தமிழ்நாட்டில் அமைச்சர் குடும்பத்தினருக்கே பாதுகாப்பில்லாத சூழல்! எல்.முருகன் குற்றச்சாட்டு!
சென்னை: தமிழ்நாட்டில் அமைச்சரின் பேரன், பேத்தி நிம்மதியாக ஒரு சினிமா கூட பார்க்க முடியாத சூழல் நிலவுவதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
அண்மையில் ஜிகர்தண்டா படம் பார்க்கச் சென்ற அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மகன் மற்று பேரன் மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்திய நிலையில் எல்.முருகன் இந்தக் குற்றச்சாட்டை இப்போது முன் வைத்திருக்கிறார். செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதேபோல் சென்னையில் திமுக பிரமுகரின் மகன் கொலை செய்யப்பட்ட நிகழ்வையும் சுட்டிக்காட்டிய எல்.முருகன், திமுக ஆட்சியில் திமுகவினருக்கே பாதுகாப்பற்ற சூழல் தான் உள்ளது எனக் கூறியுள்ளார். சென்னையில் 5 சவரண் தங்கச் சங்கிலியை அணிந்துக்கொண்டு ஒரு பெண் தனியாக செல்ல முடியுமா என்றும் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது என்றும் எல்.முருகன் அடுக்கடுக்காக தமிழக அரசை குற்றஞ்சாட்டினார்.
தாம் எதையுமே மிகைப்படுத்திச் சொல்லவில்லை என்றும் குற்றச்செயல்களை தடுப்பதில் உளவுத்துறை தோல்வியடைந்து விட்டதாக தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் செயல்படுகிறாரா என்பதே கேள்விக்குறியாக இருப்பதாகவும் தமிழ்நாட்டில் எஸ்.சி./எஸ்.டி. மாணவர்கள் விடுதி மோசமான நிலையில் இருப்பதாகவும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். முதலமைச்சரே போய் பார்க்காவிட்டாலும் பரவாயில்லை, துறையின் அமைச்சரையாவது போய் எஸ்.சி./எஸ்.டி. மாணவர்கள் விடுதியை பார்க்கச் சொல்ல வேண்டும் என எல்.முருகன் கூறினார்
தன்னுடன் இரண்டு கிராமங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வர வேண்டும் என்றும் அங்கு ஒரே சுடுகாட்டில் அனைத்து சாதியை சேர்ந்தவர்களையும் அடக்கம் செய்ய கிராம மக்கள் ஒப்புக்கொண்டால் தமிழ்நாட்டில் சமூக நீதி ஆட்சி நடப்பதாக தாம் ஒப்புக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
கூட்டணி விவகாரத்தை பொறுத்தவரை தன்னால் தனிப்பட்ட முறையில் எந்தக் கருத்தும் சொல்ல முடியாது என்றும் தேசியத் தலைமை தங்களுக்கு என்ன அறிவுறுத்துகிறதோ அதன் படி செயல்படுவது தான் தங்களின் கடமை எனவும் அதிமுக -பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!











Click it and Unblock the Notifications