குஷ்பூ இட்லி .. ஆறிப் போச்சு.. லேட்டஸ்ட் "மேட்டர்" என்னான்னா.. குஷ்பூ வாட்டர் தான்!
சென்னை : குஷ்பூவுக்கு கோயில் கட்டும் அளவிற்கு அவருக்கென பெரிய ரசிகர் கூட்டமே இருந்தது. நடிகைகளிலேயே முதலில் கோயில் கட்டப்பட்டது குஷ்பூவிற்கு தான். அந்த அளவிற்கு ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக இருந்தவர் குஷ்பூ.
கோயில் தான் கட்டினார்கள் என்றால், சாப்பிடும் உணவிற்கும் குஷ்பூ பெயரை தான் வைத்தார்கள். தென்னிந்திய உணவுகளில் பிரபலமானது இட்லி என்றால், காஞ்சிபுரம் இட்லியை ஓரங்கட்டி தமிழகத்தில் மிகவும் பிரபலமானது குஷ்பூ இட்லி.

குஷ்பூ வாட்டர்
இதன் அடுத்த கட்டமாக தற்போது குஷ்பூ வாட்டரையும் அறிமுகம் செய்து, பிரபலமாக்கி வருகின்றனர். ஆனால் இந்த முறை குஷ்பூ வாட்டரை பிரபலப்படுத்தியது அவரது ரசிகர்கள் இல்லை, பாஜக.,வினர். ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளராக குஷ்பூ போட்டியிடுவதால், அவருக்கு ஆதரவாக ஓட்டு சேகரிக்க தான் இந்த வாட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வாக்காளர்களை கவர புதிய ட்ரிக்
வேட்பாளருக்கு ஆதரவாக பிட் நோட்டீஸ் கொடுப்பது எல்லாம் பழைய ஸ்டைல் ஆகி விட்டது. நோட்டீசை வாங்கி கீழே போட்டு விடுவார்கள் என்பதால் வாக்காளர்களை கவர, வாட்டர் பாட்டிலில் குஷ்பூவிற்கு ஆதரவாக ஓட்டு கேட்டு ஸ்டிக்கர் ஒட்டி, அதனை வாக்காளர்களுக்கு வழங்கி வருகின்றனர்.

ஒரே கல்லில் ரெண்டு மாங்காய்
கோடை காலம் என்பதால் இலவசமாக தரும் வாட்டர் பாட்டிலை யாரும் வேண்டாம் என சொல்ல மாட்டார்கள். அதனால் மக்களிடம் நல்ல பெயர் வாங்க வாட்டர் பாட்டிலையும் கொடுத்த மாதிரியும் ஆச்சு, குஷ்பூ.,விற்கு ஓட்டு கேட்ட மாதிரியும் ஆச்சு என்பதால் இந்த புதிய யுக்தியை பாஜக கையில் எடுத்துள்ளது.

ஜர்க்கான அதிமுக
இதுவரை தமிழகம் முழுவதும் அம்மா வாட்டர் பாட்டில் தான் பிரபலப்படுத்தப்பட்டு வந்தது. தற்போது இதற்கு போட்டியாக வந்தது போல் பாஜக.,வினர் குஷ்பூ வாட்டரை அறிமுகம் செய்துள்ளதால் அதிமுக.,வினர் ஜர்க்காகி உள்ளனர். இருந்தாலும் கூட்டணி கட்சி வேட்பாளர் என்பதால் எதிர்ப்பு ஏதும் காட்டாமல், கண்டுகொள்ளாமல் விட்டுள்ளனர் அதிமுக.,வினர்.
-
கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்? -
சென்னையில் இன்று விளாசப் போகுது மழை.. நெல்லை, குமரி உள்பட 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்!












Click it and Unblock the Notifications