்ரோ ரயிலில் பயணிக்க முடியும். இந்த பணிகள் அனேகமாக வரும் 2026ம் ஆண்டு தொடங்கி படிப்படியாக முடிந்து 2028ம் ஆண்டிற்குள் பயன்பாட்டிற்கு வந்துவிடும்.
3ம் கட்டமாக மெட்ரோ ரயில் பணிகள் சென்னையில் தொடங்கி உள்ளது. முதற்கட்டமாக கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை மெட்ரோ ரயில் வழித்தடம் நீட்டிக்கப்பட இருக்கிறது.இதற்குஅடுத்தபடியாக அடுத்ததாக விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் வரை மெட்ரோ ரயில்கள் ஓடப்பபோகிறது.அதேபோல் பூந்தமல்லி முதல் பரந்தூர் வரையிலும் மெட்ரோ ரயில் நீட்டிக்கப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது.
இந்த சூழலில் சென்னையில் கோயம்பேடு-பட்டாபிராம் இடையே நீட்டிக்க அரசு முடிவு செய்த நிலையில், பல்வேறு கட்ட ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதுதொடர்பாக, கோயம்பேடு-பட்டாபிராம் வெளிவட்ட சாலை வரையிலான மெட்ரோ ரெயில் விரிவாக்க திட்ட அறிக்கையை, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் 20-ந்தேதி தமிழக அரசிடம் அளித்தது. இந்த திட்டத்தை ஆய்வுசெய்த தமிழக அரசு ரூ.9 ஆயிரத்து 928.33 கோடியில் செயல்படுத்த ஒப்புதல் அளித்து அரசாணை வெளியிட்டது.
இத்திட்டத்துக்கு மத்திய அரசின் நிதி பங்களிப்புக்கும், பன்னாட்டு நிதி உதவி கோரவும் தமிழக அரசு அனுமதி அளித்திருக்கிறது. மொத்தம் 21.76 கிலோ மீட்டர் துாரம் கொண்ட இந்த வழித்தடம், கோயம்பேட்டில் தொடங்கி, பாடி புதுநகர், முகப்பேர், அம்பத்தூர், திருமுல்லைவாயல், ஆவடி வழியாக பட்டாபிராம் வெளிவட்ட சாலையை இணைக்க உள்ளது.
இந்த கோயம்பேடு பட்டாபிராம் வழித்தடத்தில், கோயம்பேடு, பாடி புதுநகர், பார்க் ரோடு, கோல்டன் பிளாட் ஜங்சன், வாவின் முதல் மெயின் ரோடு, அம்பத்தூர் எஸ்டேட், அம்பத்தூர் டெலிபோன் எக்ஸ்சேஞ்ஜ், டன்லப், அம்பத்தூர், அம்பத்தூர் ஓ.டி., ஸ்டெட்போர்டு மருத்துவமனை, திருமுல்லைவாயல், வைஷ்ணவி நகர், முருகப்பா பாலிடெக்னிக், ஆவடி ரெயில் நிலையம், கஸ்தூரிபா நகர், இந்து கல்லுாரி, பட்டாபிராம், வெளிவட்ட சாலை ஆகிய 19 இடங்களில் மெட்ரோ ரெயில் நிலையங்கள் அமைக்கப்பட இருக்கிறது. இதற்கான முறையான அனுமதிக்காக திட்ட அறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் அனுமதி கிடைக்க பெற்ற உடன் கோயம்பேடு-பட்டாபிராம் இடையே ஆரம்ப கட்டப்பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்கள் தேர்வு செய்து பணிகள் ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications