கும்பகோணம் மக்களுக்கு வந்தது குட்நியூஸ்.. இந்த 2 நாளையும் நோட் பண்ணுங்க முதல்ல.. தமிழக அரசு அதிரடி
சென்னை: வார இறுதி நாட்கள் நெருங்குகிறது.. விடுமுறைகளும் ஆரம்பமாகிறது.. இதையடுத்து, கும்பகோண மக்களுக்கு முக்கிய செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.
வழக்கமாக வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.. அதிலும், தென் மாவட்டங்களில், வார இறுதி நாட்களில் வெளியூர் செல்லவும், நகரங்களுக்கு பயணம் செய்யவும் பஸ்களில் கூட்ட நெரிசல் அதிகமாகவே இருக்கும்..
இந்த சிக்கலை போக்கவும், பொதுமக்களின் வசதிக்காகவும் வார இறுதிகளில் கூடுதல் பஸ்களை இயக்க அரசு போக்குவரத்து கழகம் திட்டமிட்டு வருகிறது.

கும்பகோணம்: கும்பகோணத்தில் வார இறுதி நாட்களான ஜூலை 8 மற்றும் ஜூலை 9ம் தேதிகளில் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சை, பட்டுக்கோட்டை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக கும்பகோணம் கோட்டத்தின் மேலாண் இயக்குநர் மோகன் அறிவித்துள்ளார்.
அறிவிப்பு: இதுகுறித்து செய்திக்குறிப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.. அந்த அறிவிப்பில், "கும்பகோணம் கோட்ட அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் வரும் ஜூலை 8-ம் மற்றும் 9-ம் தேதிகளில் வார விடுமுறையை முன்னிட்டு பொதுமக்களின் வசதிக்காகத் திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டிணம், திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களில் இருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

அதேபோல, சென்னையில் இருந்து திருச்சி, கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி, திருவாரூர், மயிலாடுதுறை, வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம் ஆகிய ஊர்களுக்கு 200 பேருந்துகளும், திருச்சியில் இருந்து கோயம்புத்தூர், திருப்பூர், மதுரை ஆகிய ஊர்களுக்கும், கோவை, திருப்பூர், மதுரை ஆகிய ஊர்களில் இருந்து திருச்சிக்கும், திருச்சியில் இருந்து காரைக்குடி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டிணம், வேளாங்கண்ணி ஆகிய ஊர்களுக்கு 100 பேருந்துகள் கூடுதலாக 7-ம் தேதி, 8-ம் தேதி என மொத்தம் 300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.
வார விடுமுறை: வார விடுமுறைக்கு வந்த பயணிகள் மறுபடியும் அவரவர் ஊர்களுக்கு திரும்ப சென்றிட வரும் 9, 10-ம் தேதிகளில் சென்னை தடத்தில் 200 சிறப்பு பஸ்களும், பிறத்தடங்களில் 100 சிறப்பு பஸ்களும் இயக்கப்படவுள்ளது. எனவே, பொதுமக்கள் அரசு சிறப்பு பேருந்துகளை பயன்படுத்திக்கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளார்
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications