தொழிலாளர் தினமான நாளை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை.. தமிழக அரசு கடும் எச்சரிக்கை
சென்னை: தொழிலாளர் தினமான நாளை (மே 1) தமிழகத்தில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மீறி கடைகளில நாளை மதுபானங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
தமிழ்நாட்டில் மாநில வாணிபக் கழகமான டாஸ்மாக் நிறுவனத்தின்கீழ் மொத்தம் 5,329 டாஸ்மாக் கடைகள் இயங்கி வந்தன. இதன் மூலம் 2022-2023-ம் ஆண்டில் 44,098.56 கோடி ரூபாய் அரசுக்கு வருவாயாகக் கிடைத்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு சுமார் 500 டாஸ்மாக் கடைகள் மாநிலம் முழுவதும் மூடப்பட்டன. வியாபாரம் குறைவான கடைகள், கோயில், கல்வி நிறுவனங்கள் அருகிலிருக்கும் கடைகள், மக்களின் கோரிக்கையை ஏற்று சில கடைகள் என மொத்தம் 500 கடைகள் மூடப்பட்டதால் தற்போது 4800க்கும் அதிகமான டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன.

இதுதவிர தனியார் மதுபான பார்கள், நட்சத்திர ஓட்டல்களில் செயல்படும் பார்கள், பப்புகள் என தனியாக உள்ளன. இந்த மதுக்கடைகள் எல்லாம் வருடத்தில் சில முக்கியமான நாட்கள் மூடப்படுவது வழக்கம். அதாவது ஜனவரி 15, ஜனவரி 26, மே 1, வள்ளலார் தினம், சுதந்திர தினம், அக்டோபர 2 என கணிசமான நாட்கள் மூடப்படும். இது தவிர டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து மதுபானக்கடைகளுமே தேர்தல் சமயங்களில் மூடப்படும். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் மூடப்படும்.
அந்த வகையில் தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடந்த போது, ஏப்ரல் 17, 18, 19 ஆகிய மூன்று நாட்கள் மூடப்பட்டன. அடுத்ததாக வள்ளலார் தினத்தை முன்னிட்டு ஏப்ரல் 21ம் தேதியும் மூடப்பட்டது. இந்நிலையில் நாளை மே 1ம் தேதி தொழிலாளர் தினம் என்பதால் மதுக்கடைகள் மூடப்பட உள்ளது. இதுபற்றி மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர்.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், "உழைப்பின் மகத்துவத்தை உணர்த்தும் விதமாக தொழிலாளர் தினம் நாளை (புதன்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி அன்றைய தினம் தமிழகத்தின் அனைத்து மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து ஓட்டல்களில் உள்ள மதுபான பார்கள் மூடப்பட்டிருக்க வேண்டும். மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது. அதையும் மீறி விற்பனை செய்வது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
நட்சத்திர அந்தஸ்து ஓட்டலில் உள்ள மதுபான பார்கள் திறக்கப்பட்டு இருந்தாலும், பாரில் மதுபானம் விற்பனை செய்வது தெரிய வந்தாலும் உரிமங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைத்தல், ரத்து செய்தல் மற்றும் மதுக்கூட உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்." என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications