பின்டெக் சிட்டி டெண்டர்.. திமுக அரசை சாடிய தமிழக பாஜக.. அதிமுக குறித்து சொன்னது தான் ஹைலைட்
சென்னை: சென்னை நந்தம்பாக்கத்தில் 56 ஏக்கர் நிலப்பரப்பில் நிதிநுட்ப நகரம் அமைப்பதற்கான கட்டுமான ஒப்பந்தத்தை பிஎஸ்டி நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது என்றும் கடந்த காலத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறு என்று தி மு க அரசு ஏற்று கொள்கிறதா? என்றும் பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பி உள்ளார்.
சென்னை புளியந்தோப்பில் கேபி பார்க் குடியிருப்புகளை தரமற்றதாக கட்டிய பிஎஸ்டி நிறுவனத்திற்கு இனி அரசு பணிகள் டெண்டர் வழங்கப்படாது என்று தமிழக அரசு முடிவெடுத்து இருப்பதாக அமைச்சர் சேகர்பாபு முன்பு கூறியிருந்ததாக தெரிவித்துள்ள அறப்போர் இயக்கம், தரமற்ற கட்டிடங்கள் கட்டும் நிறுவனத்திற்கு கட்டுமான டெண்டர் கொடுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பி உள்ளது.

மேலும் அதிமுக ஆட்சியில் கேபி பார்க் கட்டிடத்தை கட்டி ஊழல் செய்த பிஎஸ்டி எம்பைர் நிறுவனம் தான் தற்பொழுது திமுக ஆட்சியில் பல கோடி மதிப்பில் பின்டெக் சிட்டி கட்டிடத்தை கட்ட இருக்கிறார்கள் என்றும் அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டி உள்ளது.
இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள தமிழக பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி, திமுக அரசுக்கு கேள்வி எழுப்பி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் நாராயணன் திருப்பதி கூறியுள்ளதாவது: "கடந்த 2021ம் ஆண்டு சென்னை புளியந்தோப்பில் கே.பி. பார்க் என்ற இடத்தில் 251 கோடி மதிப்பில் கட்டப்பட்ட குடிசை மாற்று வாரிய அடுக்கு மாடி குடியிருப்புகளை கட்டியதில் ஒரு மூட்டை சிமெண்டுக்கு 15 மூட்டை மணல் என்ற விகிதத்தில் கலந்து மிக பெரும் ஊழலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்ததோடு, கையாலேயே வீடுகளை உடைத்துவிடும் அளவிற்கு தரக்குறைவான கட்டுமானத்தை உருவாக்கி, மக்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது.
மேலும் நாமக்கல், திருவள்ளூரில் கட்டிய அரசு மருத்துவமனைகள் தரமில்லாமல் கட்டப்பட்டதாக சொல்லப்படுவதோடு, விழுப்புரம், தளவானூரில் கட்டிய தடுப்பணை சில நாட்களிலேயே உடைந்து போனதையோ, அந்த நேரத்தில் இன்றைய அமைச்சர் பொன்முடி அவர்கள் சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடத்தியதையோ யாராலும் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது.

தரக்குறைவான கட்டுமானத்திற்கு அந்த நிறுவனமே காரணம் என்று குற்றம் சாட்டியதோடு, இனி எந்த காரணத்தை முன்னிட்டும் PST கட்டுமான நிறுவனத்திற்கு எந்த அனுமதியும் வழங்கப்படாது என்று தமிழக தி மு க அரசு உறுதியளித்திருந்த நிலையில், தற்போது சென்னை நந்தம்பாக்கத்தில் 56 ஏக்கர் நிலப்பரப்பில் நிதிநுட்ப நகரம் அமைப்பதற்கான கட்டுமான ஒப்பந்தத்தை அதே PST நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
கடந்த காலத்தில் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தவறு என்று தி மு க அரசு ஏற்று கொள்கிறதா? நடந்த சம்பவங்களுக்கு PST நிறுவனம் பொறுப்பல்ல என்று தி மு க அரசு கூறுமேயானால், பின் அதற்கு யார் பொறுப்பு என்று குறிப்பிட வேண்டிய கடமையும் தி மு க அரசுக்கு உண்டு என்பதை உணர வேண்டும். எதன் அடிப்படையில் ஊழல் புரிந்த, தரக்குறைவான பணிகளை மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட நிறுவனத்திற்கு தி மு க அரசு ஒப்பந்தத்தை மீண்டும் அளித்தது என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் விளக்க வேண்டும்" இவ்வாறு நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பி உள்ளார்
-
“கோட் போட்டு வந்தாரு.. டிபன் எடுத்து வந்தாரு.. நாட்டுல பல அக்கிரமம் நடக்குது” விஜய்யை சாடிய ஸ்டாலின் -
தோல்விக்கு காரணம் என்ன? ரிப்போர்ட்டை கண்டதும் உதயநிதி தந்த ரியாக்சன்.. ஸ்டாலினுக்கு போன மெசேஜ் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்!












Click it and Unblock the Notifications