கோயம்பேட்டில் மாறுவேடத்தில் யாரது? அதைவிடுங்க, கோயம்பேடு மார்க்கெட்டில் சிறப்பு சந்தை ஆரம்பம்.. வாவ்
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில், இன்று முதல் 16ம் தேதி வரை சிறப்பு சந்தை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்காடி நிர்வாகம் சார்பில் இந்த சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.. இது வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த உதவியாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.
பொங்கல் பண்டிகை வருகிற செவ்வாய்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.. இதையொட்டி கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து உள்ளிட்ட பொங்கல் பொருட்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் வாங்க, பொதுமக்கள் ஆர்வம் காட்டுவார்கள். எனவே, மார்க்கெட் கடைக்காரர்கள் மட்டுமல்லாது வெளியிலிருந்து வரும் வியாபாரிகளும் இங்கு பொருட்களை விற்கிறார்கள். எனவே, பொதுமக்களின் வசதிக்காக மார்கெட்டில் சிறப்பு சந்தை தொடங்கப்பட்டு உள்ளது.

இன்று முதல் 16-ந்தேதி வரை இந்த சிறப்பு சந்தை செயல்படுகிறது. விழுப்புரம், கடலூர், சேலம், புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கரும்பு, மஞ்சள், மண்பாளை உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளன.
சிறப்பு சந்தை: இந்த சிறப்பு சந்தைக்கு விழுப்புரம், கடலூர், சேலம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கரும்பு, மஞ்சள் மற்றும் இஞ்சி விற்பனைக்கு வரப்போகிறது.. இந்த பொருட்களை ஏற்றிவரும் வாகனங்களை நிறுத்துவதற்கு 3 ஏக்கரில் இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல, கோயம்பேடு மார்க்கெட் வியாபாரிகள் மட்டுமின்றி மற்ற பகுதி வியாபாரிகளும் பொருட்களை கொண்டு வந்து விற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதைத்தவிர, சிறப்பு சந்தையை முன்னிட்டு சில அறிவுறுத்தல்கள் வியாபாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.. அதன்படி, "சிறப்பு சந்தையின்போது வியாபாரிகள், போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் வகையில் வியாபாரம் செய்யக்கூடாது. அங்காடி நிர்வாகம் ஒதுக்கி தந்திருக்கும் பகுதியில் மட்டுமே வியாபாரம் செய்யவேண்டும். அங்காடி நிர்வாக குழுவுக்கு முழு ஒத்துழைப்பு தரவேண்டும்" என்றெல்லாம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அங்காடி நிர்வாகம்: இதனிடையே, கோயம்பேடு மார்க்கெட் மற்றும் சிறப்பு சந்தைக்கு ஏராளமான பொதுமக்கள் வருவதால், போக்குவரத்து வெகுவாக பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் அங்காடி நிர்வாகம், போக்குவரத்து போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.
முன்னதாக அங்காடி நிர்வாகம் சார்பில், கோயம்பேடு போக்குவரத்து மற்றும் சட்டம்- ஒழுங்கு காவல் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.. அதன்படி, போக்குவரத்து நெரிசலை சரிசெய்வதற்கும் குற்றசம்பவங்கள் தடுப்பதற்கும் 300 க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுவதென முடிவு செய்யப்பட்டது.
தீவிர பாதுகாப்பு: அதன்படியே இன்று முதல் பாதுகாப்பு பணியில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், மார்க்கெட் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர் கோபுரத்தின் மீது போலீசார் பைனாக்குலர் மூலம் கண்காணிக்கின்றனர், அத்துடன் மாறுவேடத்திலும் ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
காரணம், கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் கத்தியுடன் 3 இளைஞர்கள், நேற்று முன்தினம் இரவு சுற்றித்திரிந்துள்ளனர். திடீரென பாதி கதவு திறக்கப்பட்ட நிலையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த ஊழியர்கள் செல்போனை லாவகமாக திருடி சென்றிருக்கிறார்கள். இது தொடர்பான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது..
அதிரடி கைது: இந்த சம்பவம் தொடர்பாக புகார் கொடுக்கப்பட்ட நிலையில் போலீசார் விசாரித்து சூர்யா, அழகுதுரை, திருவேற்காடு சூர்யா என்ற மூன்று பேரை அதிரடியாக கைது செய்துள்ளனர். எனவே, இதையொட்டியும் கோயம்பேடு மார்க்கெட்டில் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சின்ன வெங்காயம்: இதனிடையே, பொங்கல் பண்டிகைக்கு, சேலம், அரியலூர், பண்ருட்டி, கடலூர், கிருஷ்ணகிரி மற்றும் ஓசூர் பகுதிகளில் இருந்து இன்று காலை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வத்தல், வள்ளிக்கிழங்கு, சிறு கிழங்கு மற்றும் பிடி கிழங்கு, கருணை கிழங்கு, மொச்சை, பச்சை பட்டாணி, தோரை போன்றவை வந்து குவிந்துள்ளன. இதன்காரணமாக மற்ற காய்கறிகளின் விலை குறைந்துள்ளது. எனினும், சின்ன வெங்காயத்தின் விலை மட்டும் உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி, ஒரு கிலோ சின்ன வெங்காயம் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. புறநகர் கடைகளில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 150 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். சின்ன வெங்காயத்தின் விலை மட்டும் கடந்த 4 நாட்களாக அதே விலையில் நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications