குத்தம்பாக்கம் புதிய பேருந்து நிலையம்.. என்னென்ன வசதிகள்.. யாருக்கெல்லாம் பயன் தெரியுமா?
சென்னை: கிளாம்பாக்கத்தைத் தொடர்ந்து பூவிருந்தவல்லியை அடுத்த குத்தம்பாக்கத்தில் இந்தாண்டு இறுதிக்குள் புதிய பேருந்து நிலையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெங்களூரு செல்லும் ஐ.டி. ஊழியர்களுக்கு இந்த பேருந்து நிலையம் உதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகரத்தின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பேருந்து போக்குவரத்தும், வாகன போக்குவரத்தும் அதிகரித்து வருகிறது. தென்மாவட்ட மக்களின் வசதிக்காக கிளாம்பாக்கம் பேருந்து முனையம் கட்டப்பட்டுள்ளது. மற்போது மேற்கு மாவட்டங்களுக்கும், பெங்களூரு செல்லும் மக்களுக்காகவும் குத்தம்பாக்கம் கிராமத்தில் பேருந்து முனையம் கட்டப்பட்டுள்ளது.

சுமார் 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை அருகே உள்ள குத்தம்பாக்கம் கிராமத்தில் புறநகர் பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. நிறைவடையும் தருவாயில் உள்ள அந்த கட்டுமானப் பணிகள் குறித்து பேசிய அமைச்சர் பி.கே.சேகர்பாபு, விரைவில் குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்படும் என்றார்.
திருமழிசை, குத்தம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படும் என தமிழக அரசு, கடந்த 2019ஆம் ஆண்டு அறிவித்தது. மேற்கு மாவட்டங்கள், கர்நாடகா, கேரளா மாநிலங்களில் இருந்து வரும் பேருந்துகளுக்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டது. மாநில வீட்டு வசதி வாரியத்தின் திருமழிசை துணை நகர திட்டத்தில் இருந்து 24.8 ஏக்கர் நிலம் பெறப்பட்டது.
இந்த நிலத்தில் 336 கோடி ரூபாயில் ஐந்து லட்சம் சதுர அடியில் புதிய பேருந்து நிலையம் கட்டும் பணிகள், கடந்த 2021- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கினர். குத்தம்பாக்கம் நிலையத்தில் புறநகர் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் மாநகர பேருந்துகள் என ஒரே நேரத்தில் 130 பேருந்துகளை நிறுத்தும் வசதி உள்ளது.

பேருந்து நிலையத்தின் கீழ் தளத்தில் 1,680 இருசக்கர வாகனங்கள், 235 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தும் வகையில் பார்க்கிங் வசதியும் வடிவமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. பயணியர் பயன்படுத்தும் வகையில் நான்கு லிப்டுகள், நகரும் படிக்கட்டுகள் ஆகியவையும் அமைக்கப்படவுள்ளன.
வைஃபை அனைத்து வசதிகளுடன் குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. பெங்களூரு செல்லும் ஐ.டி. ஊழியர்களுக்கு இந்த பேருந்து நிலையம் பேருதவியாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க! -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
அம்மாவை இழந்த அஜித்துக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல்.. ஒரு வரியில் சொன்ன நெகிழ்ச்சி வார்த்தை.. குவியும் பாராட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications