Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'அபிராமி'யை ஞாபகம் இருக்கா.. கள்ளக்காதலுக்காக 2 குழந்தைகளை கொன்ற தாய்.. வெளியானது புது தகவல்

குன்றத்தூர் அபிராமி வழக்கில் விரைவில் தீர்ப்பு வரப் போகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெற்ற குழந்தைகளை பாலில் விஷம் வைத்தும், மூச்சை அடக்கியும் துடிதுடிக்க கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட அபிராமியை நினைவிருக்கிறதா? அந்த குன்றத்தூர் அபிராமிக்கு விரைவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.

2018-ல் நடந்த இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.. குன்றத்தூர் அபிராமி என்றாலே பிரபலம்..

விஜய் என்பவரின் மனைவிதான் அபிராமி.. 25 வயதாகிறது.. 7 மற்றும் 4 வயதில் ஒரு மகன், ஒரு மகள் இருந்தனர்.

 பிரியாணி கடை

பிரியாணி கடை

அபிராமிக்கும், பிரியாணி கடையில் வேலை செய்த சுந்தரம் என்ற இளைஞருக்கும் கள்ளக்காதல் உருவானது.. இது இரு வீட்டாருக்கும் தெரிந்து விட்டது.. இதையடுத்து, கள்ள ஜோடியை குடும்பத்தினர் கண்டித்தனர்.. ஆனாலும், கண்ணை மறைத்த கள்ளக்காதல், பெற்ற குழந்தைகள் 2 பேரையுமே கொலை செய்யும் அளவுக்கு துணிந்துவிட்டது.

சுந்தரம்

சுந்தரம்

விஜய், ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பும் ஏஜென்ட்டாக வேலை பார்ப்பவர்.. அபிராமிக்கு பிரியாணி என்றால் ரொம்ப பிடிக்குமாம்.. அதனால் அடிக்கடி ஆர்டர் செய்து சாப்பிட்டுள்ளார்.. அப்படித்தான் சுந்தரம் பழக்கமானார்.. மேலும் விஜய்க்கு அடிக்கடி நைட் டியூட்டி போட்டுவிடுவதால், இந்த ஜோடிக்கு மேலும் வசதியாகி விட்டது.. தங்கள் மகிழ்ச்சிக்கு கணவரும், குழந்தைகளும் இடையூறாக இருப்பதாக நினைத்துதான், கொலை வரை யோசித்தார் அபிராமி.

 பெண் குழந்தை

பெண் குழந்தை


3 பேரையும் கொன்றுவிட்டால்தான் நிம்மதியாக இருக்க முடியும் என்று சுந்தரம் சொன்னாராம்.. அதனால் பாலில் 5 தூக்க மாத்திரைகளை போட்டு குடும்பத்துக்கு தந்துள்ளார்.. விடிகாலையில் இறந்திருப்பார்கள் என்று நினைத்துள்ளார்.. ஆனால் மகன், கணவன் இருவருமே சாகவில்லை.. பெண் குழந்தை மட்டும் படுக்கையிலேயே வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தாள்... மறுநாள் விஜய் வேலைக்கு சென்றதும், 4 வயது மகனின் மூக்கையும், வாயையும் பொத்தி துடிதுடிக்க கொன்றார்...

கள்ளக்காதலன்

கள்ளக்காதலன்

மறுநாள் கள்ளக்காதலன் சுந்தரத்துடன் கிளம்பி கன்னியாகுமரிக்கு தப்ப பிளான் செய்திருந்தார்.. அதற்காக கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் தயாராக இருந்த அபிராமியை போலீசார் கைது செய்தனர். கள்ளக் காதலனுக்காக பெற்ற குழந்தைகளை ஈவிரக்கமே இல்லாமல் கொன்ற அபிராமியின் இந்த சம்பவம் மக்களை நிலைகுலைய செய்தது.. பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்தன..

 கோர்ட்

கோர்ட்

இது தொடர்பான வழக்கு செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றத்தில் 3 ஆண்டுகளாக நடைபெற்றும் வருகிறது.. இப்போதைக்கு புழல் சிறையில் அபிராமியும், மீனாட்சி சுந்தரமும் உள்ளனர்.. இவர்களை போலீசார் நேற்று செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.. அப்போது இருவருக்கும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் நீதிமன்றத்திற்கு அழைத்து வந்தனர்.. வழக்கில் அபிராமியின் உறவினர்கள் உட்பட 22-பேர் சாட்சியங்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்...

சாட்சியங்கள்

சாட்சியங்கள்

இதுவரை 21-பேரின் சாட்சியங்கள் நீதிமன்றத்தில் நிறைவேறியுள்ளது... எஞ்சியுள்ள ஒரே ஒரு சாட்சியின் மீது விசாரணையும், வழக்கின் மீதான வாதமும் மட்டுமே நடைபெற உள்ளது.. மற்றபடி அனைத்து தரப்பிலும் விசாரணை நடந்து முடிந்துள்ளது.. விரைவில், இந்த வழக்கும் நிறைவடைய போகிறது.. அபிராமி மீது குற்றம் நிரூபணமாகி உள்ளதால், அடுத்த சில நாட்களில் தீர்ப்பு வெளியாகலாம் என்கிறார்கள். சிறையில் இருக்கும்போது, அபிராமி மனம் வருந்தி, தப்பு பண்ணிட்டேன்.. என் குழந்தைகளை கொன்றிருக்க கூடாது.. அவங்க போட்டோவையாவது என்கிட்ட காட்டுங்க" என்று கதறி அழுதது நினைவிருக்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+