சர்வேயர்கள் வர்றாங்க.. நிலத்தை இனி துல்லியமாக அளக்கலாம்.. நில அளவை துறையில் சபாஷ்.. அட 200 ரோவர்கள்
சென்னை: நில அளவை துறையின் சேவைகள் குறித்த புள்ளி விபரங்களை, இணைய வழியில், உடனுக்குடன் உயரதிகாரிகள் கண்காணிக்க வசதிகள் விரைவில் வரஉள்ள நிலையில், நில அளவீடு துறையில் மற்றொரு குட்நியூஸ் வெளியாகியிருக்கிறது. இதன்மூலம் நிலத்தை எளிதாக அளக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் சர்வேயர்கள்.
தமிழகத்தில் பட்டா மாறுதல், உட்பிரிவு செய்தல் தொடர்பான நில அளவை சேவையில், தரத்தை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் இன்று எழுந்துள்ளது. அதுமட்டுமல்ல, பல இடங்களில் பட்டா மாறுதல், உட்பிரிவு உருவாக்குவதில் நிலத்தின் எல்லைகள், பரப்பளவு போன்ற விபரங்களில் நிறைய பிழைகள் வருவதால், இவைகளையும் களைய வேண்டியிருக்கிறது.

எனவேதான், நில அளவை பணியில் தரக்கட்டுப்பாடு வழிமுறைகளை அமல்படுத்த, அரசு முடிவு செய்து, சர்வே எண், அதன் உட்பிரிவு எண்ணுக்கு உட்பட்ட நிலத்தின் அளவை, துல்லியமாக குறிப்பிட வேண்டும் என்று கூறியிருந்தது..
அதேபோல, நில அளவை வரைபட விற்பனை உள்ளிட்ட சேவைகளையும், இத்துறை மக்களுக்கு வழங்கி வருகிறது... இதற்காக, மாநில அளவில் தரக் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மையமும் அமைக்கப்படுவதாக சமீபத்தில் தகவல் வெளியானது.
சர்வேயர்கள்: சென்னையில், நில அளவை துறை வளாகத்தில், மையம் அமைக்கப்படும் என்றும் நில அளவை துறையின் சேவைகள் குறித்த புள்ளி விபரங்களை, இணைய வழியில், உடனுக்குடன் உயரதிகாரிகள் கண்காணிக்க வசதி செய்யப்படும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்திருந்த நிலையில், பொதுமக்கள் விண்ணப்பித்தவுடன் நில அளவை செய்து கொடுக்கும் அளவுக்கு, சர்வேயர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்று வருவாய் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனும் உறுதி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், நிலங்களை ஜிபிஎஸ் முறையில் துல்லியமாக அளக்க, 200 ரோவர் கருவிகள் வாங்க, நில அளவை துறை நடவடிக்கை எடுத்து உள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
நில அளவை துறை: நிலங்களை அளந்து, எல்லைகளை வரையறை செய்யும் பணிகளை, நில அளவை துறை மேற்கொண்டு வரும் நிலையில், வகைப்பாட்டுக்கு ஏற்ப நிலங்களை அளந்து, சர்வே எண் ஒதுக்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன..
இதில் பாரம்பரிய நடைமுறைகளுக்கு மாற்றாக, நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தவும் முடிவாகி உள்ளது.. இதன்மூலம், நிலத்தின் அளவு மற்றும் நிலம் எங்கிருக்கிறது என்பதையும், எங்கிருந்து வேண்டுமானாலும் அறிந்து கொள்ள, புதிய வசதிகள் கொண்டுவரப்பட்டுள்ளன.. அந்தவகையில், ரோவர் கருவிகள் பயன்படுத்தப்பட உள்ளன.. அதிக பரப்பளவு நிலங்களை மிக குறுகிய நேரத்தில் அளப்பதற்கு இந்த ரோவர் கருவிகள் பேருதவியாக இருக்கும் என நம்பப்படுகிறது.
முக்கியத்துவம்: கடந்த 2023ல், 150 ரோவர் கருவிகள் வாங்கப்பட்டிருந்த நிலையில், கூடுதலாக 200 ரோவர் கருவிகளை வாங்க, நில அளவை துறை முடிவு செய்துள்ளது. இந்த கருவிகளின் பயன்பாடு, முக்கியத்துவம் கருதி இந்த 200 ரோவர் கருவிகள் கூடுதலாக வாங்கப்பட உள்ளன.. ரோவர் கருவியின் மதிப்பு 5 லட்சம் ரூபாயாகும்.. எனவே, இந்த கருவிகளை வழங்குவதற்கான நிறுவனங்களை தேர்வு செய்யும் பணிகள் தற்போது நடந்து வருவதாக நில அளவீடு அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications