சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஜெ.வை எம்ஜிஆர் இறுதி ஊர்வல வண்டியில் இருந்து கீழே தள்ளிவிட்ட கேபி ராமலிங்கம் அதிமுகவில் இணைகிறாரா?

Google Oneindia Tamil News

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, எம்ஜிஆர் இறுதி ஊர்வல வண்டியில் இருந்து கீழே தள்ளிவிட்ட சரித்திரத்துக்கு சொந்தக்காரரான கே.பி. ராமலிங்கம் அதிமுகவில் இணைத்துக் கொள்ளப்படுவரா? இல்லையா? என்பதற்கான விடை விரைவில் தெரிந்துவிடும்.

ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணம் அது.. எம்ஜிஆரின் இறுதி ஊர்வல வண்டியில் இருந்து கீழே தள்ளிவிடப்பட்ட போது தரையில் தலைகுப்புற விழுந்து எழுந்தார் ஜெயலலிதா.

மோடியை விமர்சித்த மூத்த பத்திரிகையாளர் வினோத் துவாவை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடைமோடியை விமர்சித்த மூத்த பத்திரிகையாளர் வினோத் துவாவை கைது செய்ய சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை

நீங்காத கோப கனல்

நீங்காத கோப கனல்

அப்போது ஜெயலலிதா ஒரு தனிமரமாக உணரப்பட்டாலும் அந்த வேதனை தீதான் அவரை புரட்சித் தலைவியாக்கி சரித்திரமும் படைத்தது. தமிழக முதல்வர் எனும் நாற்காலியில் அவர அமரவைத்து இரும்பு மனுஷியாக்கியது. ஜெயலலிதாவின் நெஞ்சத்தில் பெரும் கோபக் கனலை நீங்காத வடுவை ஏற்படுத்திய அந்த சம்பவத்தை நிகழ்த்தியவர் கே.பி. ராமலிங்கம்.

திமுகவவில் இருந்து நீக்கம்

திமுகவவில் இருந்து நீக்கம்

அதிமுகவைவிட்டு வெளியேறி திமுகவின் ராஜ்யசபா எம்.பி.யானவர். திமுகவின் விவசாய அணி மாநில செயலாளராகவும் இருந்தார். திமுகவில் தனக்கு இனி எதிர்காலம் இல்லை என்பதால் கட்சி தலைமையை விமர்சித்து அறிக்கை வெளியிட்டார். இதனால் திமுகவில் இருந்து வெளியேற்றவும் செய்யப்பட்டார் கே.பி. ராமலிங்கம்.

வீரபாண்டி ராஜாவுக்கும் வலை

வீரபாண்டி ராஜாவுக்கும் வலை

வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர் கே.பி. ராமலிங்கம். இதனால் திமுக தலைமை மீது அதிருப்தியுடன் இருக்கும் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜா உள்ளிட்டோருடன் வேறு கட்சிக்கு தாவுவது குறித்து கே.பி. ராமலிங்கம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் வீரபாண்டி ராஜா தரப்பு பிடி கொடுக்கவில்லை.

அதிமுகவில் இணைக்கப்படுவாரா கேபி ராமலிங்கம்?

அதிமுகவில் இணைக்கப்படுவாரா கேபி ராமலிங்கம்?

கே.பி. ராமலிங்கத்தைப் பொறுத்தவரை அவருக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு அதிமுகவுக்கு செல்வது என்பதுதான். இது தொடர்பாகத்தான் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சேலத்தில் சந்தித்தும் பேசினார் கே.பி. ராமலிங்கம். இருந்த போதும் ஜெயலலிதாவையே அவமதித்து கீழே தள்ளிவிட்டவர் கே.பி. ராமலிங்கம். ஜெயலலிதாவை தாயாக போற்றும் அதிமுகவினர் கே.பி. ராமலிங்கத்தை ஏற்பார்களா? என்பது தெரியவில்லை. இதற்கான விடை விரைவில் தெரியும் என்கின்றனர் ஒருவித நமட்டுச் சிரிப்புடன் அதிமுகவினர்.

English summary
Sources said that Ex DMK Rajyasabha MP KP Ramalingam may join with AIADMK.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X