"வாஷ் அவுட்".. பாஜகவுக்கு செக்.. முதல் தளபதியே ஸ்டாலின் தான்.. கிருஷ்ணசாமி சொன்னதுமே.. பூரித்த திமுக

காங்கிரஸ் மூத்த தலைவர் எம் கிருஷ்ணசாமி, முதல்வர் ஸ்டாலினை பாராட்டி அறிக்கை வெளியிட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலமைச்சர் முக ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில், கலந்து கொள்ளும் அகில இந்திய தலைவர்கள் சூளுரையாக சபதம் ஏற்று, மத்தியில் ஆளும் பாஜவை விரட்ட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு நாளை பிறந்தநாள்.. முதல்வரின் இந்த 70வது பிறந்தநாளை, விமரிசையாக கொண்டாட திட்டமிட்டுள்ளது திமுக தலைமைக் கழகம்.

இதற்கான பொறுப்பில் மேலிட தலைவர்கள் பிஸியாக உள்ளனர்.. பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு ஆகியோர் இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 டிஆர் பாலு

டிஆர் பாலு

அதேபோல, நாளை முழுவதும் தனக்கு வாழ்த்துச் சொல்ல வருபவர்களை சந்திக்கவிருப்பதால், திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் சென்னைக்கு இன்றே புறப்பட்டு விட்டனர்... காரணம், இந்த பிறந்தநாள் விழாவை ஒரு ஒன்றுகூடல் நிகழ்ச்சியாகவும், திருவிழாவை போலவும் கருதுவதால் அதை தவறவிட்டுக் கூடாது என்பதில் மிக உறுதியாக இருக்கின்றனர். ஸ்டாலின் 70வது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அகில இந்திய தலைவர்களை பங்கேற்க வைப்பதற்கான பொறுப்பை டி.ஆர்.பாலு ஏற்றுள்ளார்... நாளை பிறந்தநாள் என்றாலும், முதல்வர் ஸ்டாலினுக்கு இப்போதே வாழ்த்துக்கள் நாலாபக்கமிருந்தும் குவிந்து கொண்டிருக்கிறது..

 கிருஷ்ணசாமி

கிருஷ்ணசாமி

அந்தவகையில், தமிழக காங்கிரஸூம் முதல்வருக்கு வாழ்த்தை சொல்லி, அவரது செயல்பாடுகளை பாராட்டி உள்ளது.. இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவர் எம்.கிருஷ்ணசாமி ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார்.. அந்த அறிக்கையில், "தமிழகத்தின் முதல்வராக ஸ்டாலின் வந்து ஒன்றரை ஆண்டுக்குள் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளை 85 சதவீதம் நிறைவேற்றியுள்ளார். தமிழக சட்டமன்றத்தில் முதல்வரின் செயல்பாடுகளை கண்டு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பாராட்டுகிறார்கள். மத்தியில் ஆளும் பாஜ அரசு, தமிழகத்திற்கு உரிய நிதிகளை கொடுக்காமல் ஆளுநர் மூலம் அடக்கி ஆள நினைக்கிறது.

 சபதம் சூளுரை

சபதம் சூளுரை

மாநில உரிமையை பேணி காத்து சரியான பதிலடி கொடுத்து வருகிறார் முதல்வர் ஸ்டாலின். இந்திய துணை கண்டத்தில் உள்ள தலைவர்கள் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் பாஜவை வீழ்த்த வியூகம் அமைக்க இருக்கிறார்கள். அந்த வியூகத்தின் முதல் தளபதியாக முதல்வர் ஸ்டாலின் தான் இருப்பார். தமிழகத்தில் ஏற்பட்ட ஒற்றுமை கூட்டணி போல், மத்தியிலும் கூட்டணியை தானே, முன்நின்று ஏற்படுத்திட வேண்டும் என்று அகில இந்திய தலைவர்கள் கலந்து கொள்ளும் அவரது பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் சூளுரையாக சபதம் ஏற்று, மத்தியில் ஆளும் பாஜவை விரட்ட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார் மூத்த தலைவர் கிருஷ்ணசாமி.

 நேஷனல் லீடர்ஸ்

நேஷனல் லீடர்ஸ்

நாளை மாலை 5 மணியளவில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் பிறந்தநாள் பொதுக்கூட்ட விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும் பீகார் மாநில துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் இந்த அறிக்கை மிக மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+