ஜடை, ஜாக்கெட், பொட்டு.. அடடே அப்படியே அவரை போலவே இருக்காரே கிருஷ்ணப்பிரியா
ஜெயலலிதா கெட்-அப்பில் கிருஷ்ணபிரியா போட்டோ வலம் வருகிறது.
Recommended Video

சென்னை: இதெல்லாம் ஒரு சீசன் போல... மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை போல டிரஸ் பண்ணி கொண்டு போட்டோக்களை வெளியிடுவது!
இப்படித்தான் ஜெயலலிதா இறந்தவுடன் சசிகலா ஓவர் நைட்டில் கெட்-அப் சேஞ்ச் ஆனார். முந்தைய நாள் பார்த்த சசிகலாவுக்கும் மறுநாள் பார்த்த சசிகலாவுக்கும் அப்படி ஒரு வித்தியாசம்.
சடை, ஜாக்கெட், பொட்டு என அப்படியே ஜெயலலிதாவை போல வந்து போயஸ் வீட்டு மாடியில் நின்று தொண்டர்களை பார்த்து கையசைத்தார்.

ஷாப்பிங் வீடியோ
அதன்பிறகு விரல் விட்டு எண்ணிய நாட்களிலேயே சிறைக்குள் சென்றுவிட்டார். அங்கு போனவுடன் வேற கெட்-அப்பில் ஷாப்பிங் செல்லும் வீடியோ வெளியானது.

மார்டன் தீபா
இன்னொரு பக்கம் ஜெ. தீபா, இப்படித்தான் ஜெயலலிதா இறந்தவுடன் அவர் போலவே டிரஸ் செய்து வலம்வந்தார். உடனே முகஜாடை உட்பட எல்லாமே அவரது அத்தை போலவே உள்ளது என எல்லோரும் சொன்னார்கள். ஆனால் அதுவும் கொஞ்ச நாளில் மாறிவிட்டது. ஃப்ரீ ஹேர்ஸ்டைல் என மார்டன் ஆக முன்பு போலவே மாறிவிட்டார்.

கிருஷ்ண பிரியா
இவர்களை போலவே ஆரம்பத்தில் ஜெயலலிதா கெட்-அப் போட்டவர் இளவரசியின் மூத்த மகள் கிருஷ்ணப்பிரியா. இளவரசி நடத்தி வரும் நிறுவனங்களை இவர்தான் கவனித்து கொள்வர். இவருக்கு என்ன ஆச்சோ தெரியல, கொஞ்ச நாளைக்கு முன்னாடி, ஜெயலலிதாவை போல உருமாறினார்.

என்ன ஆனார்?
அதோடு விட்டாரா, அப்போது நீட் தேர்வு பிரச்சனை உச்சக்கட்டத்தில் இருந்ததால், நீட்டுக்கு எதிரான அறப் போராட்டத்தையும் அறிவித்தார். அதோடு போனவர் என்ன ஆனார், எந்த கெட்-அப்பில் இருக்கிறார் என்றே தெரியவில்லை,

ஜடை, ஜாக்கெட்டு
இப்போது திடீரென ஒரு போட்டோவை கிருஷ்ணப்பிரியா வெளியிட்டுள்ளார். அதில் ஜெயலலிதாவை போலவே நகை, சிகை அலங்காரங்கள் உள்ளன. நீல நிற சேலை, க்ளாஸ் பிளவுசில் சேரில் உட்கார்ந்திருக்கிறார்.

இது எத்தனை நாள்?
இதனால் அதிமுக தரப்பில் இந்த போட்டோ பரபரப்பு விவாத பொருளாக உருவாகி உள்ளது. இது இன்னும் எத்தனை நாளைக்கோ தெரியவில்லை.

தைரியம் இல்லை
ஆனால் ஜெயலலிதா உயிரோடு இருக்கும்வரை மட்டும் ஒருத்தருக்கும் இப்படி வேஷம் கட்ட தைரியமில்லாமல், இப்போது ஆளாளுக்கு அவரை போலவே கெட்-அப்பில் வலம் வருவது வெறும் காட்சியாக இருக்கிறதே தவிர மனசில் எதுவுமே ஒட்ட மறுக்கிறது.












Click it and Unblock the Notifications