குப்பைமேனி தழை 400 நோய்களை தீர்க்குமே! குப்பையில் வளரும் ஆச்சரிய தங்கம்.. மூல நோயை விரட்டும் மூலிகை
சென்னை: இயற்கை அன்னை நமக்கு வழங்கிய அற்புதமான கொடைகளில் ஒன்று குப்பைமேனி தழைகள் ஆகும்... குப்பைகளில் தானாக வளரக்கூடியது என்பதால் இதற்கு இந்தப் பெயர் வந்தாலும், இது உண்மையில் உடலின் குப்பைகளை மேனியில் இருந்து அகற்றுவதால் "குப்பைமேனி" என்று அழைக்கப்படுகிறது. இதிலுள்ள மருத்துவ குணங்கள் காரணமாகவே இதனை "மூலிகை தங்கம்" என்று சித்த மருத்துவம் போற்றுகிறது... இதன் அருமை பெருமைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போமா!
சென்னை போன்ற பெருநகரங்கள் முதல் கிராமங்கள் வரை எளிதாகக் கிடைக்கக்கூடிய குப்பைமேனி செடியில் அகாலிபமைடு, காலிபோல் அஸிடேட், அகாலிபைன், டிரைஅஸிட்டோனமைன் மற்றும் கெம்பெரால் போன்ற அரிய வேதிப்பொருட்கள் நிறைந்துள்ளன. இவைதான் ஆஸ்துமா முதல் மூலநோய் வரை பல பிணிகளைத் தீர்க்கும் மருந்தாகச் செயல்படுகின்றன.

குப்பைமேனி தழைகள் நன்மைகள்
நம் உடம்பில் உள்ள நரம்பு மண்டலத்தை வலுப்படுத்துவதில் இந்த குப்பைமேனிக்கு நிகர் ஏதுமில்லை. இன்றைய காலகட்டத்தில் பலருக்கும் இருக்கும் முக்கியப் பிரச்சனை நரம்புத் தளர்ச்சி மற்றும் மூட்டு வலி என்றே சொல்லலாம்..
குப்பைமேனி இலைகளை தொடர்ந்து உணவில் சேர்த்து வருவதன் மூலம் நரம்புகள் பலமடைவதுடன், கால் வலி மற்றும் முழங்கால் வலி படிப்படியாக குறையும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும் ஆற்றல் கொண்ட இந்த இலையைத் தினமும் இரண்டு மிளகுடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.
குப்பைமேனி இலைகள் சத்துக்கள்
வயிற்றுப் புழுக்கள் மற்றும் குடல் கிருமிகளை வெளியேற்ற, இதன் இலைத் தூளை விளக்கெண்ணெயுடன் கலந்து உட்கொள்ளலாம். குழந்தைகளுக்கு வயிற்றுப் பூச்சித் தொல்லை இருந்தால், ஒரு ஸ்பூன் இலைச் சாறு தருவது உடனடி பலன் அளிக்கும்.
சுவாச பிரச்சனைகளுக்கும் இது ஒரு சிறந்த தீர்வாகும். நிமோனியா மற்றும் ஆஸ்துமா நோயாளிகளுக்கு இதன் சாறு ஆயுர்வேத முறையில் மருந்தாக வழங்கப்படுகிறது. தொண்டை வலி, தொண்டைக்கட்டு இருப்பவர்கள் இதன் சாற்றில் சிறிது சுண்ணாம்பு கலந்து தொண்டையில் பூசினால் சளி மற்றும் கோழை வெளியேறிவிடும்.
சரும பாதுகாப்பு ஆரோக்கியம்
இந்த இலைகளை உலர்த்திப் பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிடுவதும் சளித் தொல்லைக்குச் சிறந்த மருந்தாகும். மேலும், மூலநோய் மற்றும் ரத்த மூலத்தால் அவதிப்படுபவர்கள் குப்பைமேனி இலைகளுடன் சின்ன வெங்காயம் மற்றும் வாழைப்பூவைச் சேர்த்து அரைத்து மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் ரத்தப்போக்கு கட்டுக்குள் வந்து நோய் குணமாகும்.
சரும பாதுகாப்பில் குப்பைமேனிக்கு தனி இடமுண்டு. குறிப்பாக பெண்களுக்கு முகத்தில் வளரும் தேவையற்ற முடிகளை நீக்க, குப்பைமேனி இலையுடன் கஸ்தூரி மஞ்சளைச் சேர்த்துப் பூசி வந்தால் பூனை முடிகள் உதிர்ந்துவிடும்.
ஆஸ்துமா நோயாளிகளுக்கு பெஸ்ட் மருந்து
பாக்டீரியா மற்றும் பூஞ்சை தொற்றுகளை எதிர்க்கும் ஆற்றல் இதற்கு இருப்பதால், கல் உப்புடன் சேர்த்து அரைத்து உடலில் பூசிக் குளித்தால் சொறி, சிரங்கு நீங்கி சருமம் பொலிவு பெறும். தீக்காயங்கள் மற்றும் புண்கள் இருந்தால் மஞ்சளுடன் சேர்த்துப் பற்றுப் போடலாம். தலைவலிக்கு இதன் சாற்றை நெற்றியில் தடவினால் நிம்மதி கிடைக்கும்.
ஆனால் இத்தனை நன்மைகள் கொண்ட குப்பைமேனியை மருந்தாக உட்கொள்ளும் முன்பு, தகுந்த மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது பாதுகாப்பானது. குப்பையில் வளரும் இந்த மூலிகையைச் சரியாகப் பயன்படுத்தினால், அது நம் ஆரோக்கியத்திற்கும் வாழ்விற்கும் பெரும் செல்வமாக அமையும் என்பதில் ஐயமில்லை...!!
-
படக்குனு 10 கிராம் வாங்கி போடுங்க.. சட்டென மாறிய தங்க சந்தை! 6 மாதத்தில் இல்லாத சரிவு! சரியான நேரமா? -
ஆடிய ஆட்டமென்ன? தலைகீழான தங்கத்தின் தலையெழுத்து! கன் மாதிரி நிற்கும் டாலர்! தள்ளாடும் மார்க்கெட்! -
தங்கம் வாங்கி வச்சு இருக்கீங்களா? அடுத்த 1 வருடத்தில் நடக்க போகும் சம்பவம்! ராக்பெல்லர் ஷாக் கணிப்பு -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு!












Click it and Unblock the Notifications