சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அரசு பள்ளி மாணவி நீட் தேர்வில் வெற்றி.. சாதித்த கூலித்தொழிலாளி மகள்.. உதவிய மருத்துவ மாணவர்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    நீட் தேர்வு தோல்வி.. அடுத்தடுத்து தற்கொலை செய்து கொள்ளும் மாணவிகள்- வீடியோ

    சென்னை: அரசு பள்ளி மாணவி சூர்யா லட்சுமி, நீட் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் அவரது மருத்துவர் கனவு நினைவாகி உள்ளது. தான் நீட் தேர்வில் பெற்றிபெற உதவிய கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

    நாடு முழுவதும் கடந்த மே மாதம் 5ம் தேதி எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புக்கான நீட் தேர்வு நடந்தது. இந்த தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியது. இதில் தமிழகத்தில் தேர்வு எழுதி எழுதிய ஒரு லட்சத்து 23 ஆயிரத்து 78 மாணவ மாணவியரில் 59 ஆயிரத்து 785 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட 9.01 சதவீதம் அதிகம் ஆகும். அதாவது 48.57 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    சென்னை போரூரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயின்ற மாணவி சூர்யா லட்சுமி. இவரது தந்தையின் பெயர் முத்துகிருஷ்ணன். இவர் போரூரில் உள்ள மாவு அரைக்கும் மில்லில் கூலி தொழிலாளி ஆவார். வறுமையின் கோரப்பிடியில் இருந்த சூர்யா லட்சுமிக்கு மருத்துவர் ஆக ஆசைப்பட்டுள்ளார். இவர் 12ம் வகுப்பில் 600க்கு 511 மதிப்பெண் எடுத்துள்ளார். இவர் கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரியில் மாணவ மாணவிகளின் உதவியுடன் நீட் தேர்வில் வெற்றி பெற்று தனது மருத்துவ கனவை நினைவாக்கி உள்ளார்.

    கீழ்ப்பாக்கம் மருத்துவ மாணவர்கள்

    கீழ்ப்பாக்கம் மருத்துவ மாணவர்கள்

    இது எப்படி சாத்தியம் ஆனது என்பதை இப்போது பார்ப்போம். கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள் மெடிகோ மென்டர் என்ற பெயரில் ஒரு அசோசியேன் வைத்துள்ளார்கள். அவர்கள் தங்களை போல் கஷ்டப்பட்டு படித்து மேலே வர ஆசைப்படும் மாணவ மாணவிளுக்கு தன்னம்பிக்கை அளித்து நீட் தேர்வில வெல்வதற்கான பயிற்சிகளை அளிக்க முடிவு செய்தனர்.

    40 நாள்கள் பயிற்சி

    40 நாள்கள் பயிற்சி

    இதன்படி தமிழகம் முழுவதும் அரசு பள்ளியில் மருத்துவர் ஆகும் கனவுடன் பயின்று வரும் 86 மாணவ மாணவிகளை தேர்வு செய்து அவர்களுக்கு 40 நாள்கள் நீட் தேர்வு பயிற்சியினை அளித்துள்ளனர் இதில் சூர்யா லட்சுமி உள்பட எந்த மாணவியரும் இதுவரை என்சிஆர்டி எனப்படும் சிபிஎஸ்இயின் புத்தகங்களை பார்த்தது கூட கிடையாது. எனினும் 40 நாள்கள் பயிற்சியினை கண்ணுக்கு கருத்துமாக மேற்கொண்டார். லட்சுமி உள்பட அனைவருக்கும் மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் சந்தேகங்களை தீர்த்து வைத்ததோடு, நிறைய விஷயங்களை சொல்லி கொடுத்தனர்.

    எம்பிபிஎஸ் கனவு நினைவானது

    எம்பிபிஎஸ் கனவு நினைவானது

    இதன் பயன் இப்போது தெரியவந்துள்ளது. நேற்று வெளியான தேர்வு முடிவினை பார்த்து மகிழ்ச்சியின் உச்சத்துக்கு சென்றார்.காரணம் நீட் தேர்வில் 720க்கு 368 மதிப்பெண் எடுத்து வெற்றி பெற்றுள்ளார் சூரயா லட்சுமீ .இதன் மூலம் அவரது எம்பிபிஎஸ் கனவு நினைவாகி உள்ளது.

    உருக்கமாக நன்றி

    உருக்கமாக நன்றி

    இது தொடர்பாக சூர்யா லட்சுமி கூறுகையில், கீழ்ப்பாக்கம் முருத்துவக் கல்லூரியில் உள்ள முதலாம் மற்றும் மற்றும் இரண்டாம் ஆண்டு மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் எனக்கு நிறைய தன்னம்பிக்கை கொடுத்தனர் எனக்கு ஏற்பட்ட பல சந்தேகங்களை அவர்களது நேரத்தை ஒதுக்கி தீர்த்து வைத்தனர். அனைத்து கேள்விகளும் என்சிஆர்டி புத்தகங்களில் இருந்தே வந்திருந்தது. மருத்துவ மாணவர்கள் அளித்த கோச்சிங் சிறப்பாக இருந்தது. இதனால் நான் சிறந்த மதிப்பெண் எடுத்து வெற்றி பெற முடிந்தது என்றார். மேலும் தனக்கு உதவிய மாணவ மாணவிகளுக்கு உருக்கமாக நன்றி தெரிவித்துள்ளார்.

    உதவிகள் அவசியம்

    உதவிகள் அவசியம்

    சகமாணவியரின் கஷ்டத்தை உணர்ந்து உதவிய கீழ்ப்பாக்கம் மருத்துவ கல்லூரி மாணவ மாணவிகள் நிச்சயம் பாராட்டுக்கு உரியவர்கள் தான். இப்படி ஒரு உதவிகள் வந்தால் நிச்சயம் தமிழகம் நீட் தேர்வில் நல்ல தொரு முன்னேற்றத்தை சந்திக்கும் என நம்பலாம்.

    English summary
    A daily labourer’s daughter who studied in a government school has cleared NEET, thanks to Kilpauk Medical College (KMC) Alumni Association
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X